Published:Updated:

டாடா ஆல்ட்ரோஸ்... பெலினோ, எலீட் i20, ஜாஸ் பீ கேர்ஃபுல்!

கச்சிதமான அளவுகள் மற்றும் அதிரடியான டிசைன் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, டாடா லோகோவை எடுத்துவிட்டுப் பார்த்தால், ஒரு ஐரோப்பிய ஹேட்ச்பேக் கண்முன்னே நிற்பதுபோல இருக்கிறது.

டாடா ஆல்ட்ரோஸ்... பெலினோ, எலீட் i20, ஜாஸ் பீ கேர்ஃபுல்!
டாடா ஆல்ட்ரோஸ்... பெலினோ, எலீட் i20, ஜாஸ் பீ கேர்ஃபுல்!

அப்பாடா... ஸ்பை படங்களில் மட்டுமே இவ்வளவு நாள்கள் பார்த்த ஒருகாரை, பெரிய மேடை மற்றும் பளிச் விளக்குகள் மத்தியில் பார்ப்பது எத்தனை சுகம் தெரியுமா. அந்த அனுபவத்தைக் கார் ஆர்வலர்களுக்குத் திகட்டத் திகட்டத் தந்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். ஆம், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2019 ஜெனிவா மோட்டார் ஷோவில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான ஆல்ட்ரோஸை காட்சிபடுத்தியுள்ளது டாடா. கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 45X கான்செப்ட்டாகக் களமிறங்கிய நிலையில், இப்போது பெலினோ, எலீட் i20, ஜாஸ் ஆகிய கார்களுக்குப் போட்டியாக வந்துநிற்கிறது ஆல்ட்ரோஸ். ஆகஸ்ட் மாதத்தில் இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது. பார்க்கப் பெரிதாக இருந்தாலும், 3,988 மிமீ நீளம்/1,754 மிமீ அகலம்/1,505 மிமீ உயரம்/2,501 மிமீ வீல்பேஸ் என 4 மீட்டர் கார்களுக்கு உட்பட்ட அளவுகளையே கொண்டிருக்கிறது ஆல்ட்ரோஸ். 

காரின் டிசைனில் என்ன ஸ்பெஷல்?

டாடா ஆல்ட்ரோஸ்... பெலினோ, எலீட் i20, ஜாஸ் பீ கேர்ஃபுல்!

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 45X கான்செப்ட்டை அறிமுகப்படுத்தும்போதே, 'Production மாடல், கான்செப்ட் காரைப் போன்ற தோற்றத்தையே கொண்டிருக்கும்' என டாடா நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு ஏற்றபடியே ஆல்ட்ரோஸின் டிசைன் அமைந்திருக்கிறது எனலாம். ஹேரியருக்கு அடுத்தபடியாக Impact Design 2.0 கோட்பாடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், நேர்த்தியான Profile - அகலமான Fenders - பெரிய வீல்கள் என மாடர்ன் டச்களைப் பார்க்க முடிகிறது. ஜெனிவாவில் பார்வைக்கு வைக்கப்பட்ட காரில் 17 இன்ச் அலாய் வீல்கள் இருந்தது பெரிய ப்ளஸ் (205/50 R17). ஆல்ட்ரோஸின் டாப் வேரியன்ட்களில் இது இருக்கலாம். கச்சிதமான அளவுகள் மற்றும் அதிரடியான டிசைன் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, டாடா லோகோவை எடுத்துவிட்டுப் பார்த்தால் ஒரு ஐரோப்பிய ஹேட்ச்பேக் கண்முன்னே நிற்பதுபோல இருக்கிறது. Cab Forward வடிவமைப்பில், டாடாவின் பிரத்யேகமான Smiling Grille அழகாகப் பொருந்தியுள்ளது. வழக்கமான இடத்தில் இருந்து மேலே வைக்கப்பட்டிருக்கும் Auxillary லைட்ஸ், புதிய டிசைன் டச்சாகத் தெரிகிறது. 

டாடா ஆல்ட்ரோஸ்... பெலினோ, எலீட் i20, ஜாஸ் பீ கேர்ஃபுல்!

காரின் Shoulder லைனுக்கு மேலே தடிமனான கறுப்பு நிற ப்ளாஸ்டிக் பயன்படுத்தப் பட்டிருப்பதால், ஒரு பெரிய காருக்கான Glass House மற்றும் Window லைனுடன் காட்சியளிக்கிறது ஆல்ட்ரோஸ். லம்போர்கினி டயாப்லோவில் இருப்பதுபோலவே, காரின் முன்பக்கக் கதவில் வேலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. ஸ்விஃப்ட் போலவே பின்பக்கக் கதவின் கைப்பிடி, பின்பக்கக் கதவு கண்ணாடிக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது. ஷார்ப்பான டெயில் லைட்களை, டெயில்கேட்டில் செய்யப்பட்டிருக்கும் கறுப்பு வேலைப்பாடுகள் அழகாக இணைக்கின்றன. ஆல்ட்ரோஸின் வெளித்தோற்றம் போலவே, உட்புறமும் செம ஸ்டைலாக இருக்கிறது. சென்டர் கன்சோலுக்கு மேலே டச் ஸ்க்ரீன் இருப்பதுடன், ஸ்போர்ட்டியான ஸ்டீயரிங் வீல் மற்றும் அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் செம. கேபினில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மெட்டீரியல்களின் தரம் மற்றும் ஸ்டோரேஜ் ஸ்பேஸ்கள் ஆகியவை சிறப்பாக இருக்கும் என்கிறது டாடா. ஆனால், போட்டி கார்களுடன் ஒப்பிடும்போது, ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் அவ்வளவு விசாலமாக இல்லை.

என்னென்ன இன்ஜின்கள் காரில் இருக்கும்?

டாடா ஆல்ட்ரோஸ்... பெலினோ, எலீட் i20, ஜாஸ் பீ கேர்ஃபுல்!

பல்வேறு பாடி ஸ்டைல்கள் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை உள்ளடக்கக்கூடிய ALFA ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்படவிருக்கும் முதல் காரான ஆல்ட்ரோஸ், காலத்துக்கு ஏற்றபடி எலெக்ட்ரிக் அவதாரத்திலும் வெளிவர உள்ளது. ஜெனிவாவில் இதன் கான்செப்ட் காட்சிபடுத்தப்பட்ட நிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இது விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான மாடலுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் மாடலின் பம்பர்கள் மற்றும் வீல்கள் வேறுமாதிரி இருந்தன. மற்றபடி டிசைன் மற்றும் வசதிகளில் மாற்றமிருக்காது என நம்பலாம். டேஷ்போர்டில் கொஞ்சம் வித்தியாசம் தெரிவதுடன், ஜாகுவார் கார்களில் இருப்பதுபோன்ற Rotary Gear Selector இடம்பெற்றுள்ளது வாவ். அதிகாரபூர்வமான அறிவிப்பு இல்லாவிட்டாலும், சிங்கிள் சார்ஜில் 250-300 கிமீ தூரம் ஆல்ட்ரோஸ் EV செல்லலாம். 

டாடா ஆல்ட்ரோஸ்... பெலினோ, எலீட் i20, ஜாஸ் பீ கேர்ஃபுல்!

தவிர, Fast Charging பயன்படுத்தி, 80% பவரை ஒரு மணிநேர சார்ஜிலேயே பெறமுடியும் எனத் தெரிய வந்துள்ளது. வழக்கமான மாடலில் டியாகோவின் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் நெக்ஸானின் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல்/1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்கள் பயன்படுத்தப்படலாம். ஜெனிவாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட காரில் இருந்த 1,198சிசி - 3 சிலிண்டர் - டர்போ பெட்ரோல் இன்ஜின், 102bhp@5,500rpm பவர் மற்றும் 14kgm1,750rpm டார்க்கையுள் வெளிப்படுத்துகிறது. ப்ரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் லேட்டாக நுழைந்தாலும், லேட்டஸ்ட் அம்சங்களுடன் கெத்தாக வந்திருக்கிறது ஆல்ட்ரோஸ். மற்ற டாடா கார்களைப் போலவே, போட்டியாளர்களைவிடக் குறைவான விலையில் இது அறிமுகமாவதற்கான சாத்தியங்கள் அதிகம்! எனவே டியாகோவைத் தொடர்ந்து, ஹேட்ச்பேக் பிரிவில் டாடாவின் பெயர்சொல்லும் காராக ஆல்ட்ரோஸ் தலைநிமிர்ந்து நிற்கும் என நம்பலாம்.