Published:Updated:

ஆல்ஃபா... லேட்டஸ்ட் டாடா கார்களுக்கான புதிய ப்ளாட்ஃபார்மில் என்ன ஸ்பெஷல்?

ஆல்ஃபா ப்ளாட்ஃபார்மின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், அது ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களைத் தயாரிக்க முடியும் என்பதுதான்!

ஆல்ஃபா... லேட்டஸ்ட் டாடா கார்களுக்கான புதிய ப்ளாட்ஃபார்மில் என்ன ஸ்பெஷல்?
ஆல்ஃபா... லேட்டஸ்ட் டாடா கார்களுக்கான புதிய ப்ளாட்ஃபார்மில் என்ன ஸ்பெஷல்?

45X-ல் இருந்து ஆல்ட்ரோஸ் ஆகப் பெயர் மாற்றம்கண்ட டாடாவின் ப்ரிமியம் ஹேட்ச்பேக் பற்றி பார்த்துவிட்டோம். நாளை துவங்கும் ஜெனிவா மோட்டார் ஷோ - 2019ல் காட்சிப்படுத்தப்பட இருக்கும் இந்தக் காரின் பெயர், கடற்பறவையான Albatross-ல் இருந்து பெறப்பட்டது. இந்நிலையில், ஆல்ட்ரோஸ் தயாரிக்கப்பட உள்ள ஆல்ஃபா ப்ளாட்ஃபார்ம் பற்றிப் பார்ப்போம். ALFA என்றால் Agile - Light - Flexible - Advanced என இதற்கு விளக்கம் தருகிறது டாடா. இதில், இந்த நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் கார்கள் உற்பத்திசெய்யப்படும் எனத் தெரிகிறது.

ஆல்ட்ரோஸ்தான், ஆல்ஃபா ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட இருக்கும் முதல் கார். Fully Scalable Architecture வகையைச் சேர்ந்த இதில், பல்வேறு விதமான கார்களைத் தயாரிக்க முடியும் எனத் தகவல் வந்திருக்கிறது. சிறிய பட்ஜெட் ஹேட்ச்பேக், பெரிய ப்ரிமியம் ஹேட்ச்பேக், செடான், எம்பிவி, எஸ்யூவி எனப் பட்டியல் நீள்கிறது. இதில்தான் ஆல்ட்ரோஸ், ஆல்ட்ரோஸ் EV, Hornbill (X445) மைக்ரோ எஸ்யூவி, Blackbird (H4) அடக்கம் என்பதுடன், இவை அனைத்தும் ஜெனிவா மோட்டார் ஷோ - 2019ல் வெளியாக இருக்கிறது.

ஆல்ஃபா ப்ளாட்ஃபார்மின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், அது ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களைத் தயாரிக்க முடியும் என்பதுதான். எனவே, இதில் தயாரிக்கப்படவிருக்கும் புதிய கார்கள் அனைத்துமே ஹைபிரிட் அல்லது எலெக்ட்ரிக் வேரியன்ட்களைக் கொண்டிருக்கும் என நம்பலாம். அதில் முதற்கட்டமாக, ஆல்ட்ரோஸ் EV, 2 வருடங்களில் வெளிவரலாம். வழக்கமான ஆல்ட்ரோஸ், 'Class Leading Space' கொண்டிருக்கும் என நாம் முன்பே சொல்லியிருந்தோம். அதற்கு, Flat Floor மற்றும் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் துணை நிற்கின்றன.

ஆல்ஃபா ப்ளாட்ஃபார்மில் பலவிதமான இன்ஜின்களையும் பொருத்த முடியும் என்பது ப்ளஸ். எனவே, ஆல்ட்ரோஸில் பெட்ரோல் இன்ஜின் உறுதி எனினும், டீசல் இன்ஜின் பொருத்தப்படுமா என்பதில் தெளிவில்லை. BS-6 மாசு விதிகளுக்கு ஏற்ப டீசல் இன்ஜின்களை மேம்படுத்த, அதிக தொழில்நுட்பம் மற்றும் பணம் தேவைப்படலாம். எனவே, இந்த ப்ரிமியம் ஹேட்ச்பேக்கில் டீசல் இன்ஜின் என்பது இப்போதைக்கு கேள்விக்குறியாகவே உள்ளது. ஹேரியருக்கு அடுத்தபடியாக  Impact 2.0 டிசைன் கோட்பாடுகளைப் பயன்படுத்தியிருக்கிறது ஆல்ட்ரோஸ். 

பெலினோ, எலீட் i20, ஜாஸ், போலோ ஆகிய கார்களுக்குப் போட்டியாகக் களமிறங்கப்போகும் டாடாவின் ப்ரிமியம் ஹேட்ச்பேக்கின் கேபினில், Largest in Class டச் ஸ்க்ரீன் சிஸ்டம் - அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் - அதிக லெக்ரூம் - தரமான மெட்டீரியல்கள் ஆகியவை இடம்பெறும். வெளிப்புற டிசைனும், கான்செப்ட்டைப் போலவே அதிரடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Omega ப்ளாட்ஃபார்மில் ஹேரியர் எஸ்யூவியைத் தொடர்ந்து, அதில் H7X தயாரிக்கப்படும். இது, 62மி.மீ கூடுதல் நீளம், 7 சீட்ஸ், 30bhp கூடுதல் பவர், AT ஆப்ஷன் இருக்கும்.