Published:Updated:

ரிவோல்ட் மோட்டார்ஸின் RV 400... இதுக்கும் மைக்ரோமேக்ஸுக்கும் சம்பந்தம் உண்டு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரிவோல்ட் மோட்டார்ஸின் RV 400... இதுக்கும் மைக்ரோமேக்ஸுக்கும் சம்பந்தம் உண்டு!
ரிவோல்ட் மோட்டார்ஸின் RV 400... இதுக்கும் மைக்ரோமேக்ஸுக்கும் சம்பந்தம் உண்டு!

'எலெக்ட்ரிக் வாகனங்களின் பிக்-அப் செமயாக இருந்தாலும், அவை சத்தமில்லாமல் இயங்கும்' என்பதே ஆர்வலர்களின் கருத்து. எனவே, 4 விதமான செயற்கையான எக்ஸாஸ்ட் சத்தத்தை RV 400-ல் வழங்கியிருக்கிறது ரிவோல்ட் மோட்டார்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ராகுல் சர்மா, மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர் (நடிகை அசினின் கணவர்), புதிதாக RV 400 எனும் எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளார். புதிதாக Revolt Motors எனும் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கும் ராகுல் சர்மா, ``RV 400 EV-யை, நிறுவன வலைதளம் மற்றும் அமேசானில் ஜூன் 25, 2019 முதல் புக்செய்யலாம்'' என்று கூறியுள்ளார். முதலில் டெல்லி, பிறகு வரிசையாக NCR - புனே - பெங்களூர் - ஹைதராபாத் - நாக்பூர் - அஹமதாபாத் - சென்னை என அடுத்த நான்கு மாதங்களில் இந்த நகரங்களில் தனது RV 400 எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்கும் முடிவில் இருக்கிறது, ரிவோல்ட் மோட்டார்ஸ். இதன் டெலிவரிகள் அடுத்த மாதத்திலிருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் பைக்கின் தொழில்நுட்பத் தேவைகளுக்காக (பிளாட்ஃபார்ம், மோட்டார், பேட்டரி) சீனாவைச் சேர்ந்த Soco எனும் நிறுவனத்துடன் ரிவோல்ட் மோட்டார்ஸ் கூட்டணி வைத்திருக்கிறது. 

ரிவோல்ட் மோட்டார்ஸ் உருவானது எப்படி?

ரிவோல்ட் மோட்டார்ஸின் RV 400... இதுக்கும் மைக்ரோமேக்ஸுக்கும் சம்பந்தம் உண்டு!

ஒரு காலத்தில், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இருந்து, பிறகு சீன மொபைல் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தின் அசுர வளர்ச்சியால், தனது இடத்தை மைக்ரோமேக்ஸ் இழந்தது தெரிந்ததே. இந்நிலையில்தான், எப்படி டி.வி தயாரிப்பில் தடாலடியாக இறங்கினாரோ, அதைப்போலவேதான் எலெக்ட்ரிக் பைக்கைத் தயாரிக்கப்போவதையும் ராகுல் சர்மா அதிரடியாக, 2019 ஏப்ரல் மாதத்தில் அறிவித்தார். இதற்காக, ஹரியானாவில் 1 லட்சம் சதுர அடியில் தொழிற்சாலையை இந்த நிறுவனம் கட்டமைத்திருக்கிறது. வருடத்துக்கு, 1.2 லட்சம் எலெக்ட்ரிக் பைக்குகளைத் தயாரிக்கக்கூடிய திறனைக்கொண்டிருக்கிறது. சிங்கிள் சார்ஜில் 156 கி.மீ (அராய் டெஸ்ட்டிங்கின்படி) தூரம் செல்லக்கூடிய இந்த EV-யில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

RV 400, பார்க்க எப்படி இருக்கிறது?

ரிவோல்ட் மோட்டார்ஸின் RV 400... இதுக்கும் மைக்ரோமேக்ஸுக்கும் சம்பந்தம் உண்டு!

