Published:Updated:

டெஸ்ட்டிங்கில் புதிய ஹூண்டாய் i20... என்ன எதிர்பார்க்கலாம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டெஸ்ட்டிங்கில் புதிய ஹூண்டாய் i20... என்ன எதிர்பார்க்கலாம்?
டெஸ்ட்டிங்கில் புதிய ஹூண்டாய் i20... என்ன எதிர்பார்க்கலாம்?

ஹெட்லைட்ஸ் கிரில்லுடன் இணையும் விதம் மற்றும் புரொஜெக்டர் பனி விளக்குகள், எலான்ட்ரா பேஸ்லிஃப்ட்டை நினைவுபடுத்துகின்றன; காரின் Profile, தற்போதைய i20 காரை நினைவுபடுத்தும்படியே அமைந்திருக்கிறது.

தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், மூன்றாம் தலைமுறை i20 காரின் டெஸ்ட்டிங்கை எப்போதோ தொடங்கிவிட்டது. PI3 எனும் குறியிட்டுப் பெயரைக்கொண்டிருக்கும் இந்த கார், தமிழ்நாட்டில் டெஸ்ட்டிங்கில் இருந்தபோது அதைப் படம்பிடித்திருக்கிறார்கள், மோட்டார் விகடன் வாசகர்களான ஆர்.சாம் மேத்யூ பிரவீன் (சேலம்) மற்றும் செந்தில்குமார் (ஊட்டி). 2020-ம் ஆண்டு நடக்கவிருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட பிறகு, இந்தியாவில் இது அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்பை படங்களில் காரின் டிசைன் அம்சங்கள் ஓரளவுக்குப் புலப்படுகின்றன. 

டெஸ்ட்டிங்கில் புதிய ஹூண்டாய் i20... என்ன எதிர்பார்க்கலாம்?

எலான்ட்ரா பேஸ்லிஃப்ட் மற்றும் வென்யூவில் இருக்கக்கூடிய ஹூண்டாயின் `Cascading Grille’ இங்கும் இடம்பெற்றிருக்கிறது. எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட்டில் க்ரோம் ஃபினிஷுடன்கூடிய அறுகோண Mesh இருக்கிறது. வென்யூவில் இருப்பதோ, க்ரோம் ஃபினிஷுடனான செங்குத்தான Mesh. i20-ல் உள்ள Mesh வகை, Criss Cross ஃபினிஷில் இருக்கும். ஹெட்லைட்ஸ் கிரில்லுடன் இணையும்விதம் மற்றும் புரொஜெக்டர் பனிவிளக்குகள், எலான்ட்ரா பேஸ்லிஃப்ட்டை நினைவுபடுத்துகின்றன. காரின் Profile, தற்போதைய i20 காரை நினைவுபடுத்தும்படியே அமைந்திருக்கிறது. வென்யூபோலவே, பின்பக்க நம்பர்பிளேட் பின்பக்க பம்பரில் இருக்கலாம். ஏனெனில், தற்போதைய மாடலில் அது டெயில்கேட்டில் இருப்பது தெரிந்ததே. 

டெஸ்ட்டிங்கில் புதிய ஹூண்டாய் i20... என்ன எதிர்பார்க்கலாம்?

மேலும், புதிய மாடலும் பழைய மாடலைப்போலவே 4 மீட்டருக்கு உட்பட்ட சைஸில்தான் இருக்கும் (3,995 மி.மீ). ஆனால், காரின் இடவசதியை அதிகரிக்கும் நோக்கத்தில் அகலம் அதிகரிக்கப்படலாம் எனத் தோன்றுகிறது. டாப் வேரியன்ட்டில் LED புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் - LED DRL இருக்கலாம். சமீபத்தில் வெளிவந்த வென்யூ மற்றும் விரைவில் வரப்போகும் புதிய கிராண்டு i10 காரின் கேபினில் இருக்கும் பாகங்கள், மூன்றாம் தலைமுறை i20 காரில் பயன்படுத்தப்படலாம். Bluelink இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அதற்கான உதாரணம். தவிர, கேபின் தரமும் தற்போதைய மாடலைவிட இன்னும் சிறப்பாக அமையலாம். 

டெஸ்ட்டிங்கில் புதிய ஹூண்டாய் i20... என்ன எதிர்பார்க்கலாம்?

இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்களைப் பொறுத்தவரை, வென்யூவில் இருப்பதுதான் இங்கேயும் தொடரும் (1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்; 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்). ஆனால், இந்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 100bhp/120bhp என எந்த டியூனிங்கில் வெளிவரும் என்பது போகப்போகத்தான் தெரியும். அதேபோல இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன், 7 ஸ்பீடு ட்வின் க்ளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாகவும் வரலாம். ஏனெனில், வெளிநாடுகளில் தற்போது விற்பனை செய்யப்படும் i20-ன் 1.0 லிட்டர் T-GDi மாடல், 100bhp பவரிலே கிடைக்கிறது. பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டு.

டெஸ்ட்டிங்கில் புதிய ஹூண்டாய் i20... என்ன எதிர்பார்க்கலாம்?

இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் தனது போட்டியாளர்களுக்கு (டாடா அல்ட்ராஸ், டொயோட்டா கிளான்ஸா, மாருதி சுஸூகி பெலினோ, ஃபோக்ஸ்வாகன் போலோ, ஹோண்டா ஜாஸ்)  ஈடுகொடுக்கும் வகையில், ஓட்டுதல் அனுபவத்திலும் ஸ்கோர் செய்யும் என்றே தெரிகிறது. ஸ்பை படங்களில் இருக்கக்கூடிய காரில் சன்ரூஃப் மற்றும் டைமண்டு கட் அலாய் வீல்கள் இருந்தன. BS-6 அவதாரத்தில் வெளிவருவதால், மூன்றாம் தலைமுறை i20 காரின் விலை, நிச்சயமாகத் தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட அதிகமாகவே இருக்கும். 

டெஸ்ட்டிங்கில் புதிய ஹூண்டாய் i20... என்ன எதிர்பார்க்கலாம்?
Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு