Published:Updated:

டெஸ்ட்டிங்கில் பொலேரோ பேஸ்லிஃப்ட்.... ஏர்பேக், ஏபிஎஸ் இருக்கு பாஸ்!

டெஸ்ட்டிங்கில் பொலேரோ பேஸ்லிஃப்ட்.... ஏர்பேக், ஏபிஎஸ் இருக்கு பாஸ்!
News
டெஸ்ட்டிங்கில் பொலேரோ பேஸ்லிஃப்ட்.... ஏர்பேக், ஏபிஎஸ் இருக்கு பாஸ்!

கேபினில் TUV3OO காரில் இருக்கும் அதே ஸ்டீயரிங் வீல் இடம்பெற்றுள்ளது. அதில் ஆடியோ கன்ட்ரோல்கள் மிஸ்ஸிங் என்றாலும், SRS Airbag என எழுதியிருப்பது தெரிகிறது.

பொலேரோ... யுட்டிலிட்டி வாகனத் தயாரிப்பாளராக இருந்த மஹிந்திராவுக்கு, எஸ்யூவி முகம் தந்த பெருமை இந்த காரையே சேரும். இது அறிமுகமாகி 19 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் டாப்-5 யுட்டிலிட்டி வாகனங்களில் தவறாமல் இடம்பிடித்துவிடுகிறது. FY 2019 காலகட்டத்தில் மட்டும் 84,144 கார்கள் விற்பனையாகியிருப்பதை வைத்துப் பார்க்கும்போது, கிராமப்புறப் பகுதிகளில் பொலேரோ மீதான வரவேற்பு குறையவில்லை என்பது புலனாகிறது.

இந்நிலையில், ஜூலை 1, 2019 முதலாக விற்பனை செய்யப்படவிருக்கும் கார்களில் ஓட்டுநருக்கான காற்றுப்பை, ஏபிஎஸ், EBD, சீட்பெல்ட் Reminder, ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், பின்பக்க பார்க்கிங் சென்சார் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்படுகின்றன. மேலும், அக்டோபர் 1, 2019 முதலாக விற்பனை செய்யப்படும் கார்கள் க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ற கட்டுமானத்தைக்கொண்டிருக்க வேண்டும். தவிர, ஏப்ரல் 1, 2020 முதலாக BS-6 மாசு விதிகள் மற்றும் Pedestrian Safety விதிகள் அமலுக்கு வருகின்றன; 

டெஸ்ட்டிங்கில் பொலேரோ பேஸ்லிஃப்ட்.... ஏர்பேக், ஏபிஎஸ் இருக்கு பாஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதில், காரில் சில மாற்றங்களைச் செய்தாலே, முதல் விஷயத்தில்  பொலேரோ தப்பித்துவிடும். என்றாலும், மற்ற இரு விஷயங்களில் இது தப்பிப்பிழைப்பதற்கு சாத்தியமே இல்லை. எனவே, விற்பனையில் இருக்கும் காரை லேட்டஸ்ட் விதிகளுக்கேற்ப மேம்படுத்துவது அல்லது தற்போதைய மாடலின் உற்பத்தியை நிறுத்திவிட்டு, முற்றிலும் புதிய மாடலைத் தயாரிப்பது என இரு சாய்ஸ்கள் உண்டு. இதில், சுலபமான முதல் வழியையே தேர்ந்தேடுத்திருக்கிறது மஹிந்திரா. ஆம், ஏபிஎஸ் மற்றும் காற்றுப்பையுடனான மாடல், தமிழக நெடுஞ்சாலைகளில் தற்போது டெஸ்ட்டிங்கில் இருக்கிறது. அதை மேல்மருவத்தூரில் படம்பிடித்திருக்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான எம்.அர்ஜுன். 

டெஸ்ட்டிங்கில் பொலேரோ பேஸ்லிஃப்ட்.... ஏர்பேக், ஏபிஎஸ் இருக்கு பாஸ்!

ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, காரின் வெளிப்புறத்தில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதில் இருப்பது 1.5 லிட்டர் mHawkD70 இன்ஜின் பொருத்தப்பட்ட பொலேரோ பவர் ப்ளஸ் மாடலின் டாப் வேரியன்ட்டான ZLX ஆகும். இருப்பினும், காரில் பனி விளக்குகள், Wheel Caps, பாடி கிராஃபிக்ஸ் ஆகியவை மிஸ்ஸிங். கேபினில் TUV3OO காரில் இருக்கும் அதே ஸ்டீயரிங் வீல் இடம்பெற்றுள்ளது. அதில், ஆடியோ கன்ட்ரோல்கள் மிஸ்ஸிங் என்றாலும், SRS Airbag என எழுதியிருப்பது தெரிகிறது. மற்றபடி Faux Wood ஃபினிஷுடன்கூடிய டூயல் டோன் டேஷ்போர்டு, டிஜிட்டல் மீட்டர், Single Din ஆடியோ சிஸ்டம் என வழக்கமான அம்சங்களே இன்டீரியரில் உள்ளன.

ஏப்ரல் 2020-ல் வரப்போகும் மாடலில், இதே இன்ஜின் BS-6 மாசு விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்படலாம் என்பதுடன், Pedestrian Safety விதிகளுக்கேற்ப காரின் முன்பக்கத்தில் உயரமான பானெட், கூர்மையான பகுதிகளற்ற பம்பர், மாற்றியமைக்கப்பட்ட கிரில் ஆகிய மாற்றங்கள் இடம்பெறலாம். கடந்த 2014-ம் ஆண்டிலேயே சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடனான ஸ்பெஷல் எடிஷன் (600 கார்கள் மட்டுமே) பொலேரோவை மஹிந்திரா களமிறக்கியது தெரிந்ததே. 

டெஸ்ட்டிங்கில் பொலேரோ பேஸ்லிஃப்ட்.... ஏர்பேக், ஏபிஎஸ் இருக்கு பாஸ்!

இந்நிலையில், முற்றிலும் புதிய  தாருக்கு வழிவிடப்போகும் தற்போதைய முதல் தலைமுறை மாடலில், Signature Edition மாடலை இந்த நிறுவனம் வெளியிட இருக்கிறது. டெஸ்ட்டிங்கில் இருந்த இதையும் படம்பிடித்துள்ளார் எம்.அர்ஜுன். இதிலும் பொலேரோ போலவே ஏபிஎஸ் மற்றும் காற்றுப்பை வழங்கப்படும் எனத் தெரிகிறது. கறுப்பு மற்றும் நீல நிறங்களில் தாரின் Signature Edition மாடலை வாங்க முடியும். வெளிப்புறத்தில் Signature Edition பேட்ஜ், 15 இன்ச் அலாய் வீல்கள், பானெட்டில் கறுப்பு வேலைப்பாடு, பம்பரில் சில்வர் வேலைப்பாடு ஆகியவை தவிர, ஃபெண்டரில் ஆனந்த் மஹிந்திராவின் கையோப்பம் இருப்பதுதான் ஸ்பெஷல்!

கேபினில் பின்பக்க இருக்கைகள் Front Facing பாணியில் இருக்கும் என்பதுடன், Leatherette சீட் கவரும் உண்டு. வெறும் 700 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படவிருக்கும் இதில், 2.5 லிட்டர் CRDe டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். எதிர்பார்த்தபடியே வழக்கமான மாடல்களைவிட இவற்றின் விலை அதிகமாகவே இருக்கும்.