வழக்கமான பைக்கில் இன்ஜின் எங்கே இருக்குமோ, RV 400-ல் அங்கேதான் பேட்டரி இடம்பெற்றிருக்கிறது. USD ஃபோர்க் - மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்-அப், 4ஜி கனெக்ட்டிவிட்டி, டிஜிட்டல் மீட்டர் என மாடர்ன் அம்சங்களைக்கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் பைக்கில், ஹெட்லைட் - டெயில் லைட் - இண்டிகேட்டர்கள் என அனைத்துமே LED மயம். Bolt-on Subframe மற்றும் நீளமான ஸ்விங் ஆர்ம் கொண்ட இந்த எலெக்ட்ரிக் பைக், பார்க்க செம காம்பேக்ட்டாகவே இருக்கிறது. அதேபோல, க்ளட்ச் லீவர் இருக்கும் இடத்தில், பின்பக்க டிஸ்க் பிரேக்கின் லீவர் இடம்பெயர்ந்திருக்கிறது. ரைடர் மற்றும் பில்லியனுக்கு ஏற்றபடி, சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார் மற்றும் சீட்டின் வடிவமைப்பு அமைந்திருக்கிறது எனலாம். ஹேண்டில்பாருக்குக் கீழே, கார்களில் இருப்பதுபோன்ற Keyless-Start `Power’ பட்டன் இருக்கிறது. 

இதற்கும் Super Soco TC Max-க்கும் என்ன ஒற்றுமை? 

ரிவோல்ட் மோட்டார்ஸின் RV 400... இதுக்கும் மைக்ரோமேக்ஸுக்கும் சம்பந்தம் உண்டு!

சீனாவின் Soco நிறுவனத்தின் TC Max EV-யில் இருக்கக்கூடிய Li-ion பேட்டரி, 3.5kw மோட்டார், ஃப்ரேம்/சேஸி, பெல்ட் டிரைவ் சிஸ்டம், Battery Management System (BMS) ஆகியவற்றை இறக்குமதி செய்திருக்கும் ரிவோல்ட் மோட்டார்ஸ், பாடி பேனல்கள் மற்றும் Electronic Control Unit (ECU) ஆகியவற்றை சொந்தமாகத் தயாரித்திருக்கிறது. தவிர, அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய விலையில் இது கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், கூடவே ரியர் வியூ மிரர்கள் - டியூப்லெஸ் டயர்கள் - அலாய் வீல்கள் ஆகியவற்றையும் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்றிருக்கிறார், ராகுல் சர்மா. பின்னாளில் Battery Management System (BMS) மற்றும் ஃபிரேமை Localise செய்யும் முடிவில் அவர் இருக்கிறார். 18kgm டார்க் கொண்ட RV 400, அதிகபட்சமாக 85 கி.மீ வேகத்தில் செல்கிறது. இது, 125 சிசி பைக்குகளுக்கு இணையான பர்ஃபாமன்ஸைக்கொண்டிருக்கும் எனத் தகவல் வந்திருக்கிறது. Eco, City, Sport என மூன்று டிரைவிங் மோடுகள் இருக்கின்றன. 


மொபைல் ஆப்... சார்ஜிங் டைம்... பேட்டரி எப்படி?

ரிவோல்ட் மோட்டார்ஸின் RV 400... இதுக்கும் மைக்ரோமேக்ஸுக்கும் சம்பந்தம் உண்டு!

வழக்கமான பைக் போல இங்கே கியர் மாற்றத் தேவையில்லை என்பதால், ஸ்கூட்டர் ஓட்டுவதுபோல இந்த EV-யைச் சாதாரணமாக ஓட்டலாம். டிஜிட்டல் மீட்டரில் சாட்டிலைட் நேவிகேஷன் இல்லாவிட்டாலும், மொபைல் ஆப்பில் `Find My Bike’ மற்றும் பைக்கின் இருப்பிடத்தை ஷேர் செய்யலாம். இதில் வழங்கப்பட்டிருக்கும் 15A பிளக்கைப் பயன்படுத்தும்போது, நான்கு மணி நேரத்தில் பேட்டரியை சார்ஜ் செய்துவிட முடியும். மேலும், இந்த நிறுவனத்தின் `mobile swap stations’-களைக் கண்டறிந்து (ஆப் வாயிலாக), பவர் தீர்ந்த பேட்டரியைக் கொடுத்துவிட்டு ஃபுல் சார்ஜ்கொண்ட பேட்டரியை வாங்கிச் செல்லலாம். 15 கிலோ எடையுள்ள லித்தியம் அயர்ன் பேட்டரியை Removable Battery Pack போலப் பயன்படுத்துவது கடினமாக இருக்கலாம். இதற்காகவே, தேவைப்பட்டால் மொபைல் ஆப் வழியே புதிய பேட்டரியை வீட்டுக்கே கொண்டுவரும் வசதியும் இருக்கிறது. 

Artificial Intelligence தொழில்நுட்பத்தால் என்ன பலன்?

ரிவோல்ட் மோட்டார்ஸின் RV 400... இதுக்கும் மைக்ரோமேக்ஸுக்கும் சம்பந்தம் உண்டு!

இந்த EV-யின் விலை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அதில் பேட்டரியின் விலை அடங்காது என்றே தோன்றுகிறது. அதாவது, 22 Kymco நிறுவனத்தின் iFlow எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்போல Lease/Subscription பாணியில் வழங்கப்படலாம். RV 400-க்கு எனப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் மொபைல் ஆப்பில் பைக் எங்கே இருக்கிறது, பயணித்த இடங்கள், பைக்கை இருந்த இடத்திலிருந்து ஸ்டார்ட் செய்வது, Geofence போன்ற அம்சங்கள் இருப்பது பெரிய ப்ளஸ். `Artificial Intelligence’ தொழில்நுட்பம் இருப்பதால், ஒருவர் பைக்கை ஓட்டும் விதத்தைவைத்து, சரியான ஓட்டுதல் முறை - Real Time Range மற்றும் பிரச்னைகள் தவிர இன்ஷூரன்ஸ் பீரிமியம் போன்ற தகவல்களை அவருக்குத் தெரியப்படுத்தும். ஜியோஃபென்ஸ் இருப்பதால், பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு அல்லது ஒருவர் தனது நண்பருக்கு இந்த வாகனத்தைக் கொடுக்கும்போது, குறிப்பிட்ட தூரம்/வேகத்தைத் தாண்டாதபடி செட் செய்துகொள்ளலாம். 

என்ன... எலெக்ட்ரிக் பைக்கில் எக்ஸாஸ்ட் சத்தமா?

ரிவோல்ட் மோட்டார்ஸின் RV 400... இதுக்கும் மைக்ரோமேக்ஸுக்கும் சம்பந்தம் உண்டு!

`எலெக்ட்ரிக் வாகனங்களின் பிக்-அப் செமயாக இருந்தாலும், அவை சத்தமில்லாமல் இயங்கும்' என்பதே ஆர்வலர்களின் கருத்து. எனவே, நான்குவிதமான செயற்கையான எக்ஸாஸ்ட் சத்தத்தை RV 400-ல் வழங்கியிருக்கிறது ரிவோல்ட் மோட்டார்ஸ்! இது, பைக்கின் வேகத்துக்கேற்ப செயல்படும் என நம்பலாம். இதனுடன் மொபைல் ஆப்பில் இன்னும் பல எக்ஸாஸ்ட் சத்தங்களை டவுண்லோடும் செய்துகொள்ளலாம். Rebel Red, Cosmic Black எனும் இரு கலர்களில் கிடைக்கும் இந்த EV-யின் விலையை, அந்த நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வமாகச் சொல்லவில்லை. ஆனால், கவர்ச்சியான விலைக்குப் பெயர்பெற்ற மைக்ரோமேக்ஸ் மொபைல்களை வைத்துப் பார்க்கும்போது, 1 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையாக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கலாம். அடுத்த மாதத்தில் RV 400 டெல்லியில் விற்பனைக்கு வரும்போது, அதற்கென பிரத்யேகமான ஷோரூம்கள்/சர்வீஸ் சென்டர்கள்/சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்கலாம்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு