Published:Updated:

2018 ரெனோ க்விட் மற்றும் 2018 ஹீரோ கரிஸ்மா ZMR பைக்கில் என்ன ஸ்பெஷல்?

2018 ரெனோ க்விட் மற்றும் 2018 ஹீரோ கரிஸ்மா ZMR பைக்கில் என்ன ஸ்பெஷல்?
News
2018 ரெனோ க்விட் மற்றும் 2018 ஹீரோ கரிஸ்மா ZMR பைக்கில் என்ன ஸ்பெஷல்?

கூடுதல் வசதிகள் அதே விலையில் கிடைப்பது ப்ளஸ் என்றாலும், Passenger காற்றுப்பை - ஏபிஎஸ் - பின்பக்க பவர் விண்டோ ஆகியவற்றை க்விட்டில் வழங்கியிருக்கலாமே ரெனோ?

ந்தக் கட்டுரையின் தலைப்பில் இடம்பெற்றிருக்கும் கார் மற்றும் பைக் இரண்டுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. ஆனால், இரண்டுமே சமீபத்தில் ஃபேஸ்லிஃப்ட் ஆகி வந்திருக்கும் வாகனங்கள் என்பது கவனிக்கத்தக்கது. கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற `2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ'வில் வழக்கமான க்விட் சீரிஸுடன் அதன் ஸ்பெஷல் எடிஷன்களையும் காட்சிப்படுத்தியது. என்றாலும், இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலையோ அல்லது அது பற்றிய விவரங்களையோ தெரிவிக்கவில்லை. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தைப் பொறுத்தவரை, தனது புதிய 125சிசி ஸ்கூட்டர்கள் (மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட்) மற்றும் 200சிசி பைக்குகளுடன் (எக்ஸ்-பல்ஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம்), சத்தமில்லாமல் கரிஸ்மா ZMR பைக்கையும் நிறுத்தியிருந்தது. அப்போதே இந்த பைக்கின் மறு அறிமுகம் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

2018 ரெனோ க்விட்

காரின் வெளிப்புறத்தில் க்ரோம் வேலைப்பாடுகளுடன்கூடிய புதிய கிரில், கறுப்பு நிற வீல் கேப்ஸ், பக்கவாட்டுப் பகுதியில் புதிய கிராஃபிக்ஸ், ரிவர்ஸ் கேமரா ஆகியவற்றைத் தாண்டி, எந்த மாற்றமும் இல்லை. இதுவே உட்புறத்தில் க்ரோம் வேலைப்பாடுகளுடன்கூடிய கியர் லீவர் மற்றும் சென்டர் கன்சோல், One Touch Lane Change இண்டிகேட்டர், பின்பக்க இருக்கைக்கான 12V பாயின்ட் மற்றும் ELR சீட் பெல்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. க்விட் க்ளைம்பரில் பின்பக்க சென்டர் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் க்விட் AMT மாடலில் Creep வசதியும் பிரத்யேகமாக வழங்கப்பட்டிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முன்னே சொன்ன அம்சங்கள் எல்லாமே, அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்டாண்டர்டு கிடையாது என்பதை நினைவில்கொள்ளவும். சென்னை எக்ஸ் ஷோரூம் விலையான 2.78 லட்சம் - 4.76 லட்சம் ரூபாய்க்கு, 6 கலர்கள் - 8 வேரியன்ட்கள் - 4 வருடம்/1 லட்சம் கிமீ வாரன்ட்டி மற்றும் இலவச RSA உடன் க்விட்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடலைக் களமிறக்கியுள்ளது ரெனோ. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கூடுதல் வசதிகள் அதே விலையில் கிடைப்பது ப்ளஸ் என்றாலும், Passenger காற்றுப்பை - ஏபிஎஸ் - பின்பக்க பவர் விண்டோ ஆகியவற்றை க்விட் ஃபேஸ்லிஃப்ட்டில் வழங்கியிருக்கலாமே ரெனோ!

2018 ஹீரோ கரிஸ்மா ZMR

2 வேரியன்ட் மற்றும் 3 கலர் ஆப்ஷன்களில், கரிஸ்மா ZMR பைக்கின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது ஹீரோ. சென்னை எக்ஸ் ஷோரூம் விலையான 1.08 லட்சம் - 1.11 லட்சம் ரூபாய்க்கு வெளிவந்திருக்கும் இந்த பைக்கில் புதிய டூயல் டோன் கலர் ஆப்ஷன் (மஞ்சள் - கறுப்பு) மற்றும் BS-IV இன்ஜினைத் தாண்டி, எந்த வித்தியாசமும் இல்லை. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இந்த பைக்கின் விற்பனையை இந்தியாவில் நிறுத்திய ஹீரோ, இதே ஃபேஸ்லிஃப்ட் மாடலை உலகச் சந்தைகளுக்கு ஏற்கெனவே ஏற்றுமதி செய்துகொண்டிருந்தது.

தற்போது 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இதன் ரசிகர்கள் வைத்த வேண்டுகோளுக்கிணங்க, BS-IV இன்ஜினுடன்கூடிய கரிஸ்மா ZMR பைக்கை மீண்டும் விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது ஹீரோ. இந்த நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 200R பைக்குடன் ஒப்பிடும்போது அதிக பவர் மற்றும் டார்க் (20bhp & 1.97kgm)- ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் - பெரிய பெட்ரோல் டேங்க் (15.3 லிட்டர்) ஆகியவை இங்கே இருந்தாலும், ஏபிஎஸ்ஸை ஆப்ஷனலாகவாவது அளித்திருக்கலாமே ஹீரோ! தவிர, கரிஸ்மா ZMR பைக்கின் சென்னை எக்ஸ் ஷோரூம் விலையே, இதன் பிரதான போட்டியாளரான பஜாஜ் பல்ஸர் 220F பைக்கின் சென்னை ஆன்ரோடு விலையைவிட அதிகம்!