Published:Updated:

இது கார் வாங்க ஏற்ற நேரம்... எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி?

ஏறக்குறைய ஓராண்டாகப் புதிய வாகன விற்பனை கடுமையான சரிவில் (40% வரை) இருந்ததால், இம்முறை வழங்கப்படும் ஆஃபர்கள் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது எனலாம்.

S-Presso
S-Presso ( Maruti Suzuki )

பண்டிகை காலம் என்பதால், வாகன உற்பத்தியாளர்கள் வழக்கம்போல தள்ளுபடிகளை வாரியிறைக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏறக்குறைய ஓராண்டாக புதிய வாகன விற்பனை கடுமையான சரிவில் (40% வரை) இருந்ததால், இம்முறை வழங்கப்படும் ஆஃபர்கள் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது எனலாம். டிஸ்கவுன்ட், எக்ஸ்சேஞ்ச், கார்ப்பரேட் ஆஃபர்கள் தவிர, தான் தயாரிக்கும் அனைத்து கார்களின் எக்ஸ்-ஷோரும் விலையிலும் 5,000 ரூபாயைக் குறைத்து, ஆஃபர் மேளாவைத் தொடங்கிவைத்தது மாருதி சுஸுகி. தவிர 2020, ஏப்ரல் மாதத்தில் நாடெங்கும் BS-6 விதிகள் அமலுக்கு வருவதால், டீலர்கள் தங்கள் வசம் வைத்திருக்கும் BS-4 வாகனங்களை விற்பனை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் டீலர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Punto Evo
Punto Evo
Fiat India

ஃபியட் இந்தியா ஆஃபர்கள்

லீனியா - 60,000 ரூபாய் வரை

அர்பன் க்ராஸ் - 50,000 ரூபாய் வரை

அவென்ச்சுரா - 1,10,000 ரூபாய் வரை

புன்ட்டோ - 70,000 ரூபாய் வரை

அபார்த் புன்ட்டோ - 50,000 ரூபாய் வரை

ஃபோர்டு இந்தியா

ஃப்ரிஸ்டைல் - எக்ஸ்சேஞ்ச் போனஸ் (15,000 ரூபாய்) + கேஷ் டிஸ்கவுன்ட் (10,000 ரூபாய்)

ஆஸ்பயர் - 30,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் போனஸ் (15,000 ரூபாய்) + கேஷ் டிஸ்கவுன்ட் (15,000 ரூபாய்)

எக்கோஸ்போர்ட் - 7.99% ROI, Assured Gift, Lucky Draw (மேலே உள்ள ஃபோர்டு கார்களுக்கு இவை பொருந்தும்)

Figo & Aspire
Figo & Aspire
Ford India
இதுதான் அந்த கார்..!- சீன அதிபர் பயன்படுத்தும் ஹன்கோவில் அப்படி என்ன விசேஷம்?

ஹோண்டா கார்ஸ் இந்தியா

அமேஸ்: பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்தால்/ எக்ஸ்சேஞ்ச் செய்யாவிட்டால்

4,5-வது ஆண்டுக்கான வாரன்ட்டி (12,000 ரூபாய்) + எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் (30,000 ரூபாய்)

4,5-வது ஆண்டுக்கான வாரன்ட்டி (12,000 ரூபாய்) + Care Maintenance Program (16,000 ரூபாய்)

ஜாஸ்: 25,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 25,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்)

WR-V: 25,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 20,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்)

சிட்டி: 32,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 30,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்)

BR-V: 33,500 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 50,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்) + 26,500 ரூபாய் (ஆக்ஸசரீஸ்)

சிவிக்: டீசல் மாடல்களுக்கு 2,50,000 ரூபாய் வரை ஆஃபர்கள், பெட்ரோல் VCVT - 2,00,000 ரூபாய் வரை ஆஃபர்கள், பெட்ரோல் VX CVT, ZX CVT - 75,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 25,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்)

CR-V: டீசல் 1.6 4WD 9AT - 5 லட்ச ரூபாய் வரை ஆஃபர்கள், டீசல் 1.6 2WD 9AT - 4 லட்ச ரூபாய் வரை ஆஃபர்கள்

(சிவிக் & CR-V கார்களுக்கு, GUARANTEED VALUE BUYBACK PROGRAM மற்றும் FINANCE & LEASING வசதி உண்டு)

MU-X
MU-X
Isuzu India

இசுஸூ மோட்டார்ஸ் இந்தியா

50,000 ரூபாய் முதல் 2,00,000 ரூபாய் வரை தள்ளுபடிகள்

மஹிந்திரா இந்தியா

XUV 3OO - 25,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்)

மராத்ஸோ - 21,750 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 15,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்) + 7,000 ரூபாய் (கார்ப்பரேட் ஆஃபர்)

XUV 5OO - 22,200 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 25,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்) + 9,000 ரூபாய் (கார்ப்பரேட் ஆஃபர்)

ஸ்கார்ப்பியோ - 22,200 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 15,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்) + 5,000 ரூபாய் (கார்ப்பரேட் ஆஃபர்)

அல்ட்டுராஸ் - 15,000 ரூபாய் (கார்ப்பரேட் ஆஃபர்)

பொலெரோ பவர் ப்ளஸ் - 8,515 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 10,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்) + 4,000 ரூபாய் (கார்ப்பரேட் ஆஃபர்)

தார் - 31 ஆயிரம் ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 6,000 ரூபாய் (கார்ப்பரேட் ஆஃபர்)

TUV 3OO - 39,720 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 35,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்) + 4,500 ரூபாய் (கார்ப்பரேட் ஆஃபர்)

KUV 1OO NXT - 23,580 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 30,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்) + 4,000 ரூபாய் (கார்ப்பரேட் ஆஃபர்)

XUV 3OO
XUV 3OO
Mahindra
பைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு

மாருதி சுஸூகி இந்தியா

ஆல்ட்டோ 800 - 40,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 15,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்) + 5,000 ரூபாய் (கார்ப்பரேட் ஆஃபர்)

ஆல்ட்டோ K10 - 35,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 15,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்) + 5,000 ரூபாய் (கார்ப்பரேட் ஆஃபர்)

ஸ்விஃப்ட் (பெட்ரோல்) - 25,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 20,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்) + 5,000 ரூபாய் (கார்ப்பரேட் ஆஃபர்)

ஸ்விஃப்ட் (டீசல்) - 30,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 20,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்) + 10,000 ரூபாய் (கார்ப்பரேட் ஆஃபர்) + 5 வருட வாரன்ட்டி

விட்டாரா பிரெஸ்ஸா - 45,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 20,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்) + 10,000 ரூபாய் (கார்ப்பரேட் ஆஃபர்) + 5 வருட வாரன்ட்டி

டிசையர் (பெட்ரோல்) - 30,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 20,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்) + 5,000 ரூபாய் (கார்ப்பரேட் ஆஃபர்)

டிசையர் (டீசல்) - 35,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 20,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்) + 10,000 ரூபாய் (கார்ப்பரேட் ஆஃபர்) + 5 வருட வாரன்ட்டி

செலெரியோ - 35,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 20,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்) + 5,000 ரூபாய் (கார்ப்பரேட் ஆஃபர்)

ஈக்கோ (5 சீட்டர்) - 15,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 20,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்) + 5,000 ரூபாய் (கார்ப்பரேட் ஆஃபர்)

ஈக்கோ (7 சீட்டர்) - 25,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 20,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்) + 5,000 ரூபாய் (கார்ப்பரேட் ஆஃபர்)

Go Plus தள்ளுபடி
Go Plus தள்ளுபடி
Datsun India

டட்ஸன் இந்தியா

ரெடி-கோ: 27,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 30,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்) + 5,000 ரூபாய் (கார்ப்பரேட் ஆஃபர்)

கோ: 10,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 20,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்) + 2,000 ரூபாய் (கார்ப்பரேட் ஆஃபர்)

கோ ப்ளஸ்: 7,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 20,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்) + 2,000 ரூபாய் (கார்ப்பரேட் ஆஃபர்)

ரெனோ இந்தியா

க்விட் - 10,000 ரூபாய் (லாயல்ட்டி போனஸ்) + 4 வருட வாரன்ட்டி

ரெனோ கேப்ச்சர் - 1,00,000 ரூபாய் வரை தள்ளுபடி

டஸ்ட்டர் - 25,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 20,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்) அல்லது 10,000 ரூபாய் (லாயல்ட்டி போனஸ்)

Kwid Facelift
Kwid Facelift
Renault India
Bluetooth அப்பாச்சி, ஜூபிட்டர் Grande, Matte ஸ்கூட்டி, ரேடியான் SE... கமான் டிவிஎஸ்!

ஃபோக்ஸ்வாகன் இந்தியா

போலோ: 1,11,000 ரூபாய் வரை ஆஃபர்கள்

ஏமியோ: 1,47,000 ரூபாய் வரை ஆஃபர்கள்

வென்ட்டோ: 1,80,000 ரூபாய் வரை ஆஃபர்கள்

(முன்னே சொன்ன ஃபோக்ஸ்வாகன் கார்களின் டீசல் மாடல்களுக்கும், 5 வருட வாரன்ட்டி மற்றும் RSA உண்டு)