Published:Updated:

பல்ஸர் மற்றும் அப்பாச்சிக்குப் போட்டி... யமஹா MT-15 பைக்கில் என்ன ஸ்பெஷல்?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பல்ஸர் மற்றும் அப்பாச்சிக்குப் போட்டி... யமஹா MT-15 பைக்கில் என்ன ஸ்பெஷல்?!
பல்ஸர் மற்றும் அப்பாச்சிக்குப் போட்டி... யமஹா MT-15 பைக்கில் என்ன ஸ்பெஷல்?!

பல்ஸர் மற்றும் அப்பாச்சிக்குப் போட்டி... யமஹா MT-15 பைக்கில் என்ன ஸ்பெஷல்?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

MT-15.... கடந்தாண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான YZF-R15 V3.0 பைக்கின் நேக்கட் ஸ்ட்ரீட் வெர்ஷன்தான் இது! இந்த பைக்கை, மார்ச் 15, 2019 அன்று, டெல்லியில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் அறிமுகப்படுத்த இருக்கிறது யமஹா. நம் ஊர் சாலைகளில் டெஸ்ட்டிங்கில் இருந்த படங்கள் வெளியான நிலையில், தற்போது பைக்கின் படங்கள் இணைய உலகில் பரவிவருகிறது. அதன்படி சர்வதேச மாடலைப் போலவே, Matte கறுப்பு - நீலம் கலர் காம்பினேஷனில் இந்திய MT-15 கிடைக்கும்.

ஆனால், சர்வதேச பைக்கின் அலாய் வீல்கள் Fully Fluorescent மஞ்சள் நிறத்தில் இருந்தால், இந்திய பைக்கின் அலாய் வீல்களில் Fluorescent மஞ்சள் நிறத்தில் Rim Tape மட்டுமே உள்ளன. இதுதவிர க்ரே (ஆரஞ்ச் Rim Tape), நீலம் (நீல Rim Tape), கறுப்பு (All Black Finish) ஆகிய நிறங்களில் பைக் கிடைக்கும் எனத் தெரிகிறது. ஹேண்டில்பார், டிஸ்க் பிரேக்ஸ், டயர்கள், அலாய் வீல்கள், ஸ்விட்ச்கள், சஸ்பென்ஷன் என  FZ-25 பைக்கிலிருந்து சில பாகங்கள், இந்த பைக்குக்கு இடம் மாறியிருக்கிறது.

சில யமஹா டீலர்களில், MT-15 பைக்குக்கான அதிகாரபூர்வமற்ற புக்கிங் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இந்தியாவின் விலை அதிகமான நேக்கட் ஸ்ட்ரீட் 150சிசி பைக்காக இருக்கப்போகும் இதில், YZF-R15 V3.0 போலவே டூயல் சேனல் ஏபிஎஸ் இருக்கும் என்பது ப்ளஸ். LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட், டிஜிட்டல் மீட்டர் - டியூப்லெஸ் டயர்கள், டெல்டா பாக்ஸ் ஃப்ரேம் - மோனோஷாக் சஸ்பென்ஷன், சிங்கிள் பீஸ் சீட் மற்றும் ஹேண்டில்பார், அலாய் ஃபுட் பெக்ஸ் - பின்பக்க Tyre Hugger எனத் தேவையான அம்சங்கள் MT-15 பைக்கில் இருக்கின்றன.

CMVR (Central Motor Vehicle Rules) வழங்கிய `Type Approval Certificate’ படி - 2,020மிமீ/800மிமீ/1,070மிமீ அளவுகளைக் (நீளம்/அகலம்/உயரம்) கொண்டிருக்கும் இந்த நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 160மிமீ மற்றும் வீல்பேஸ் 1,335மிமீ. மேலும் இதன் Gross Vehicle Weight (GVW) 288 கிலோ என்பதை வைத்துப் பார்க்கும்போது, MT-15 பைக்கின் எடை 138 கிலோவாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். 

YZF-R15 V3.0 பைக்கின் அதே 155சிசி இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான், MT-15 பைக்கிலும் இடம்பெறும். எனவே 19.3bhp@10,000rpm பவர் மற்றும் 1.47kgm@8,500rpm டார்க்கில் மாற்றமிருக்காது. VVA (Variable Valve Actuation) தொழில்நுட்பம் - ஸ்லிப்பர் க்ளட்ச் ஆகியவை தொடரும். ஆனால் MT-15 பைக்கின் விலையைக் குறைவான நிர்ணயிக்கும் பொருட்டு, சில மாற்றங்களைச் செய்திருக்கிறது யமஹா. சர்வதேச மாடலில் USD ஃபோர்க் - Cast அலுமினிய ஸ்விங்ஆர்ம் - IRC டயர்கள் இருந்த நிலையில், இந்திய மாடலில் இருப்பதோ டெலிஸ்கோபிக் ஃபோர்க் - Box-Section ஸ்விங்ஆர்ம் - MRF டயர்கள்தான்.

YZF-R15S பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையில் (1.17 லட்சம்), இந்த நேக்கட் ஸ்ட்ரீட் பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஏறக்குறைய இதே விலையில் கிடைக்கக்கூடிய கேடிஎம் டியூக் 125 (1.18 லட்சம்) தவிர பஜாஜ் பல்ஸர் 200NS ABS (1.12 லட்சம்), டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V 2.0 ABS (1.11 லட்சம்) ஆகிய பைக்குகளுடனும் போட்டி போடுகிறது யமஹா MT-15. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு