Published:Updated:

2019 பஜாஜ் டொமினார் D400... மாறியது என்ன?!

2019 பஜாஜ் டொமினார் D400... மாறியது என்ன?!

373.3 சிசி இன்ஜின் தற்போது DOHC அமைப்புக்கு மேம்படுத்தப்பட்டிருப்பதுடன், கூடுதலாக 5bhp பவரை வெளிப்படுத்தவும் செய்கிறது.

2019 பஜாஜ் டொமினார் D400... மாறியது என்ன?!

373.3 சிசி இன்ஜின் தற்போது DOHC அமைப்புக்கு மேம்படுத்தப்பட்டிருப்பதுடன், கூடுதலாக 5bhp பவரை வெளிப்படுத்தவும் செய்கிறது.

Published:Updated:
2019 பஜாஜ் டொமினார் D400... மாறியது என்ன?!

டொமினார் D400... பஜாஜின் இந்த பவர் க்ரூஸர், தனது இரண்டு ஆண்டுக்கால வாழ்வில் தற்போது முதன்முறையாக பேஸ்லிஃப்ட் பெற்றிருக்கிறது. இந்த பைக்கின் புக்கிங் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. ஸ்பை படங்களின்படி, சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களைத் தவிர கவாஸாகியின் பிரத்யேகமான Auroral Green நிறத்திலும் இந்த பைக் கிடைக்கும் எனத் தெரிகிறது. பாடி கலருக்கு Contrast-ஆன மேட் கறுப்பு நிறத்தில், ஹெட்லைட் பகுதி ஃப்னிஷ் செய்யப்பட்டுள்ளது. அகலமான ரியர் வியூ மிரர்கள் புதிது என்பதுடன், Cast அலுமினியத்தால் ஆன Mirror Stalks செம ஸ்டைலாக உள்ளது. முந்தைய மாடலில் இருந்த தங்க நிற அலாய் வீல்களுக்குப் பதிலாக, முதன்முறையாக இருந்த டைமண்ட் கட் ஃப்னிஷ் அலாய் வீல்களுக்கே மீண்டும் திரும்பியிருக்கிறது பஜாஜ். 13 லிட்டர் பெட்ரோல் டேங்கின் கீழ்ப்பகுதியில், ஹெட்லைட்போலவே Contrast-ஆன மேட் கறுப்பு நிறம் வியாபித்திருக்கிறது. புதிய Tank Pad, முன்பைவிட அளவில் பெரிதாகியிருக்கிறது. பின்பக்க சீட்டில் D பிராண்டிங் உள்ளது. 

பெட்ரோல் டேங்க்கில் இருக்கும் டிஸ்பிளே LCD-ஆக மாற்றப்பட்டிருப்பதுடன், அதில் கியர் இண்டிகேட்டர் - கடிகாரம் - இரட்டை டிரிப்மீட்டர் ஆகியவை உள்ளன. Negative பாணியிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டரில், வழக்கமான விஷயங்களுடன் Distance To Service - Dynamic Fuel Economy & Speed ஆகிய தகவல்கள் கூடுதலாகத் தெரிகின்றன. ஜிக்ஸர் மற்றும் அப்பாச்சியைப்போலவே, டொமினாரும் Double Barrel எக்ஸாஸ்ட்டைக்கொண்டுள்ளது. இதனால் பைக்கின் அகலம் 23மிமீ அதிகரித்துள்ளது (836மிமீ). பைக்குடன் பைகளைக் கட்டும்விதமாக, பில்லியன் சீட்டுக்கு அடியே Nylon Bungee Loop Strap-கள் சேர்க்கப்பட்டிருப்பது ப்ளஸ். டயர்கள் - ஃப்ரேம் - ஸ்விட்ச்கள் ஆகியவற்றில் மாற்றமில்லை என்றாலும், பிரேக்ஸ் மற்றும் சஸ்பென்ஷனில் முன்னேற்றம் தெரிகிறது. பழைய மாடலைப்போலவே முன்பக்க டிஸ்க் 320மிமீதான் என்றாலும், டியூக் போலவே Bybre-வின் Radial Caliper இடம்பெற்றுள்ளது. புதிய 43மிமீ USD ஃபோர்க்குக்கு ஏற்றபடி, பின்பக்க Nitrox மோனோஷாக் செட் செய்யப்பட்டிருக்கிறது. ஹெட்லைட் மற்றும் டெயில்லைட்டில் சின்ன மாறுதல் உண்டு.

373.3 சிசி இன்ஜின் தற்போது DOHC அமைப்புக்கு மேம்படுத்தப்பட்டிருப்பதுடன், கூடுதலாக 5bhp பவரை வெளிப்படுத்தவும் செய்கிறது. ஆக, 40bhp பவர், 8,650 ஆர்பிஎம்-மில் கிடைக்கிறது. டார்க்கில் மாற்றமில்லை எனினும், அது வெளிவரும் ஆர்பிஎம் மாறியுள்ளது (3.5kgm@7,000rpm). முன்பைவிட அதிகரிக்கப்பட்டிருக்கும் கம்ப்ரஷன் ரேஷியோ (11.3:1-ல் இருந்து 12:1) மற்றும் ரெட்லைன் (10,000 ஆர்பிஎம்) இன்ஜினின் அதிக செயல்திறனுக்குத் துணைநிற்கிறது. இதனால் டொமினாரின் பவர் டு வெயிட் ரேஷியோ, 217.4bhp/டன் ஆக முன்னேறியிருக்கிறது (தற்போதைய மாடல்: 192.3bhp/டன்). முந்தைய பைக்குடன் ஒப்பிடும்போது, அதிர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் எக்ஸாஸ்ட் சத்தம் ஸ்போர்ட்டி ஆகியிருப்பதாகவும் தெரிகிறது. தவிர, 0 - 100கிமீ வேகத்தை வெறும் 7.6 விநாடியிலேயே (0.8 விநாடி குறைவு) புதிய டொமினார் எட்டிவிடுவதாகத் தகவல் வந்துள்ளது! ஆனால், முன்னே சொன்ன விஷயங்களால் இன்ஜின் சூடு & மைலேஜில் வித்தியாசம் தெரியலாம். 

முன்னே சொன்ன டெக்னிக்கல் மாற்றங்களால், புதிய டொமினாரின் எடை 2.5 கிலோ அதிகரித்துள்ளது (184.5 கிலோ). அகலம் மற்றும் எடை தவிர, பைக்கின் அளவுகளில் மாறுதல் இல்லை என்பதுடன், டூயல் சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டு அம்சமாகியுள்ளது. அதேபோல, Forged Steel-ஆல் ஆன சைடு ஸ்டாண்டுக்கு மீட்டரில் இண்டிகேட்டர் உள்ளது. இன்ஜின் ஆயில் அளவு 1.7 லிட்டராக ஏற்றம் கண்டிருக்கிறது (முன்பைவிட 200மில்லி அதிகம்). புதிய வசதிகளால் புதிய டொமினாரின் விலை கணிசமாக உயரலாம் (15-20 ஆயிரம்) எனினும், போட்டியாளர்களைவிட விலை குறைவாகவே இருக்கும்.