Published:Updated:

BS-6 இன்ஜின், Fi - ஸ்டார்ட் ஸ்டாப் வசதி... 2019 ஹோண்டா ஆக்டிவாவில் என்ன ஸ்பெஷல்?

BS-6 இன்ஜின், Fi - ஸ்டார்ட் ஸ்டாப் வசதி... 2019 ஹோண்டா ஆக்டிவாவில் என்ன ஸ்பெஷல்?

Side Stand Inhibitor அம்சம் இருப்பதால், ஒருவேளை நீங்கள் சைடு ஸ்டாண்டை எடுக்காமல் வண்டியை ஸ்டார்ட் செய்ய முயன்றால், இன்ஜின் ஆன் ஆகாது மக்களே!

BS-6 இன்ஜின், Fi - ஸ்டார்ட் ஸ்டாப் வசதி... 2019 ஹோண்டா ஆக்டிவாவில் என்ன ஸ்பெஷல்?

Side Stand Inhibitor அம்சம் இருப்பதால், ஒருவேளை நீங்கள் சைடு ஸ்டாண்டை எடுக்காமல் வண்டியை ஸ்டார்ட் செய்ய முயன்றால், இன்ஜின் ஆன் ஆகாது மக்களே!

Published:Updated:
BS-6 இன்ஜின், Fi - ஸ்டார்ட் ஸ்டாப் வசதி... 2019 ஹோண்டா ஆக்டிவாவில் என்ன ஸ்பெஷல்?

“Please hold a pin- drop silence” என ஹோண்டாவிடமிருந்து வெளிவந்த டீசர்களைப் பார்த்தபோது, அது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவோ புதிய BS-6 ஸ்கூட்டராகவோ இருக்கும் என்றே தோன்றியது. அதற்கேற்ப ''இந்தியாவின் இரண்டாவது BS-6 டூ-வீலர் மற்றும் முதல் BS-6 ஸ்கூட்டர்'' என்ற பெருமையுடன், தனது புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டரை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தனது ‘quiet revolution’ கோட்பாடுகளின்படி, ஹோண்டா களமிறக்கியிருக்கும் முதல் டூ-வீலராக இது அமைந்திருக்கிறது. இதற்காக மட்டுமே 26 காப்புரிமைகளைப் பதிவு செய்திருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் 6 வருட வாரன்ட்டியுடன் வெளிவந்திருக்கும் ஆக்டிவா 125, BS-6 அவதாரத்தில் என்ன மாற்றங்களைக் கொண்டிருக்கிறது?

BS-6 இன்ஜின், Fi - ஸ்டார்ட் ஸ்டாப் வசதி... 2019 ஹோண்டா ஆக்டிவாவில் என்ன ஸ்பெஷல்?

டிசைன்: பார்க்க BS-4 மாடலைப் போலவெ இருந்தாலும், புதிய ஸ்கூட்டரை உற்றுநோக்கும்போது மாற்றங்கள் தென்படுகின்றன. LED ஹெட்லைட் மற்றும் வைஸர், முன்பைவிட ஷார்ப்பாகக் காட்சியளிக்கின்றன. க்ரோம் ஃபினிஷ் கொண்ட ஏப்ரன் பகுதியும் சற்றே மாறியிருக்கிறது. பக்கவாட்டுப் பகுதியில் புதிதாக இடம்பெற்றிருக்கும் க்ரோம் பட்டையில், Activa 125 எனப் பொறிக்கப்பட்டிருக்கிறது. டெயில் லைட் பார்க்க முந்தைய மாடலில் இருப்பதுபோலவே இருந்தாலும், அதிலும் பிராண்டிங் உடனான H வடிவ க்ரோம் ஃபினிஷ் எட்டிப்பார்க்கிறது. ரியர் வியூ மிரர்கள் முன்பைவிட அகலமாக இருப்பதுடன், ஹேண்டில்பாரில் Bar End Weights இருக்கின்றன. மொத்தம் 6 கலர்களில் (Rebel Red Metallic, Black, Heavy Grey Metallic, Midnight Blue Metallic, Pearl Precious White, Majestic Brown Metallic) வந்திருக்கும் ஆக்டிவா 125, முழுக்க மெட்டல் பாடி பேனல்களைக் கொண்டிருப்பது பெரிய ப்ளஸ். ஆனால் LED ஹெட்லைட் மற்றும் DRL-க்கு மேட்சிங்காக, டெயில் லைட்டிலும் LED இருந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. அதேபோல பின்பக்கத்திலும் 12 இன்ச் வீல் இருந்திருக்கலாம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

BS-6 இன்ஜின், Fi - ஸ்டார்ட் ஸ்டாப் வசதி... 2019 ஹோண்டா ஆக்டிவாவில் என்ன ஸ்பெஷல்?

சிறப்பம்சங்கள்: போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, 'ஸ்கூட்டரில் விலைக்கேற்ற வசதிகள் இல்லை' என்ற குறைபாடு இருந்தது; எனவே, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் அதிக சிறப்பம்சங்களைச் சேர்த்திருக்கிறது ஹோண்டா. வழக்கமான செல்ஃப் ஸ்டார்ட்டருடன் ஒப்பிடும்போது, இந்த ஸ்கூட்டரின் செல்ஃப் ஸ்டார்ட் அமைப்பு Alternator-இடமிருந்து நேரடியாகப் பவர் பெறுவதால், சத்தமில்லாமல் ஸ்கூட்டரை உயிர்ப்பிக்கலாம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஹீரோவின் 125சிசி ஸ்கூட்டர்களைப் போலவே, இதுவும் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதியைப் பெற்றுள்ளது. இதனால் முன்பைவிட மைலேஜ் கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். மற்றபடி பழைய மாடலில் இல்லாத வசதிகளான பாஸ் லைட் ஸ்விட்ச், External Fuel-Filler, முன்பக்க க்ளோவ் பாக்ஸ் (கிராஸியாவில் இருப்பதுபோல) ஆகியவை, புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டர் வசம் வந்திருக்கின்றன. அனலாக் டிஜிட்டல் மீட்டரில் சைடு ஸ்டாண்டு/Eco ஸ்பீடு/ சர்வீஸ் இண்டிகேட்டர்களைத் தவிர, ரியல் டைம் மைலேஜ் மற்றும் Distance-to-Empty ஆகியவை கூடுதலாகத் தெரிகின்றன. Side Stand Inhibitor அம்சம் இருப்பதால், ஒருவேளை நீங்கள் சைடு ஸ்டாண்டை எடுக்காமல் வண்டியை ஸ்டார்ட் செய்ய முயன்றால், இன்ஜின் ஆன் ஆகாது மக்களே! 

BS-6 இன்ஜின், Fi - ஸ்டார்ட் ஸ்டாப் வசதி... 2019 ஹோண்டா ஆக்டிவாவில் என்ன ஸ்பெஷல்?

இன்ஜின்: BS-4 மாடல் போலவே, BS-6 மாடலில் இருப்பதும் 125சிசி இன்ஜின்தான்; ஆனால், இதில் கார்புரேட்டருக்குப் பதிலாக, ஹோண்டாவின் பிரத்யேகமான ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் (PGM-Fi) சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் HET தொழில்நுட்பத்துடன் eSP இணைந்திருக்கிறது. Enhanced Smart Power என அழைக்கப்படும் இது, ‘optimises energy output by maximising efficient combustion’ என்கிறது இந்த நிறுவனம். இவை இயங்குவதற்கு ஏதுவாக ECU புதிதாக வந்திருப்பதால், ஸ்கூட்டரின் கண்டிஷன் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்வது சுலபம் எனலாம். இதனுடன் இன்ஜினின் Combustion Chamber, Tumble Flow பாணியில் காம்பேக்ட்டாக மாறியிருக்கிறது. இதுபோன்ற புதிய விஷயங்களால், முன்பைவிடப் புதிய மாடல் 10-15% அதிக மைலேஜ் கிடைக்கும் எனத் தெரியவந்துள்ளது. ஆக்டிவா 125-ன் டெக்னிக்கல் விபரங்கள் இன்னும் வரவில்லை.

BS-6 இன்ஜின், Fi - ஸ்டார்ட் ஸ்டாப் வசதி... 2019 ஹோண்டா ஆக்டிவாவில் என்ன ஸ்பெஷல்?

முதல் தீர்ப்பு: ஆக்டிவா 125 (BS-4 வெர்ஷன்), 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலைகள், முறையே 63,788 - 65,724 - 68173 என்ற அளவில் இருக்கின்றன. இதை வைத்துப் பார்க்கும்போது, BS-6 வெர்ஷனின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை, 70,000 ரூபாயைத் தாண்டுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. செப்டம்பர் 2019 வாக்கில் இது விற்பனைக்கு வரும் எனத் தகவல் வந்திருக்கிறது. எனவே, அந்த நேரத்தில் தற்போதைய மாடலின் விற்பனை மற்றும் உற்பத்தி நிறுத்தப்படலாம். ஏற்கெனவே ஹோண்டாவின் பிரதான போட்டியாளரான ஹீரோ, ஸ்ப்ளெண்டர் ஐ-ஸ்மார்ட் 110 பைக்கின் BS-6 வெர்ஷனைக் கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. ஏப்ரல் 1, 2020 முதலாக இந்தியாவே BS-6 மாசு விதிகளுக்கு மாறப்போகும் நிலையில், இதுபோன்ற தயாரிப்புகள் BS-6 வாகனங்கள் எப்படி இருக்கும் என்பதற்கான விடையாக இருக்கின்றன. ஆனால், மக்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பது காலத்துக்கே தெரியும்!

BS-6 இன்ஜின், Fi - ஸ்டார்ட் ஸ்டாப் வசதி... 2019 ஹோண்டா ஆக்டிவாவில் என்ன ஸ்பெஷல்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism