Published:Updated:

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் களமிறங்கும் புதிய வாகனங்கள் என்னென்ன?!

Rahul Sharma
News
Rahul Sharma ( Revolt Motors )

2-வீலர், 4-வீலர், கமர்ஷியல் என அனைத்து செக்மென்ட்டிலும் புதிய வாகனங்களின் விற்பனை இறங்குமுகத்திலேயே இருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே, இந்திய ஆட்டோமொபைல் துறைக்குப் போதாத காலம். ஆம், 2-வீலர், 4-வீலர், கமர்ஷியல் என அனைத்து செக்மென்ட்டிலும் புதிய வாகனங்களின் விற்பனை என்பது இறங்குமுகத்திலேயே இருக்கிறது. ஆனாலும், வாகன உற்பத்தியாளர்கள் அதைப் பொருட்படுத்தாது, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில்கொண்டு, தமது புதிய தயாரிப்புகளைக் களமிறக்க முடிவு செய்திருக்கின்றன.

அத்துடன், ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸூகி மற்றும் ஹூண்டாய், கியா மோட்டார்ஸ் மற்றும் ரிவோல்ட் மோட்டார்ஸ் எனும் புதிய நிறுவனங்களின் அறிமுகம் என ஆகஸ்ட் மாதத்தில் ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு ஏகப்பட்ட தீனி காத்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ரெனோ ட்ரைபர் - ஆகஸ்ட் 2019

4 மீட்டருக்குட்பட்ட தனது காம்பேக்ட் எம்பிவியை, ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது பாதியில் விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது ரெனோ. ட்ரைபர் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த 7 சீட்டர், க்விட் தயாரிக்கப்படும் CMF-A ப்ளாட்ஃபார்மை (Modified) அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட்டிருக்கிறது.

Triber MPV
Triber MPV
Renault India

எனவே எதிர்பார்த்தபடியே, அந்த காருக்கு மேலேதான் இது பொசிஷன் செய்யப்படும். ட்ரைபரில் பொருத்தப்பட்டுள்ள 1.0 லிட்டர் - 3 சிலிண்டர் - NA BS-4 பெட்ரோல் இன்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்/AMT கூட்டணி, 72bhp பவர் மற்றும் 9.6kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த காரின் மூன்றாவது வரிசை இருக்கையை மடக்கினால், 625 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைப்பது பெரிய ப்ளஸ்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரிவோல்ட் RV 400 - ஆகஸ்ட் 7, 2019

''இந்தியாவின் முதல் AI உடனான எலெக்ட்ரிக் பைக்'' என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான RV 400 பைக்கின் விலை மற்றும் பவர்/டார்க் விவரங்கள், ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற அதன் அறிமுக விழாவில் சொல்லப்படவில்லை. அமேசானில் இதன் புக்கிங் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டுவிட்ட நிலையில் (டெல்லி மற்றும் புனே மட்டும்), ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் RV 400 எலெக்ட்ரிக் பைக்கின் விலையை அறிவிக்க உள்ளது ரிவோல்ட் மோட்டார்ஸ்.

Revolt RV 400
Revolt RV 400
Revolt Motors

அடுத்த 4 மாதங்களில் சென்னை - ஹைதராபாத் - மும்பை - அஹமதாபாத் - கொல்கட்டா - பெங்களூரு ஆகிய மாநிலங்களில் இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவப்பு மற்றும் கறுப்பு என இரு நிறங்களில் கிடைக்கும் RV 400, LED லைட்டிங் - டிஜிட்டல் மீட்டர் - 4G கனெக்ட்டிவிட்டி, USD ஃபோர்க் மற்றும் மோனோஷாக், டிஸ்க் பிரேக்ஸ் எனச் சிறப்பம்சங்களிலும் ஸ்கோர் செய்கிறது.

பைக் Tracking, ரியல் டைம் ரேஞ்ச், பைக்கில் பிரச்னை ஏற்பட்டால் Notification, செயற்கையான எக்ஸாஸ்ட் சத்தம் ஆகிய வசதிகளை, Revolt மொபைல் App கொண்டிருக்கிறது. சிங்கிள் சார்ஜில் 156 கிமீ தூரம் செல்லக்கூடிய RV 400, அதிகபட்சமாக 85 கிமீ வேகம் வரைச் செல்லும்.

ஹூண்டாய் கிராண்ட் i10 - ஆகஸ்ட் 20, 2019

இரண்டாம் தலைமுறை கிராண்ட் i10 காரை, தனது லேட்டஸ்ட் டிசைன் கோட்பாடுகளின்படி வடிவமைத்திருக்கிறது ஹூண்டாய். அதன்படி அகலமான கிரில், புதிய அலாய் வீல்கள் மற்றும் டெயில் லைட்ஸ், ஷார்ப்பான ஹெட்லைட்ஸ் என கார் பார்க்க அசத்தலாக இருக்கும். கேபினில் இருக்கும் புதிய டேஷ்போர்டு மற்றும் சீட்கள், இடவசதியை அதிகரிக்கும் நோக்கத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

Grand i10
Grand i10
Reader Spy

அதில் அனலாக் டிஜிட்டல் மீட்டர், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உடனான 8 இன்ச் டச் ஸ்க்ரீன் (வென்யூவில் இருக்கும் அதே சிஸ்டம்) என இன்டீரியரில் மாடர்ன் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. புதிய கிராண்ட் i10 காரில், BS-6 மாசு விதிகளுக்குட்பட்ட 1.2 லிட்டர் Kappa பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் U2 CRDi டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் பொருத்தப்படும். இவை 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. தற்போதைய கிராண்ட் i10 காரைவிட, புதிய மாடலின் விலை (5-7 லட்சம்) நிச்சயம் அதிகமாகவே இருக்கும்.

