Published:Updated:

94,000 - 1.05 லட்ச ரூபாயில் 200சிசி அட்வென்சர் டூரர்... வெல்கம் ஹீரோ எக்ஸ்-பல்ஸ்!

94,000 - 1.05 லட்ச ரூபாயில் 200சிசி அட்வென்சர் டூரர்... வெல்கம் ஹீரோ எக்ஸ்-பல்ஸ்!

ரெட்ரோ டிசைனில் இருக்கும் எக்ஸ்-பல்ஸ் 200T, டூரர் என்ற ரீதியில் இன்ட்ரூடர் (1.01 லட்சம்), அவென்ஜர் ஸ்ட்ரீட் 220 (1.03 லட்சம்) ஆகிய பைக்குகளுடன் போட்டியிடுகிறது.

2011-ம் ஆண்டு வெளிவந்த இம்பல்ஸ், ஹீரோ ஹோண்டாவாக இருந்து ஹீரோ மோட்டோகார்ப்பாக அந்த நிறுவனம் மாறிய தருணத்தில் வெளிவந்த முதல் தயாரிப்பு. 150சிசி அட்வென்சர் பைக்கான இது, ஹோண்டாவின் NXR 150 பைக்கை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டது. காலத்தைத் தாண்டிய தயாரிப்பாக இருப்பினும், குறைவான பர்ஃபாமன்ஸ் காரணமாக விற்பனையில் ஹீரோ எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இதற்கான மாற்றாக எக்ஸ்-பல்ஸ் 200 எனும் அட்வென்சர் பைக்கை இந்த நிறுவனம் களமிறக்கியுள்ளது. இதில் கார்புரேட்டர் மாடல் 97,000 ரூபாய்க்கும், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் மாடல் 1.05 லட்சம்  ரூபாய்க்கும் கிடைக்கின்றன (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள்). இதனால் என்ட்ரி லெவல் அட்வென்சர் பைக்காகத் திகழ்ந்த ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்குக்கு இவை கடும் சவால் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டூரர் வகை வேரியன்ட் ஒன்றையும் எக்ஸ்-பல்ஸ் சீரிஸில் கூடுதலாகச் சேர்த்திருக்கிறது ஹீரோ. எக்ஸ்-பல்ஸ் 200T எனப் பெயரிடப்பட்டுள்ள இது, கார்புரேட்டர் மாடலில் மட்டுமே கிடைக்கிறது. இதன் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை 94,000 ரூபாய்.

94,000 - 1.05 லட்ச ரூபாயில் 200சிசி அட்வென்சர் டூரர்... வெல்கம் ஹீரோ எக்ஸ்-பல்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எக்ஸ்-பல்ஸ் சீரிஸில் இருப்பது, எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில் உள்ள 18.4bhp பவர் - 1.71kgm டார்க்கை வெளிப்படுத்தும் 199.6சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான். டூரிங் பைக்காக பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் 150 கிலோ எடையுள்ள எக்ஸ்-பல்ஸ் 200T பைக், ADV மாடலான எக்ஸ்-பல்ஸ் பைக்கின் அதே சேஸி - எக்ஸாஸ்ட் பைப் - LED ஹெட்லைட் & டெயில் லைட் - பெட்ரோல் டேங்க் - டிஜிட்டல் மீட்டர் ஆகியவற்றைக்கொண்டிருக்கிறது. ஆனால், சஸ்பென்ஷன், பிரேக்ஸ், டயர்கள், இன்ஜின், ஸ்விட்ச்கள் ஆகியவை எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில் இருந்தே பெறப்பட்டுள்ளன. சீட் உயரம் 795மிமீ & 4 கலர்கள் உண்டு. மேலோட்டமாகப் பார்த்தாலே, எக்ஸ்-பல்ஸ் 200Tன் ரெட்ரோ டிசைன் தெரிகிறது. டூரர் என்ற ரீதியில் இன்ட்ரூடர் (1.01 லட்சம்), அவெஞ்சர் ஸ்ட்ரீட் 220 (1.03 லட்சம்) ஆகிய பைக்குகளுடன் இது போட்டியிடும்.  

94,000 - 1.05 லட்ச ரூபாயில் 200சிசி அட்வென்சர் டூரர்... வெல்கம் ஹீரோ எக்ஸ்-பல்ஸ்!

அட்வென்சர் பைக் என்பதை நிரூபிக்கும்விதமாக, ஐந்து கலர்களில் கிடைக்கும் எக்ஸ்-பல்ஸ் 200 பைக்கின் தோற்றம் அமைந்திருக்கிறது. மேல்நோக்கி வைக்கப்பட்டிருக்கும் முன்பக்க மட்கார்டு & எக்ஸாஸ்ட் பைப், முன்/பின்: 190மிமீ/170மிமீ டிராவலுடன்கூடிய சஸ்பென்ஷன், 825மிமீ சீட் உயரம், 90/90-21 & 120/80-18 Ceat Gripp டயர்கள், சிறிய விண்டு ஸ்க்ரீன், பெட்டல் டிஸ்க் பிரேக்ஸ், Knuckle Guards, Bash Plate, Fork Gaiters என கணிசமான வித்தியாசம் தெரிகிறது. இதனால் 177மிமீ கிரவுண்டு க்ளியரன்ஸ்கொண்ட எக்ஸ்-பல்ஸ் 200T பைக்கைவிட, 220மிமீ கிரவுண்டு க்ளியரன்ஸ்கொண்ட எக்ஸ்-பல்ஸ் 200 பைக்கின் எடை 4 கிலோ அதிகம். இந்த பைக்கின் பின்பக்க சஸ்பென்ஷனின் Pre-load-யை பத்துவிதமாக அட்ஜஸ்ட் செய்ய முடியும் என்பது பெரிய ப்ளஸ்.

பைக்கின் டிஜிட்டல் மீட்டரில் கியர் மற்றும் சைடு ஸ்டாண்டு இண்டிகேட்டர் தவிர, கூகுள் மேப்ஸ் உதவியுடன் இயங்கும் Turn By Turn Navigation, ப்ளுடூத் கனெக்ட்டிவிட்டி, Call Alert ஆகிய வசதிகள் இருப்பது நைஸ். ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்குடன் ஒப்பிடும்போது இன்ஜின் திறன் மற்றும் பவரில் பின்தங்கினாலும், அதைவிட எக்ஸ்-பல்ஸ் 200 பைக்கின் எடை 40 கிலோ குறைவு! தவிர, ஒரு ஹிமாலயன் வாங்கும் விலையில் கிட்டத்தட்ட 2 எக்ஸ்-பல்ஸ் பைக்குகளை வாங்கிவிட முடியும். பிஎம்டபிள்யூ G310Gs உடன் ஒப்பிட்டால், இந்தக் கணக்கில் பலத்த மாறுதல் இருக்கும். எனவே, எப்படிப் பார்த்தாலும் அதிகரித்துவரும் ஆஃப் ரோடு ப்ரியர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் நல்ல சாய்ஸ் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

94,000 - 1.05 லட்ச ரூபாயில் 200சிசி அட்வென்சர் டூரர்... வெல்கம் ஹீரோ எக்ஸ்-பல்ஸ்!