Published:Updated:

ஹூண்டாய் Venue எஸ்யூவியின் Bluelink டச் ஸ்க்ரீன் சிஸ்டத்தில் என்ன ஸ்பெஷல்?!

உலகளவில் 33 வசதிகள் Bluelink டச் ஸ்க்ரீன் சிஸ்டத்தில் இருந்தாலும், இந்தியாவுக்கென 10 வசதிகளைப் பிரத்யேகமாக இந்த நிறுவனம் தேர்ந்தெடுத்திருக்கிறது.

ஹூண்டாய் Venue எஸ்யூவியின் Bluelink டச் ஸ்க்ரீன் சிஸ்டத்தில் என்ன ஸ்பெஷல்?!
ஹூண்டாய் Venue எஸ்யூவியின் Bluelink டச் ஸ்க்ரீன் சிஸ்டத்தில் என்ன ஸ்பெஷல்?!

ஹூண்டாய்.... இந்த கொரிய நிறுவனம், தனது கார்களில் பிரிமியம் டிசைன் - தரமான கேபின் - அதிக வசதிகள் - ஸ்மூத் இன்ஜின்கள் ஆகியவற்றையே தாரக மந்திரமாகக் கொண்டிருந்தது. இந்நிலையில் Venue-வில் அதனை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கும் ஹூண்டாய், சர்வதேச அளவில் பயன்பாட்டில் இருக்கும் தனது Bluelink Connectivity தொழில்நுட்பத்தைத் தற்போது முன்நிறுத்தியிருக்கிறது. உலகளவில் 33 வசதிகள் Bluelink டச் ஸ்க்ரீன் சிஸ்டத்தில் இருந்தாலும், இந்தியாவுக்கென 10 வசதிகளைப் பிரத்யேகமாக இந்த நிறுவனம் தேர்ந்தெடுத்திருக்கிறது.

அவற்றை Safety, Security, Remote, Vehicle Relationship Management, Location Based Services, Alert Services, Artificial Intelligence Based Voice Commands என வகைப் படுத்தியிருக்கிறது ஹூண்டாய். ஏப்ரல் 17, 2019 அன்று அறிமுகமாகும் Venue காரில் Bluelink Connectivity தொழில்நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்தும் முடிவில் இந்த நிறுவனம் இருக்கிறது. எதிர்காலத்துக்கான காரில் என்ன எதிர்பார்க்கலாம் என்ற கேள்விக்கான விடையாக, இந்த காம்பேக்ட் எஸ்யூவியை ஹூண்டாய் 'Smart Connected SUV’ என்றே அழைக்கிறது.  

Safety: ஃபோர்டு எக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் இருப்பதுபோலவே (Emergency Assistance System), Venue-வில் Auto Crash Notification வசதி இருக்கிறது. எனவே கார் எதன்மீதாவது மோதி விபத்துக்குள்ளானால், காரின் Bluelink சிஸ்டம் விபத்துநேர சேவைகளைத் தானாகவே தொடர்பு கொண்டுவிடும். மேலும் காருக்குள்ளே இருக்கக்கூடிய ரியர் வியூ மிரரில் உள்ள பட்டனை அழுத்தினால், அது தன்னிடம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் எண்களுக்கு SOS Message அனுப்பிவிடும். தவிர தேவைக்கு ஏற்ப Road Side Assistance அல்லது Panic Notification ஆகியவற்றுக்கும் வழிவகை செய்யப்படும்.

Security:  Bluelink தொழில்நுட்பமானது, காரின் இருப்பிடத்தைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். எனவே Venue-வில் Burglar Alarm ஆன் ஆகிவிட்டால், அது காரின் உரிமையாளருக்கு கார் திருடப்பட்டுவிட்டதாகத் தகவல் அனுப்பிவிடும். டச் ஸ்க்ரீன் சிஸ்டத்தில் Live Location Tracking வசதி இருப்பதால், காரின் இருப்பிடத்தை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். இதனால் ஒருவேளை கார் திருடப்பட்டாலும், அது எங்கே இருக்கிறது என்பது பற்றிய தகவல்கள் அதன் உரிமையாளருக்கு அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். இதனால் காரைத் திருடர்களிடமிருந்து காப்பாற்ற முடியும்; இல்லையெனில் ஹூண்டாயின் கால் சென்டரை அழைத்து காரை முழுவதுமாக Immobilise செய்யமுடியும் என்பது ப்ளஸ். 