மாருதி சுஸூகி XL6 - ஆகஸ்ட் 21, 2019

எம்பிவியான எர்டிகாவை அடிப்படையாகக் கொண்டு, க்ராஸ்ஓவராக XL6 காரைத் தயாரித்துள்ளது மாருதி சுஸூகி. பாடி கிளாடிங், புதிய அலாய் வீல்கள் மற்றும் கிரில், உயர்த்தப்பட்ட முன்பக்கம், தட்டையான பானெட், LED DRL உடனான ஹெட்லைட்ஸ் என வெளிப்புறத்தில் மாற்றங்கள் தென்படுகின்றன.

Ertiga MPV
Ertiga MPV
Maruti Suzuki

காரின் பெயருக்கேற்றபடி, உட்புறத்தில் 6 சீட்கள் இருக்கின்றன; அதாவது நடுவரிசை இருக்கை, பெஞ்ச் சீட்டிலிருந்து கேப்டன் சீட்களாக மாறியிருக்கிறது. இதில் SHVS உடனான 1.5 லிட்டர் BS-6 பெட்ரோல் இன்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என இரு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வரும். எர்டிகாவில் 1.3 லிட்டர் SHVS / 1.5 லிட்டர் என இரு டீசல் இன்ஜின்கள் இருக்கும் சூழலில், இதில் எதாவது ஒன்று XL6 காரில் பயன்படுத்தப்படுமா என்பது, இனிவரும் நாள்களில் தெரியவரும்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் - ஆகஸ்ட் 21, 2019

ஏழாவது தலைமுறை 3 சீரிஸ் காரை, 5 சீரிஸ் மற்றும் 7 சீரிஸ் கட்டமைக்கப்படும் அதே CLAR (Cluster Architecture) ப்ளாட்ஃபார்மில் தயாரித்திருக்கிறது பிஎம்டபிள்யூ. எனவே தற்போதைய மாடலைவிட இது அளவில் பெரிதாகியிருந்தாலும், காரின் எடை குறைந்திருக்கிறது; முன்பைவிட அதிக பாதுகாப்பு வசதிகள் இருப்பதும் வரவேற்கத்தக்கது.

3 Series Sedan
3 Series Sedan
BMW India

புதிய 3 சீரிஸின் ஸ்டைலில் மாற்றமிருந்தாலும், இன்ஜின் ஆப்ஷன்களில் எந்த வித்தியாசமும் இருக்காது. எனவே அதே 2.0 லிட்டர் பெட்ரோல் (258bhp பவர் & 40kgm டார்க்) மற்றும் டீசல் (190bhp பவர் மற்றும் 40kgm டார்க்) இன்ஜின்கள் - 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்பே தொடர்கின்றன.

கியா செல்ட்டோஸ் - ஆகஸ்ட் 22, 2019

இந்திய ஆட்டோமொபைல் துறை கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கும் சூழலில், செல்ட்டோஸ் எஸ்யூவி மூலமாக இங்கே டயர் பதிக்கவிருக்கிறது கியா மோட்டார்ஸ். 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் SP-2i கான்செப்ட் ஆகக் காட்சிபடுத்தப்பட்ட நிலையில், அடுத்த ஒன்றரை வருடத்துக்குள்ளாகவே முழு காராக இதை இந்த நிறுவனம் வெளிக்கொண்டு வந்துவிட்டது. கியாவின் பிரத்யேகமான 'Tiger Nose' பாணி கிரில்லுடன், ஷார்ப்பான லைட்டிங் மற்றும் பம்பர்களுடன் கெத்தாக இருக்கிறது செல்ட்டோஸ். 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம். 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், In Car Wi-Fi, Heads Up டிஸ்பிளே, ஆம்பியன்ட் லைட்டிங் என அதிகப்படியான அம்சங்களுடன் இந்த எஸ்யூவி கவர்கிறது.

Seltos SUV
Seltos SUV
Kia Motors

வழக்கமான மாடல்களில் 1.5 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின் மற்றும் மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வந்தால், ஸ்போர்ட்ஸ் வெர்ஷனில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் - 7 ஸ்பீடு ட்வின் க்ளட்ச் கியர்பாக்ஸ் (பேடில் ஷிஃப்ட்டர் உடன்) அமைப்பு இருக்கும். இந்த காரின் புக்கிங் ஏற்கெனவே தொடங்கிவிட்டது (முதல் நாளில் மட்டும் 6,046).