Published:Updated:

ரூ.190 கோடி முதலீடு - தமிழ்நாட்டில் டூசன் பாப்கேட்டின் முதல் இந்தியத் தொழிற்சாலை!

ரஞ்சித் ரூஸோ

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.190 கோடி முதலீடு செய்யவுள்ளதாகச் சொல்கிறது டூசன் பாப்கேட் இந்தியா நிறுவனம்.

டூசன் பாப்கேட் சென்னைத் தொழிற்சாலை
டூசன் பாப்கேட் சென்னைத் தொழிற்சாலை

வானத்தை தொடும் ஸ்கை ஸ்கிரேப்பர் முதல் பாதாளத்தில் பறக்கும் மின்னல் வேக மெட்ரோ ரயில் வரை எந்தக் கட்டுமானமாக இருந்தாலும், அங்கு டூசன் பாப்கேட் (Doosan Bobcat) நிறுவனத்தின் இயந்திரங்கள் மிகவும் பிரபலம். கொரிய நிறுவனமான டூசன் பாப்கேட்டின் துணை நிறுவனமான டூசன் பாப்கேட் இந்தியா, தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலையைத் திறந்துள்ளது.

B900 பேக்ஹோ லோடர்
B900 பேக்ஹோ லோடர்
டூசன் பாப்கேட் (Doosan Bobcat)

இந்தியாவில் திறக்கப்படும் முதல் தொழிற்சாலை இது. சென்னைக்கு அருகே உள்ள கும்மிடிப்பூண்டியில் திறக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கிவிட்டது. 21.6 ஏக்கரில் திறக்கப்பட்ட இதில் ஒரு ஆண்டுக்கு 8000 பி900 வகை பேக்ஹோ லோடர்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்தத் தொழிற்சாலையில் அடுத்த 5 ஆண்டுகளில் 190 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது இந்நிறுவனம்.

Vikatan

தயாரிப்பு தொழிற்சாலை, அசெம்ப்ளி, சேமிப்புக் கிடங்கு மற்றும் பெயின்ட் ஷாப் கொண்ட இந்தத் தொழிற்சாலையை முழுக்க முழுக்க சென்னையில் உள்ள டீம் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் மினி எக்ஸ்கவேட்டர் மற்றும் ஸ்கிட் ஸ்டீர் லோடர் போன்ற இயந்திரங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது.

ஸ்கிட் ஸ்டீர் லோடர்
ஸ்கிட் ஸ்டீர் லோடர்
Doosan Bobcat

புதிதாக இந்தியாவுக்கு வரும் இந்த பேக்ஹோ லோடர்கள் இங்கு விற்பனை செய்யப்படுவது மட்டுமல்லாமல் ஏற்றுமதியும் செய்யப்படவுள்ளன. இந்நிறுவனத்துக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா உட்பட 9 நாடுகளில் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இப்பட்டியலில் இப்போது இந்தியாவும் இணைந்துவிட்டது.