Remote: ஹூண்டாயின் Bluelink மொபைல் ஆப் மூலமாகத் தனது காரின் கதவுகளை லாக்/அன்லாக் செய்யவும் (Remote Door Lock/Unlock), ஹெட்லைட் Flash அல்லது ஹாரனை இயக்கவும் (Remote Horn Honk and Light), காரின் ஏசி & இன்ஜினின் கண்டிஷன் (Remote Vehicle Status)தெரிந்துகொள்ளவும் முடியும். இதிலிருக்கும் Find My Car வசதி மூலம், இருட்டான இடங்களில் பார்க் செய்யப்பட்டிருக்கும் காரின் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ளமுடியும். மேலும் Bluelink சிஸ்டத்துக்கான Access-யை மற்றுமொருவருக்கும் தேவைபட்டால் வழங்கமுடியும் (Share My Car). 1 லிட்டர் டர்போ GDi இன்ஜின் - 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் கூட்டணி கொண்ட மாடல்களில், காரை ஸ்டார்ட் செய்து (Remote Engine Start/Stop) - க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்தை ஆன் செய்யவும் (Remote Climate Control) முடியும்; நம் ஊரில் கொளுத்தும் வெளியில், வெயிலில் நிற்கும் காரின் கேபினைச் சில்லென வைத்திருக்கலாம் என்பது பெரிய வரம் பாஸ்! 

Vehicle Relationship Management: காரின் மெக்கானிக்கல் நிலையை, தற்போது பயன்பாட்டில் இருக்கும் AutoLink சிஸ்டத்தைவிடவும் Bluelink சிஸ்டம் சிறப்பாக எடுத்துரைக்கும் எனத் தெரிகிறது. எனவே காரை ஓட்டும் முறை (Driving Behavior) மற்றும் மாதாந்திர Vehicle Health Report ஆகியவற்றைத் தாண்டி, மெக்கானிக்கல் பாகங்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் அது டிரைவருக்கு உடனடியாக எச்சரிக்கும் (Auto DTC Check); தேவைப்பட்டால் Manual Diagnosis முறையில் காரின் மற்ற பாகங்களின் நிலையையும் தெரிந்துகொள்ளமுடியும். மேலும் இன்ஜின் ஆயில் போல காரில் இருக்கும் Consumables அனைத்தையும் எப்போது மாற்றவேண்டும் என்பதையும், Bluelink தொழில்நுட்பம் சொல்லிவிடும் (Maintenance Alert). 

Location Based Services: சர்வதேச Map நிறுவனத்துடன் இணைந்து, Real Time டிராஃபிக் அப்டேட்ஸ் மற்றும் Live Car Tracking ஆகிய வசதிகளை Bluelink சிஸ்டத்தில் வழங்குகிறது ஹூண்டாய். எனவே மொபைல் அல்லது கால் சென்டர் வாயிலாக, கார் செல்லப்போகும் இடத்தைப் பகிர முடியும் (Push Map to car from App & Destination Set in Link with Schedule). மேலும் காரின் இருப்பிடத்தை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழியாகவும் அதன் உரிமையாளர்கள் எடுத்துச் சொல்லலாம் (Share The Destination & Live Car Location). 

Alert Service: GPS வாயிலாக, Venue-வின் இருப்பைப் பார்த்துக்கொண்டே இருக்கமுடியும். எனவே கார் குறிப்பிட்ட வேகத்தைத் தாண்டினாலோ (Speed Alert) அல்லது குறிப்பிட்ட இடத்தைக் கடந்தாலோ (Geo-Fence Alert), நீண்ட நேரத்துக்கு ஐடிலிங்கில் இருந்தாலோ (Idle Alert), காரின் உரிமையாளருக்குத் தகவல் உடனடியாகப் போய்விடும்! எனவே காரின் உரிமையாளார், டிரைவர் அல்லது வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்குக் காரைக் கொடுத்தாலும், அது எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய தகவல்கள் அவருக்கு வந்தடைந்துவிடும். 

Artificial Intelligence Based Voice Navigation: இத்தனை தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும், Bluelink சிஸ்டத்தைப் பயன்படுத்த எளிதாக இருக்கும் என்கிறது ஹூண்டாய். அதற்கு AI அடிப்படையாகக் கொண்ட Voice Recognition சாஃப்ட்வேர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது இந்தியர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய திறனைக் கொண்டிருக்கிறது. டச் ஸ்க்ரீன் சிஸ்டத்தில் கனெக்ட்டிவிட்டி தேவைகளுக்காக, அதில் வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தின் சிம் கார்டு Factory Fitted ஆக உள்ளது. எனவே Bluelink சேவைகளை, காரை வாங்கிய முதல் 3 ஆண்டுகளுக்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். முதற்கட்டமாக Bluelink தொழில்நுட்பத்தைத் தனது வாடிக்கையாளர்கள் உணரும் பொருட்டு, அதற்கான Simulation-களைத் தனது டீலர்களில் நிறுவும் திட்டத்தில் இந்த நிறுவனம் இருக்கிறது. முதலில் Venue மாடலில் மட்டுமே இந்த வசதிகள் அனைத்தும் வரும் என்றாலும், நாளடைவில் மற்ற ஹூண்டாய் மாடல்களுக்கும் இந்த Bluelink சிஸ்டம் பொருத்தப்படும். சுருங்கச் சொல்வதேன்றால், MG Hector காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை நினைவுபடுத்துகிறது, Venue-வின் Bluelink கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம்!