Published:Updated:

வெறும் 5 நாள்கள் இல்லை; 59 நாள்கள் - விற்பனை பாதிப்பால் அவதிப்படும் அசோக் லேலாண்ட்!

ரஞ்சித் ரூஸோ

செபி விதிமுறைப்படி தகவல் கொடுத்துள்ளது அஷோக் லேலாண்ட்

அசோக் லேலாண்ட்
அசோக் லேலாண்ட்

அசோக் லேலாண்ட், இந்த செப்டம்பர் மாதம் 5 நாள்கள் தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கொடுத்துள்ளதாகச் செய்திகள் வந்திருந்தன. இதற்கு அசோக் லேலாண்ட் தரப்பில் எந்தப் பதிலும் வராதிருந்த நிலையில், இவை குறித்து பங்குச்சந்தையில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதனால், SEBI-யின் விதிமுறைக்கு இணங்க, ''இந்தியாவில் உள்ள தனது வெவ்வேறு தொழிற்சாலைகளுக்கு சில நாள்கள் விடுமுறை அறிவித்திருப்பதாக'' பதில் அளித்துள்ளது அசோக் லேலாண்ட்.

அசோக் லேலாண்ட் அறிவித்த விடுமுறைகள்
அசோக் லேலாண்ட் அறிவித்த விடுமுறைகள்

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலையால் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் அசோக் லேலண்ட் மட்டும் ஆகஸ்ட் மாதம் 50.11 சதவிகிதம் அளவுக்கு விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. உள்நாட்டு விற்பனை மட்டுமல்ல, ஏற்றுமதியிலும் 46..91 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளது இந்நிறுவனம்.

அசோக் லேலாண்ட் தொழிற்சாலை
அசோக் லேலாண்ட் தொழிற்சாலை

இந்த விற்பனை பாதிப்பால் தற்போது எண்ணூர் தொழிற்சாலையில் மட்டுமே 24,000 வாகனங்கள் தேங்கியுள்ளதாக அங்கு பணிபுரியும் சில தொழிலாளர்கள் கூறுகிறார்கள். வாகனங்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைவதைத் தடுப்பதற்கு ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் சில நாள்கள் விடுமுறை என, மொத்தம் 59 நாள்கள் வரை விடுமுறை அறிவித்திருக்கிறது. இந்த விடுமுறைகள் எல்லாமே சம்பளம் இல்லா விடுமுறையாகவே கருதப்படுகிறதாம். 

எந்தெந்த தொழிற்சாலையில் எத்தனை நாள்கள் விடுமுறை

  • எண்ணூர் - 16

  • ஓசூர் - 5

  • ஆல்வார், ராஜஸ்தான் - 10

  • பாந்த்ரா, மும்பை - 10

  • பாட்நகர், உத்தராகண்ட் - 18 

அசோக் லேலாண்ட்
அசோக் லேலாண்ட்

தமிழகத்தில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளில் மட்டும் மொத்தம் 21 நாள்கள் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விடுமுறைகள் வெறும் செப்டம்பர் மாதம்வரை மட்டுமே. அதற்குள் வாகன விற்பனை அதிகரிக்கவில்லை என்றால், மேலும் சில நாள்கள் தொழிற்சாலை மூடப்படலாம். இதுகுறித்து அசோக் லேலாண்ட் நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முயன்றோம். எந்தப் பதிலும் வரவில்லை.