Published:Updated:

2019 ஃபோர்டு எண்டேவர் பேஸ்லிஃப்ட் மாடலின் புக்கிங் தொடங்கியது!

புதிய க்ரில்லுடன் கூடிய முன்பக்க பம்பர், மேம்படுத்தப்பட்ட ஹெட்லைட்ஸ், 18 இன்ச் டயமண்ட் கட் அலாய் வீல்கள், HandsFree டெயில்கேட் ஆகியவை வெளிப்புற மாற்றங்கள் ஆகும்.

2019 ஃபோர்டு எண்டேவர் பேஸ்லிஃப்ட் மாடலின் புக்கிங் தொடங்கியது!
2019 ஃபோர்டு எண்டேவர் பேஸ்லிஃப்ட் மாடலின் புக்கிங் தொடங்கியது!

இசுஸூ MU-X பேஸ்லிஃப்ட் மற்றும் புதிய மஹிந்திரா ஆல்ட்டுராஸ் G4 ஆகிய XL சைஸ் எஸ்யூவிகளின் போட்டியைச் சமாளிக்கும் விதமாக, எண்டேவரின் பேஸ்லிஃப்ட் மாடலைக் களமிறக்க முடிவெடுத்திருக்கிறது ஃபோர்டு. இந்த நிறுவன டீலர்களில் 1 லட்ச ரூபாயைச் செலுத்தி, காரை புக் செய்யலாம் எனத் தகவல் வந்திருக்கிறது. பிப்ரவரி 22, 2019-ல் அறிமுகமாக இருக்கும் எண்டேவர் பேஸ்லிஃப்ட் மாடலின் டெலிவரிகள் அன்றே ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணியை எண்டேவரில் மறுபடியும் கொண்டுவரவுள்ளது ஃபோர்டு. எனவே, தற்போதைய மாடலைவிட இதன் ஆரம்ப விலையைக் குறைவாக நிர்ணயிக்க முடியும் என்பதுடன், மேனுவல் கியர்பாக்ஸ் - 4WD அமைப்பு வேண்டும் என்பவர்களுக்கான ஆப்ஷனாகவும் இது இருக்கும்.

காரில் மாற்றங்கள் என்னென்ன?

புதிய க்ரில்லுடன் கூடிய முன்பக்க பம்பர், மேம்படுத்தப்பட்ட ஹெட்லைட்ஸ், 18 இன்ச் டயமண்ட் கட் அலாய் வீல்கள், HandsFree டெயில்கேட் ஆகியவை வெளிப்புற மாற்றங்கள் ஆகும். டூயல் டோன் கேபினில் தொடுவதற்கு மென்மையான ப்ளாஸ்டிக்ஸ், க்ரோம் வேலைப்பாடுகள், Backlit பட்டன்கள், டச் ஸ்க்ரீன் சிஸ்டத்தில் Sync3 - ஆப்பிள் கார் ப்ளே - ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய கனெக்ட்டிவிட்டி ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்து வேரியன்ட்டிலும் புஷ் பட்டன் ஸ்டார்ட் கட்டாயமாக்கப்படும் என நம்பலாம்.

சர்வதேச மாடலில் BS-6 மாசு விதிகளுக்கு ஏற்றபடியான 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் - 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் செட்-அப் (சிங்கிள் டர்போ: 180bhp/42kgm; ட்வின் டர்போ: 213bhp/50kgm) பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தவிர 20 இன்ச் அலாய் வீல்களும் உள்ளன. ஆனால் இந்திய மாடலில், தற்போதைய மாடலில் இருக்கும் அதே 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்களே தொடரும். 3.2 லிட்டர் மாடலில் 4 வீல் டிரைவ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தொடரும்.