Published:Updated:

``இந்த சேகர் சொன்ன பேச்சை எந்த ஜாவாவும் கேக்கும்!" - ஒரு 'ஜாவா' மெக்கானிக்கின் கதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``இந்த சேகர் சொன்ன பேச்சை எந்த ஜாவாவும் கேக்கும்!" - ஒரு 'ஜாவா' மெக்கானிக்கின் கதை
``இந்த சேகர் சொன்ன பேச்சை எந்த ஜாவாவும் கேக்கும்!" - ஒரு 'ஜாவா' மெக்கானிக்கின் கதை

பைக்கை வாங்கிட்டு லாங் டிரைவ் போன பல வாடிக்கையாளருங்க, அவங்க பைக்குக்கு முத்தம் கொடுத்ததை எல்லாம் பார்த்திருக்கேன், அதுதான் நம்ம வேலைக்கு கெடச்ச மரியாதை... அங்கீகாரம்.

'ஜாவா'... பைக் ஆர்வலர்களையும், பைக் மெக்கானிக்குகளையும் காலரைத் தூக்கிவிட வைக்கும் இரண்டெழுத்து வார்த்தை; 1929-ம் ஆண்டில் செக் குடியரசு நாட்டில். 'Fore Ever Bike, Fore Ever Value' என்ற அடைமொழியுடன் சிப்பாய்களுக்கு எனப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு, பின் பொதுமக்களிடம் பிரபலமான பைக்தான் 'ஜாவா'. இந்தியாவில் 2-ஸ்ட்ரோக் பைக்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டப்பின் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஜாவா பைக்கை வாங்கத்துடிப்பவர்கள் பலர். இதனாலேயே அன்று ஆயிரங்களில் விற்கப்பட்ட ஜாவா பைக்குகள் இன்று பல லட்சம் ரூபாய்க்கு கிளாசிக் அந்தஸ்துடன் விற்கப்படுகிறது. 

ஜாவா நிறுவன வரலாறு:

மாடல் பி, யெஸ்டி ட்வின், டீலக்ஸ் ரோட்கிங், கிளாசிக் டாலர், மோனார்க், சி எல் 11 என 2 ஸ்ட்ரோக் இன்ஜின் - 2 எக்ஸாஸ்ட் பைப் உடன் 60சிசி, 175சிசி, 250சிசி, 350சிசி என்று பல இன்ஜின் திறன்களில் - பல வண்ணங்களில் - பல வடிவமைப்புகளில் - அதிகபட்சமாக 140 கிலோ எடையில், ஊரையே திரும்பிப் பார்க்க வைக்கும் தனித்துவமான சத்தத்தோடு ஜாவா வெளிவந்தது. 1960-ம் ஆண்டில் மைசூரைத் தலைமையிடமாகக் கொண்டு விற்பனைக்கு வந்து, இந்தியாவில் 'ராயல் என்பீல்டு' பைக்குகளுக்கு கடும் போட்டியாய் இருந்தது ஜாவா.

``இந்த சேகர் சொன்ன பேச்சை எந்த ஜாவாவும் கேக்கும்!" - ஒரு 'ஜாவா' மெக்கானிக்கின் கதை

சரி ஓகே... செக் குடியரசில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக்குக்கும், சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த மெக்கானிக் சேகர் என்பவருக்கும்  என்ன தொடர்பு? சேகர் எப்படி ஜாவா சேகர் ஆனார்? 

ஜாவா சேகரின் பின்னணி:

1968 முதல் 1996 வரை, சென்னையில் '...தோ போது பார் இங்கிலிஷ் வண்டி' என எல்லோராலும் கண்கள் விரியப் பார்க்கப்பட்ட வண்டிகள்தான் ஜாவா (செக் குடியரசு), எல்.டி லாம்ப்ரெட்டா (இத்தாலி), ராஜ்தூத் (போலந்து), ஸ்வேகா (பிரான்ஸ்), பாபி (ஜி.டி.எக்ஸ்); இவை திடீரென்று பழுதானால், அவற்றைச் சரிசெய்ய கைதேர்ந்த பைக் மெக்கானிக்குகள் அப்போது அதிகமாக கிடையாது. ஒருசில இடங்களில்தான் அதற்கென்று பிரத்யேகமான வொர்க் ஷாப்புகள் இருக்கும். இந்த வண்டிகளை  'டோ செய்வது' என்பது சிரமம். 

``இந்த சேகர் சொன்ன பேச்சை எந்த ஜாவாவும் கேக்கும்!" - ஒரு 'ஜாவா' மெக்கானிக்கின் கதை

அந்த நேரங்களில்தான் இப்படிப்பட்ட வண்டிகளைத் தள்ளுவதற்கென்றே ஆங்காங்கே சிறுவர் கூட்டங்கள் இருக்கும். 15 பைசா அல்லது 20 பைசா கொடுத்தால், அச்சிறுவர்கள் வண்டிகளைத் தள்ளி வொர்க் ஷாப்புக்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள். அப்படி ஒருமுறை அம்பத்தூரில் இருந்து ராயப்பேட்டை வரைக்கும், ஜாவாவை தள்ளிக்கொண்டு வந்து, அதில் கிடைத்த 20 பைசாவுக்கு கடலைப்பருப்பு, ராகிமால்ட் வாங்கிச் சாப்பிட்ட சிறுவர்களில் ஒருவர்தான் இந்த சேகர்.

``இந்த சேகர் சொன்ன பேச்சை எந்த ஜாவாவும் கேக்கும்!" - ஒரு 'ஜாவா' மெக்கானிக்கின் கதை

அந்த சேகர்தான் இன்று சென்னை, மைசூர், பெங்களூர் எனப்பல இடங்களில் `ஜாவா பைக் ஸ்பெஷலிஸ்ட்' என்று பெயர் வாங்கி உள்ளார். 

``இந்த சேகர் சொன்ன பேச்சை எந்த ஜாவாவும் கேக்கும்!" - ஒரு 'ஜாவா' மெக்கானிக்கின் கதை

படிப்பறிவு இல்லையென்றாலும், பல தொழிற்சாலைகளில் வேலை நுணுக்கங்களைக் கற்று, பயிற்சி சான்றிதழ்களைப் பெற்ற சேகர், 1984-ம் ஆண்டு ராயப்பேட்டையில், தனது சொந்த முயற்சியில்  முதல் கடையைத் திறந்தார். அனைத்து இருசக்கர வாகனங்களை பழுது பார்த்தாலும், ஜாவா என்றால் சேகருக்கு தனிஆர்வம். கிட்டத்தட்ட 40 வருட மெக்கானிக் அனுபவம் மட்டும் வாய்த்த சேகருக்கு, இப்போது வயது 50! தற்போது  இவரின் ஜாவா வொர்க் ஷாப், சென்னை கிருஷ்ணாம்பேட்டை கஜபதி தெருவில் இருக்கிறது. பெயர் பலகை, ஆடம்பரம் ஏதும் இல்லாமல் இருக்கிறது சேகரின் வொர்க் ஷாப்.

``இந்த சேகர் சொன்ன பேச்சை எந்த ஜாவாவும் கேக்கும்!" - ஒரு 'ஜாவா' மெக்கானிக்கின் கதை

என்ன சொல்கிறார் ஜாவா சேகர் ?

'சின்ன வயசுல இருந்தே, எனக்கு பைக்குங்க மேல அவ்ளோ ஆசை. ஜாவா பைக் சத்தம் நெறைய பேருக்கு எரிச்சல் கொடுக்கும்.ஆனா, ஜாவாவோட சவுண்ட் பீட் எனக்கு எப்பவுமே எனர்ஜி பீட் தான். அந்த பீட்லயே  மகாபலிபுரம், திருப்பதின்னு ஜாலியா சுத்திட்டு டீ சாப்பிட்டு வருவேன். சிலசமயம் நடுராத்திரி கூடத் தனியா  கிளம்பிருவேன். ஜாவால நெறைய ப்ளஸ் பாயின்ட் இருக்கு. கிக்கர், கியர் எல்லாமே ஒரே லிவர்தான். ஒரே சைஸ் என்பதால், முன்னாடி பின்னாடி டயர்களை மாத்தி மாத்தி போட்டுக்கலாம். க்ளட்ச் ஒயர் அறுந்தாலும் பிரச்னை இல்லை. 

``இந்த சேகர் சொன்ன பேச்சை எந்த ஜாவாவும் கேக்கும்!" - ஒரு 'ஜாவா' மெக்கானிக்கின் கதை

இப்போ இருக்குற பைக்குங்க மாதிரிலாம் சொகுசா செல்ஃப் ஸ்டார்ட் போட்டு இந்த பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியாது. கிக் ஸ்டார்ட்தான் பண்ண முடியும். அதனாலயே ஜாவாவை ஹேண்டில் பண்றது உடற்பயிற்சி மாதிரிதான். இந்த பைக்கை ஓட்டிட்டா, மத்த வண்டிகளை எல்லாம் ஓட்டப்  பிடிக்காது. இந்த பைக்கை நாங்க 'குதிரைன்னு' செல்லமா சொல்லுவோம். ஆரம்பத்துல எல்லா பைக்கையும் சரி செஞ்சுட்டு இருந்தேன். போகப்போக ஜாவா பைக்குங்க ரொம்ப குறைய ஆரம்பிச்சு, நிறைய கயலாங் கடைகளுக்கு போயிருச்சு. அதனாலேயே முழுக்க முழுக்க ஜாவா மேல கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன்.

