Published:Updated:

Elon musk தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது; இந்தியாவுக்கு வருகிறதா டெஸ்லா?!

Elon Musk | எலான் மஸ்க்

"இந்தியாவில் எப்போது டெஸ்லா கார்கள் அறிமுகம் செய்யப்படும்?" என Elon musk யிடம் கேட்டுள்ளார்.

Elon musk தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது; இந்தியாவுக்கு வருகிறதா டெஸ்லா?!

"இந்தியாவில் எப்போது டெஸ்லா கார்கள் அறிமுகம் செய்யப்படும்?" என Elon musk யிடம் கேட்டுள்ளார்.

Published:Updated:
Elon Musk | எலான் மஸ்க்

Elon musk -கின் டெஸ்லா நிறுவனம் அதிநவீன எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் உலகளவில் முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் டெஸ்லா நிறுவன கார்களை விற்பனை செய்ய நெடுங்காலமாக முயற்சித்து வருகிறார் எலான் மஸ்க். ஆனால் டெஸ்லா நிறுவனம் கோரியுள்ள இறக்குமதி வரி குறைப்பு கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதுவே இந்த தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் டிவிட்டரில் பிரனாய் பத்தோல் என்பவர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து, "இந்தியாவில் எப்போது டெஸ்லா கார்கள் அறிமுகம் செய்யப்படும்?" எனக் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், அதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், அதில் இந்திய அரசுடனான நிறைய சவால்களைச் சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

அதற்கு பதில் ட்வீட் செய்த தெலுங்கானா அமைச்சர் கே.டீ ராமாராவ், "தான் இந்தியாவில் உள்ள தெலங்கானா மாநிலத்தின் தொழிற்துறை அமைச்சர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு; தெலுங்கானா மாநிலத்தில் டெஸ்லா தொழிற்சாலை அமைக்க முழு ஒத்துழைப்பு தருவதாகவும் தெலங்கானா மாநிலம் தொழிற்துறை நிறுவனங்களுக்கும், புதிய தொழிற்சாலை அமைக்கவும் சிறந்த இடம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் டெஸ்லா நிறுவனத்தைத் தெலங்கானாவில் தொடங்க டெஸ்லா நிறுவனத்துடன் இணைந்து வேலை செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலமும் எலான் மஸ்க்குக்கு அழைப்பு விடுத்திருந்தது. மகாராஷ்டிராவின் நீர்வளத்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜெயந்த் பாட்டீல் தனது ட்விட்டர் பக்கத்தில், "டெஸ்லா கார் உற்பத்தித் தொழிற்சாலையை இந்தியாவில் அமைக்க மகாராஷ்டிரா மாநில அரசு தேவையான உதவிகளை வழங்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

இந்த நிலையில், தற்போது மன்னார்குடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ டிஆர்பி ராஜா எலான் மஸ்கின் பதிவை ரீட்வீட் செய்துள்ளார். அதில் "இந்தியாவின் டெட்ராய்ட் ஆன தமிழகத்திற்கு உங்களை வரவேற்கிறோம் எலான் மஸ்க்! தமிழகத்தில் தொழிற்சாலை அமைப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், எங்களது திறமையான இளைஞர்கள் நீங்கள் வேலையில் கவனம் செலுத்தும்போது அனைத்து சவால்களையும் சமாளிக்க உங்களுக்கு உதவுவார்கள்" என்றும் கூறியுள்ளார். மேலும், நாம் ஒன்றாக சேர்ந்து ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவோம் என பதிவிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism