Published:Updated:

300சிசி மற்றும் 650சிசி பைக்ஸ்... 2.29 - 5.49 லட்சம் விலை... CFMoto பைக்குகளில் என்ன ஸ்பெஷல்?

CFMoto 650MT
CFMoto 650MT ( AMW Motorcycles )

இவற்றின் புக்கிங் ஆகஸ்ட் 5, 2019 முதல் ஆரம்பமாவதுடன், அக்டோபர் 2019 முதலாக டெலிவரிகள் தொடங்கும் எனத் தகவல் வந்திருக்கிறது. நான்கு பைக்குகளுக்கும் 2 வருட வாரன்ட்டி ஸ்டாண்டர்டு என்பதுடன், தேவைப்பட்டால் 5 வருடம் வரை அதை நீட்டித்துக்கொள்ளலாம்.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் AMW மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம், இந்தியாவில் தனது விலைகுறைவான மாடலாக CFMoto 300NK பைக்கை, 2.29 லட்ச ரூபாய்க்கு (அறிமுக இந்திய எக்ஸ் ஷோரூம் விலை) களமிறக்கியுள்ளது. இதனுடன் மூன்று 650சிசி பைக்குகளும் (650NK, 650MT, 650GT) விற்பனைக்கு வந்திருக்கிறது; இவற்றின் புக்கிங் ஆகஸ்ட் 5, 2019 முதல் ஆரம்பமாவதுடன், அக்டோபர் 2019 முதலாக டெலிவரிகள் தொடங்கும் எனத் தகவல் வந்திருக்கிறது. நான்கு பைக்குகளுக்கும் 2 வருட வாரன்ட்டி ஸ்டாண்டர்டு என்பதுடன், தேவைப்பட்டால் 5 வருடம் வரை அதை நீட்டித்துக் கொள்ளலாம். நம் ஊர்ச் சாலைகளில் CFMoto 250NK பைக் டெஸ்ட்டிங் செய்யப்பட்ட நிலையில், அதே சீரிஸில் 300சிசி பைக்கை தடாலடியாகக் கொண்டுவந்திருக்கிறது AMW மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம். இதில் என்ன இருக்கிறது?

CFMoto 300NK - டிசைன், வசதிகள், இன்ஜின்

பிஎம்டபிள்யூ G310R, ஹோண்டா CB300R, கேடிஎம் டியூக் 390, ராயல் என்ஃபீல்டு 650சிசி பைக்ஸ், டிவிஎஸ் அப்பாச்சி RR310 ஆகிய பைக்குகளுடன் போட்டியிடுகிறது CFMoto 300NK. பெரிய 12.5 லிட்டர் பெட்ரோல் டேங்க்குடன், பார்க்க கட்டுமஸ்தாகக் காட்சியளிக்கிறது. கவுல் உடனான ஹெட்லைட் மற்றும் பக்கவாட்டுப் பகுதியில் உள்ள ட்ரெல்லிஸ் ஃப்ரேமைப் பார்க்கும்போது, கேடிஎம் டியூக் 250 பைக் நினைவுக்கு வருகிறது! தவிர டியூக் 390 போலவே, இங்கும் TFT டிஸ்பிளே (Rain & Sport மோடு உண்டு) - முழுக்க LED லைட்டிங் - ஸ்ப்ளிட் சீட்கள் - சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார் இடம்பெற்றிருக்கிறது. நேக்கட் ஸ்போர்ட் பைக்கான இதில் இருப்பது, 292.4சிசி - லிக்விட் கூலிங் - DOHC - 4 வால்வ் - Bosch ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் உடனான சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி;

CFMoto 300NK
CFMoto 300NK
AMw Motorcycles

இது 34bhp@7,200rpm பவர் மற்றும் 2.05kgm@@8,800rpm டார்க்கை வெளிப்படுத்துகிறது. பேலன்சர் ஷாஃப்ட் இருப்பதால், இந்த ஷார்ட் ஸ்ட்ரோக் இன்ஜினில் (78mm Bore×61.2mm Stroke) அதிர்வுகள் கட்டுப்படுத்தப் பட்டிருக்கும் என நம்பலாம். USD ஃபோர்க் - மோனோஷாக், 17 இன்ச் ரேடியல் CST டியூப்லெஸ் டயர்கள் (முன்: 110/70 R17, பின்: 140/60 R17), Continental டூயல் சேனல் ஏபிஎஸ் உடனான Ji-Juan டிஸ்க் பிரேக்ஸ் என மெக்கானிக்கல் பாகங்களும் அப்டேட்டட் ரகம். 151 கிலோ எடை மற்றும் 150மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் தவிர, நீல நிற அலாய் வீல்கள் உண்டு.

CFMoto 650NK மற்றும் 650MT - இதில் என்ன எதிர்பார்க்கலாம்?

CFMoto 650NK
CFMoto 650NK
AMW Motorcycles

CFMoto 650NK எதிர்பார்த்தபடியே, CFMoto 300NK விட பல்க்காக இருக்கிறது. இது சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் CFMoto 400NK பைக்கின் ஜெராக்ஸ் போலவே உள்ளது. எனவே, ஷார்ட் ஸ்ட்ரோக் இன்ஜின் (83mm Bore×60mm ஸ்ட்ரோக்) தவிர்த்து, இரு பைக்கின் டெக்னிக்கல் அம்சங்கள் ஒரே மாதிரி இருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை! 650சிசி பைக்குகளில் குறைவான பவர் மற்றும் எடை கொண்ட பைக் இதுதான்; 180கிமீ டாப் ஸ்பீடு கொண்ட CFMoto 650NK-ன் அறிமுக இந்திய எக்ஸ் ஷோரூம் விலை 3.99 லட்சம்.

140மிமீ டிராவலுடன் கூடிய USD ஃபோர்க், Knuckle Guards, அட்ஜஸ்டபிள் விண்ட் ஸ்க்ரீன், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், சிங்கிள் பீஸ் சீட், உயரமாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் LED ஹெட்லைட் எனப் பக்காவான ADV டூரர் பைக்காக ஈர்க்கிறது CFMoto 650MT. 650சிசி மாடல்களில் பவர்ஃபுல் மாடலான இது, CFMoto 650NK பைக்கைவிட 12 கிலோ அதிக எடையைக் கொண்டிருக்கிறது. 17 இன்ச் Metzeler டியூப்லெஸ் ரேடியல் டயர்கள் கொண்ட CFMoto 650MT பைக்கின் டாப் ஸ்பீடு 170கிமீ. 18 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருப்பது ப்ளஸ்.

CFMoto 650MT
CFMoto 650MT
AMw Motorcycles

CFMoto 650GT பைக் - ஒரு சிறப்புப் பார்வை!

CFMoto 650GT
CFMoto 650GT
AMW Motorcycles

``சிறப்பான மிட் ரேஞ்ச் பர்ஃபாமன்ஸ் மற்றும் ஃபுல் பேரிங்குடன் ஒரு மிடில் வெயிட் ஸ்போர்ட்ஸ் டூரர் வேண்டுமா?'' - 19 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்ட CFMoto 650GT அதற்கான பதிலாக இருக்கும் என்கிறது AMW மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம். 60மிமீ வரை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பெரிய விண்ட் ஷீல்டு, L வடிவ LED DRL மற்றும் LED ஹெட்லைட், குறைவான 795மிமீ சீட் உயரம் ஆகியவை அதற்கு மேலும் வலுசேர்க்கின்றன. 649.3சிசி, பேரலல் ட்வின் இன்ஜினின் கியரிங் மற்றும் ஸ்ப்ராக்கெட், ஆக்ஸிலரேஷனுக்காக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. KYB நிறுவனத்தின் 38மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக், சொகுசான பயணத்தை மனதில் வைத்து டியூன் செய்யப்பட்டுள்ளது.

CFMoto 650MT
CFMoto 650MT
AMW Motorcycles

இந்த 650சிசி பைக்குகளில் அதிக எடை கொண்ட பைக் (226 கிலோ) இதுதான் என்பதுடன், வழக்கமான முறையிலான பக்கவாட்டு எக்ஸாஸ்ட்டும் உள்ளன. மற்ற 650சிசி பைக்குகளில் Underbelly எக்ஸாஸ்ட் இருக்கிறது. டூரிங் மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரு மோடுகளுடன் கூடிய 5 இன்ச் TFT டிஸ்பிளே தவிர, USB மற்றும் 12V சார்ஜிங் பாயின்ட் வழங்கப்பட்டிருக்கிறது. AMW மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்துக்கு இந்தியாவில் ஏற்கெனவே 7 டீலர்கள் இருக்கும் நிலையில், டெல்லி மற்றும் புனேவில் அடுத்தபடியாக டீலர்ஷிப் நிறுவப்பட இருக்கிறது. CFMoto 650MT மற்றும் CFMoto 650GT பைக்கின் அறிமுக இந்திய எக்ஸ் ஷோரூம் விலைகள், முறையே 4.99 லட்சம் மற்றும் 5.49 லட்ச ரூபாய் ஆகும். இந்த மூன்று 650சிசி பைக்குகளும், கவாஸாகியின் 650 சீரிஸ் பைக்குகளுடன் போட்டி போடுகின்றன.

அடுத்த கட்டுரைக்கு