Published:Updated:

ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா?

ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா?
ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா?

இந்திய பைக் சந்தையின் 300-500சிசி பிரிவில் கணிசமான சந்தை மதிப்பைக் கொண்டிருக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், 15 மாடல்களை விற்பனை செய்துவருகிறது. அதில் இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்ட்டல் GT650 தவிர மற்ற மாடல்களின் விலையை 1,500 வரை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. புதிய விலைகள், இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்தே ராயல் என்ஃபீல்டு டீலர்களில் அமலுக்கு வந்துவிட்டன. தொடர்ச்சியாக அதிகரித்துவரும் உற்பத்திச் செலவுகள் இதற்கான காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜனவரி 2019 மாதத்தில் 70,872 பைக்குகளை இந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்தது. இது கடந்தாண்டை விட 7% குறைவு என்றாலும், இதே மாதத்தில் பைக்குகளின் ஏற்றுமதி 9% உயர்ந்து 1,829 என்றளவில் இருந்தது. ஏப்ரல் 1, 2019 முதலாகப் பயன்பாட்டுக்கு வரவிருக்கும் புதிய விதிகளைக் கருத்தில் கொண்டு, புல்லட் 350 பைக்கைத் தவிர அனைத்து மாடல்களிலும் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியைச் சேர்க்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் க்ளாஸிக் 350/500 பைக்கை அடிப்படையாகக் கொண்டு, Trails எனும் ஸ்க்ராம்ப்ளர் பாணியிலான பைக்கை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தும் எனத் தெரிகிறது. (எக்ஸ்-ஷோரூம்) விலை உயர்வு பட்டியல் இதோ!

Bullet 350 STD - 1,17,660 ரூபாய்
Bullet 350 ES - 1,33,964 ரூபாய்
Bullet 500 ABS - 1,88,141 ரூபாய்
Classic 350 Redditch ABS - 1,53,245 ரூபாய்
Classic 350 Gunmetal grey ABS - 1,55,082 ரூபாய்
Classic 500 ABS - 2,01,315 ரூபாய்
Classic 500 Chrome ABS - 2,11,817 ரூபாய்
Thunderbird 350 ABS - 1.56 லட்சம் ரூபாய்
Thunderbird 500 ABS - 2,06,645 ரூபாய்
Thunderbird 350X ABS - 1,63,346 ரூபாய்
Thunderbird 500X ABS - 2,14,516 ரூபாய்
Himalayan ABS - 1,80,289 ரூபாய்
Himalayan Sleet ABS - 1,82,125 ரூபாய்