``இந்த சேகர் சொன்ன பேச்சை எந்த ஜாவாவும் கேக்கும்!" - ஒரு 'ஜாவா' மெக்கானிக்கின் கதை

நம்ம வீட்ல இருக்குற பழைய சைக்கிள்கூட, கொஞ்சம் வருஷம் கழிச்சு ஒரு பொக்கிஷம்தான். அதே மாதிரிதான் இந்த ஜாவா பைக்குகளும். இப்போ சென்னைல மட்டும் மொத்தமா 200 ஜாவா இருக்கும். அதனாலயே அதோட விலையும் லட்சங்கள்ல போயிட்டு இருக்கு. இந்த பைக்கு வச்சிருக்கவுங்களும் அத யாருக்கும் விக்கறது இல்ல. முன்னாடிலாம் பெங்களூர் போய்தான் வண்டிக்கு ஸ்பேர் வாங்கணும்; ஆனால், இப்போ சென்னையிலேயே எல்லா ஸ்பேரும் ஈஸியா கிடைக்குது.

``இந்த சேகர் சொன்ன பேச்சை எந்த ஜாவாவும் கேக்கும்!" - ஒரு 'ஜாவா' மெக்கானிக்கின் கதை

சின்னச்சின்ன வேலை, புதுசா அசம்பிள் பண்றதுன்னு இப்போதைக்கு என்கிட்ட மட்டும் 1963-க்கு பின்னாடி வந்த ஜாவா பைக்குங்க கிட்டத்தட்ட 70 இருக்கும். இதுனால மத்த பைக் வேலைகளை என்னால கவனிக்க முடியல. முன்னாடிலாம் ஒரே நாள்ல ஒரு வண்டியை அசம்பிள் பண்ணி முடிப்பேன். நான் மட்டுமே ஜாவா பைக்கை கூடவே இருந்து வேலைப் பாக்கணும்னு நினைப்பேன். அதனால லேட் ஆனாலும், நம்ம வேலை பக்காவா இருக்கும்.

``இந்த சேகர் சொன்ன பேச்சை எந்த ஜாவாவும் கேக்கும்!" - ஒரு 'ஜாவா' மெக்கானிக்கின் கதை

பைக்கை வாங்கிட்டு லாங் டிரைவ் போன பல கஸ்டமர்ஸ், அவங்க பைக்குக்கு முத்தம் கொடுப்பதை எல்லாம் பார்த்திருக்கேன், அதுதான் நம்ம வேலைக்கு கிடைக்கிற மரியாதை'' என்கிறார் சேகர்.

ROARING RIDERS (ஜாவா) CLUB:

ஜாவாவை பழுது பார்க்க, வண்டியின் பாகங்களைக் கொண்ட வரைபடம் ஒன்றை, ஜாவா கம்பெனி அப்போது வெளியிட்டு இருந்தது. அந்த வரைபடத்தை இன்னும் சேகர் வைத்திருக்கிறார்! தவிர ஜாவா பற்றிய பல தகவல்களையும் சேகரித்து வைத்திருக்கிறார். 

``இந்த சேகர் சொன்ன பேச்சை எந்த ஜாவாவும் கேக்கும்!" - ஒரு 'ஜாவா' மெக்கானிக்கின் கதை
``இந்த சேகர் சொன்ன பேச்சை எந்த ஜாவாவும் கேக்கும்!" - ஒரு 'ஜாவா' மெக்கானிக்கின் கதை
``இந்த சேகர் சொன்ன பேச்சை எந்த ஜாவாவும் கேக்கும்!" - ஒரு 'ஜாவா' மெக்கானிக்கின் கதை
``இந்த சேகர் சொன்ன பேச்சை எந்த ஜாவாவும் கேக்கும்!" - ஒரு 'ஜாவா' மெக்கானிக்கின் கதை

'சொல்ல மறந்துட்டேன் 2019-ல மகேந்திரா கம்பெனி நம்ம குதிரையத் திரும்ப இந்தியாவுக்கு கொண்டு வரப் போறாங்க தெரியுமா?' என்று சந்தோசமாக ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு. ஒரு ஜாவா ட்வின் வண்டியில் அமர்ந்து புகைப்படத்துக்கு சைலன்ட்டாக போஸ் கொடுத்தார். 'ண்ணா... என்னணா நீ! உன் கெத்து உனக்கே தெரில, நல்லா போஸ் கொடுணா...' என்று ஏரியாவில் வழிப்போக்கர் ஒருவர் சொல்ல, சிரித்துக்கொண்டே நெஞ்சை நிமிர்த்தி  உட்கார்ந்தார் ஜாவா சேகர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு