Published:Updated:

கியா Seltos... இந்த மிட்சைஸ் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?

கியா Seltos... இந்த மிட்சைஸ் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?

டாப் வேரியன்ட்டில் 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், Heads Up Display, In-Car WiFi, வென்டிலேட்டட் & எலெக்ட்ரிக்கல் அட்ஜஸ்ட் உடனான முன்பக்க சீட்கள் ஆகியவை இருக்கலாம்.

கியா Seltos... இந்த மிட்சைஸ் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?

டாப் வேரியன்ட்டில் 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், Heads Up Display, In-Car WiFi, வென்டிலேட்டட் & எலெக்ட்ரிக்கல் அட்ஜஸ்ட் உடனான முன்பக்க சீட்கள் ஆகியவை இருக்கலாம்.

Published:Updated:
கியா Seltos... இந்த மிட்சைஸ் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிபடுத்தியதுதான் SP2i கான்செப்ட் எஸ்யூவி. அதற்குப் பிறகு, இணைய உலகில் இதன் ஸ்பை படங்கள் அதிகமாகப் பகிரப்பட்டது தெரிந்ததே. இதனாலேயே குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்பே இந்த மிட்சைஸ் எஸ்யூவியின் டிசைன் மற்றும் இன்டீரியர் ஸ்கெட்ச்கள் வெளியிடப்பட்டுவிட்டன; Trazor, Trailster என யூகங்கள் எழுந்த நிலையில், நம் நாட்டில் இந்த நிறுவனம் கொண்டு வரப்போகும் முதல் காரின் பெயர், Seltos என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெக்க புராணங்களில் இடம்பெற்ற ஹெர்குலிஸின் மகனான Celtus-ன் பெயரை பின்பற்றியே இது அமைந்திருக்கிறது. பெயரில் இருக்கும் எஸ் - காரின் வேகம், ஸ்போர்ட்டியான திறன், வலிமை ஆகியவற்றைப் பறைசாற்றும் என்கிறது கியா. எம்ஜி ஹெக்டர், ஹூண்டாய் வென்யூ ஆகிய எஸ்யூவிகளுக்கு அடுத்தபடியாக, கனெக்டட்/Telematics தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும் காராக செல்டொஸ் இருக்கும். எனவே போட்டிக்கு லேட்டாக வந்தாலும், இந்த எஸ்யூவியில் என்ன எதிர்பார்க்கலாம்?

டிசைன்

கியா Seltos... இந்த மிட்சைஸ் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?

2019 சியோல் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட SP Signature கான்செப்ட் காரை அடிப்படையாகக் கொண்டுதான் செல்டொஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. கியா கார்களுக்கே உரித்தான 'Tiger Nose' இங்கே இருப்பதுடன், அதன் இருபுறமும் LED ஹெட்லைட்ஸ் இடம்பெற்றுள்ளன. கிரில்லுக்கு மேலே, LED லைட் பார் செல்கிறது. கான்செப்ட் காரில் 19 இன்ச் அலாய் வீல்கள் இருந்த நிலையில், அது இங்கே 18 இன்ச் ஆகக் குறைந்திருக்கிறது. சைஸ் மாறியிருந்தாலும், இதன் டிசைனில் மாற்றமில்லாதது ஆறுதல்; இந்த டூயல் டோன் அலாய் வீல்களில், Kumho நிறுவனத்தின் 225/45 - ரேடியல் டியூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. கான்செப்ட் காருடன் ஒப்பிடும்போது, பெரிய ரியர் வியூ மிரர்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

கியா Seltos... இந்த மிட்சைஸ் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?

மற்றபடி Contrast ரூஃப் ஃபினிஷ், மெல்லிய LED பனி விளக்குகள், வழக்கமான Pull Type கதவு கைப்பிடிகள், ஏ-பில்லர் முதல் Window Line வரை க்ரோம் ஃபினிஷ், பெரிய ரூஃப் ரெயில், LED டெயில் லைட்டை இணைக்கும் க்ரோம் பட்டை, Shark Fin ஆண்டெனா, ஸ்பாய்லர், Skid Plate உடனான பம்பர்கள், அகலமான வீல் ஆர்ச், டூயல் எக்ஸாஸ்ட் என ஒரு எஸ்யூவிக்குத் தேவையான டிசைன் அம்சங்களுடன் கச்சிதமான சைஸில் கவர்ந்திழுக்கிறது கியா செல்டொஸ்.

கேபின் மற்றும் சிறப்பம்சங்கள்

கியா Seltos... இந்த மிட்சைஸ் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?

இன்டீரியர் ஸ்கெட்ச் படங்களைப் பார்க்கும்போது, நீட்டான டிசைனில் டேஷ்போர்டு இருப்பது உறுதியாகி விட்டது. சென்டர் கன்சோலின் ஏசி வென்ட்களுக்கு மேலே, Floating பாணியில் இருக்கும் 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்ட்ம், ஹெக்டரை விடக் கொஞ்சமே சிறியது (10.4 இன்ச்). வட அமெரிக்காவில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் Telluride எஸ்யூவியில் இருக்கும் லேட்டஸ்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போலவே இதுவும் காட்சியளிக்கிறது. எனவே ஆப்பிள்/ஆண்ட்ராய்டு கனெக்ட்டிவிட்டி, வாய்ஸ் கமாண்ட், சாட்டிலைட் நேவிகேஷன் போன்ற வசதிகள் இருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. Single Zone கிளைமேட் கன்ட்ரோல் ஏசிக்கான கன்ட்ரோல்கள் டச் பாணியில் டிஜிட்டலாக இருந்தாலும், அதன் டெம்பரேச்சரை பெரிய நாப் கொண்டே கட்டுப்படுத்தமுடியும்; அதற்குக் கீழே, வழக்கமான USB/AUX பாயின்ட்கள் உள்ளன. லெதர் மற்றும் அலுமினிய வேலைப்பாடுகளுடன் இருக்கும் 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், செம ஸ்போர்ட்டி. 

கியா Seltos... இந்த மிட்சைஸ் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?

இதில் ப்ளூடுத், ஆடியோ, க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றுக்கான பட்டன்கள் இருக்கும். இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டச் ஸ்க்ரீன் சிஸ்டத்துடன் இணைந்திருக்கும் விதம் அழகு. இரட்டை அனலாக் மீட்டர்களுக்கு இடையே, கலர் MID ஸ்க்ரீன் இருப்பது ப்ளஸ். டாப் வேரியன்ட்டில் 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், Heads Up Display, In-Car WiFi, வென்டிலேட்டட் & எலெக்ட்ரிக்கல் அட்ஜஸ்ட் உடனான முன்பக்க சீட்கள், ஆகியவை இருக்கலாம். கறுப்பு - பீஜ்/பிரவுன் என டூயல் டோன் கலரில் இருக்கும் கேபினில், ஆங்காங்கே Faux Wood மற்றும் Brushed அலுமினிய வேலைப்பாடுகள் வியாபித்திருக்கின்றன. LED ஆம்பியன்ட் லைட்டிங், இன்டீரியருக்கு பிரிமியம் ஃபீல் தருகிறது. இதை டச் ஸ்க்ரீன் வாயிலாக அட்ஜஸ்ட் செய்யலாம். புஷ் பட்டன் ஸ்டார்ட், எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மிரர்கள் உண்டு; எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டிரைவிங் மோடுக்கான Selector, பேடில் ஷிஃப்ட்டர், டிஜிட்டல் மீட்டர்கள் - டாப் மாடலில் வழங்கப்படலாம்.

இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்

கியா Seltos... இந்த மிட்சைஸ் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?

கியா செல்டோஸில் இருக்கப்போவது, 1.5 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின்களே. இவை BS-4 செட் அப்பில் வெளிவந்தாலும், BS-6 விதிகளுக்கேற்ப அப்கிரேடு செய்யமுடியும். இவை 6 ஸ்பீடு மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் கிடைக்கலாம். சில ஸ்பை படங்களைப் பார்த்தபோது, அதில் T-GDi மற்றும் 4WD பேட்ஜிங்கைப் பார்க்கமுடிந்தது. அதற்கேற்ப செல்டோஸின் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட்டில், 140bhp பவரை வெளிப்படுத்தும் டர்போ பெட்ரோல் இன்ஜின் - 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி இடம்பெறும். ஆஃப் ரோடுக்கு எனப் பிரத்யேகமான டிரைவிங் மோடும் இருக்கிறது. வழக்கமான பெட்ரோல் இன்ஜினில் டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் இருந்தால், டர்போ பெட்ரோல் மாடலில் ட்வின் க்ளட்ச் அமைப்பு இருக்கும்.

விலை மற்றும் போட்டியாளர்கள்

கியா Seltos... இந்த மிட்சைஸ் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?

வருகிற ஜூன் 20, 2019 அன்று, செல்டொஸ் காரை உலகளவில் அதிகாரப்பூர்வமாகக் காட்சிபடுத்துகிறது கியா மோட்டார்ஸ். உத்தேசமாக 10-16 லட்ச ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த மிட்சைஸ் எஸ்யூவி கிடைக்கலாம். இதை வைத்துப் பார்க்கும்போது ஹூண்டாய் க்ரெட்டா - நிஸான் கிக்ஸ் - ரெனோ கேப்ச்சர் - மாருதி சுஸூகி எஸ்-கிராஸ் - ஹோண்டா BR-V ஆகிய கார்களைத் தவிர டாடா ஹேரியர், ஜீப் காம்பஸ், எம்ஜி ஹெக்டர், மஹிந்திரா XUV5OO ஆகிய கார்களுடனும் போட்டிபோடுகிறது கியா செல்டொஸ். ஆந்திர மாநிலம் அனந்தபூரில் தொழிற்சாலையை கட்டமைத்திருக்கும் கியா மோட்டாரஸ் நிறுவனம், உள்நாட்டு உதிரிபாகங்களைக் கொண்டே இந்த எஸ்யூவியைத் தயாரிக்கும். இங்கே Pilot Production ஏற்கெனவே தொடங்கிவிட்டதுடன், இந்தத் தொழிற்சாலையின் வருட உற்பத்தித் திறன் -  3 லட்சம் கார்கள் என்றளவில் இருக்கிறது. எனவே பலருக்கும் கட்டுபடியாகக் கூடிய விலை/வெயிட்டிங் பீரியட் உடன், இந்த மிட்சைஸ் எஸ்யூவி அறிமுகமாகலாம்.

கியா Seltos... இந்த மிட்சைஸ் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?

ஒவ்வொரு 6 மாதத்துக்கும் ஒரு புதிய கார் என்ற ரீதியில், 2021-ம் ஆண்டுக்குள்ளாக இந்தியாவில் 5 மாடல்களைக் (எம்பிவி, காம்பேக்ட் எஸ்யூவி, செடான், க்ராஸ் ஹேட்ச்பேக்) கொண்டிருக்க திட்டமிட்டிருக்கிறது இந்த நிறுவனம். ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு வரவிருக்கும் செல்டொஸ் காருக்கு, முதற்கட்டமாக 35 நகரங்களில் டீலர்கள் இருப்பார்கள். நொய்டாவில் கியா மோட்டார்ஸின் முதல் டீலர்ஷிப் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது. சென்னையைப் பொறுத்தவரை, மவுன்ட் ரோட்டில் கியாவின் முதல் டீலர்ஷிப் வரலாம். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய கார் சந்தையை எவ்வளவு லைக் செய்கிறது என்பது தெரிகிறது. அதற்கு மக்கள் எப்படி ஆதரவளிப்பார்கள் என்பது போகப் போகத் தெரியும். 

கியா Seltos... இந்த மிட்சைஸ் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?