Published:Updated:

தென்னிந்தியாவில் கேரளாதான் டாப்பர்... கார் விற்பனையில் கர்நாடகாவுக்கு அடுத்து தமிழ்நாடு!

ஒட்டுமொத்த இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவுக்குத்தான் முதலிடம். 2018 ஏப்ரல் முதல் 2019 மார்ச் வரை மகாராஷ்டிராவில் 3,54,480 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன.

கார்
கார்

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் கடந்த ஆண்டு எவ்வளவு கார்கள் விற்பனையாகியிருக்கின்றன என்கிற விவரம் வெளியாகியிருக்கிறது. இதில், தென்னிந்தியாவில் கேரளாதான் கார் விற்பனையில் டாப்பர். கடந்த ஆண்டு மட்டும் 2,52,639 கார்கள் அங்கு விற்பனையாகியிருக்கின்றன. இரண்டாவது இடத்தில் கர்நாடகா. 2,27,300 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. தமிழ்நாட்டில், கடந்த ஆண்டு 2,19,638 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன.

இசுசூ
இசுசூ

ஒட்டுமொத்த இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவுக்குத்தான் முதலிடம். 2018 ஏப்ரல் முதல் 2019 மார்ச் வரை மகாராஷ்டிராவில் 3,54,480 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. இரண்டாவது இடமாக உத்தரப்பிரதேசத்தில் 2,99,816 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. மூன்றாவது இடமாக குஜராத்தில் 2,84,763 கார்கள். அடுத்து கேரளா, கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழ்நாடு, இந்திய அளவில் ஆறாவது இடத்தில் உள்ளது.

கார் விற்பனையைப் பார்க்கும்போது, இந்தியாவின் மேற்குப் பகுதிதான் முன்னணியில் உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், கோவா ஆகிய மாநிலங்களைச் சேர்த்தால், 10,22,888 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. இரண்டாவது இடத்தில் வட மாநிலங்களும், மூன்றாவது இடத்தில் தென் மாநிலங்களும் கடைசி இடத்தில் கிழக்கு மாநிலங்களும் இருக்கின்றன.

ஃபோர்டு, ஜீப்
ஃபோர்டு, ஜீப்

பாண்டிச்சேரியில் 7,015 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. மிசோரம், சிக்கிம், அந்தமான் &நிக்கோபார் ஆகியவை இந்ந விற்பனைப் பட்டியலில் கடைசி மூன்று இடங்களில் இருக்கின்றன. அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் 2,120 கார்கள் கடந்த ஆண்டில் விற்பனையாகின.