Published:Updated:

சட்டம் மிரட்ட... போலீஸ் விரட்ட... `அம்மாடியோவ்' என அதிகரித்த இன்ஷூரன்ஸ் விநியோகம்! #CanYouGuess

அபராதம் உயர்த்தப்பட்டு, சட்டங்கள் கடுமையாக்கப்பட்டதால் இதுவரை இன்ஷூரன்ஸ் இல்லாமல் பயணித்தவர்கள் இப்போது பீதியில் இன்ஷூரன்ஸை புதுப்பிக்கத்தொடங்கிவிட்டார்கள்.

Motor Insurance
Motor Insurance

30 ஆண்டுகள் கழித்து மோட்டார் வாகன சட்டம் திருத்தி எழுதப்பட்டுள்ளது. நடைமுறைக்கு வந்திருக்கும் இந்தப் புதிய திருத்தங்களின்படி இன்ஷூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 1,000 ரூபாயாக இருந்த அபராதத் தொகை அதிகபட்சம் 4,000 ரூபாயாக மாற்றப்பட்டுவிட்டது. இருசக்கர வாகனத்துக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கச் சராசரியாக ரூ.800-லிருந்து ரூ.1500 வரை பிரீமியம் செலுத்த வேண்டும். ஆனால், அபராதத் தொகையே வெறும் 1,000 ரூபாய்தான் என்பதால் பல பேர் தங்களது இன்ஷூரன்ஸை புதுப்பிக்காமல் மெத்தனமாகவே இருந்தனர். தற்போது அபராதம் உயர்த்தப்பட்டு, சட்டங்கள் கடுமையாக்கப்பட்டதால் இதுவரை இன்ஷூரன்ஸ் இல்லாமல் பயணித்தவர்கள் இப்போது பீதியில் இன்ஷூரன்ஸை புதுப்பிக்கத்தொடங்கிவிட்டார்கள்.

இந்தச் சட்டம் அமலுக்கு வந்த ஒரு வாரத்தில் இன்ஷூரன்ஸ் பிரீமியம் புதுப்பிப்பது 500 சதவிகிதம் வரை அதிகரித்திருப்பதாக இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கூறுகின்றன. டிஜிட் இன்ஷூரன்ஸ் நிறுவனம் கொடுத்த தகவல்படி, செப்டம்பர் 1 முதல் 7-ம் தேதி வரையிலான ஒரு வாரக் காலத்தில், இந்தியா முழுவதும் அவர்களின் மோட்டார் இன்ஷூரன்ஸ் விற்பனை 163 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம். இதில் டெல்லியில் மட்டும் கம்ப்யூட்டர் சிஸ்டங்களே திணறும் அளவுக்கு 1,371 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தென் மாநிலங்களைப் பொறுத்தவரை கேரளாவில் 660 சதவிகிதம் வரை அதிகரித்திருக்கிறதாம்.

Indian Parliament
Indian Parliament
65%
இதுவரை 25 - 30 சதவிகிதமாக இருந்த இன்ஷூரன்ஸ் புதுப்பிக்கும் எண்ணிக்கை 35 சதவிகிதம் வரை மட்டுமே அதிகரிக்கும். மீதம் உள்ள 65 சதவிகித வாகனங்களின் இன்ஷூரன்ஸ் புதுப்பிக்கப்படாமல் இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

இந்தியாவில், இணையத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசியை விற்பனை செய்யும் நிறுவனமான பாலிசி பஜாரிடமிருந்து பெற்ற தகவலின்படி, 2019 மோட்டார் வாகன திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, நாளொன்றுக்குத் தோராயமாக 10,000 இருசக்கர வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸ் விற்பனையானதாம். ஆனால், இப்போது ஒரு நாளைக்கு 75,000 பாலிசிகள் வரை விற்பனையாகிறதாம். கார் இன்ஷூரன்ஸை பொறுத்தவரை, இதற்கு முன்பு 3,500 பாலிசிகள் விற்பனையாகின, இப்போது 8,000 பாலிசிகள் விற்பனையாகின்றன என்கிறார்கள்.

சஜ்ஜா ப்ரவீன்
சஜ்ஜா ப்ரவீன்

''இன்ஷூரன்ஸ் புதுப்பிக்க வரும் 100 பேரில், பைக் இன்ஷூரன்ஸ் வாங்க 60 பேரும், கார் இன்ஷூரன்ஸ் வாங்க 30 பேரும், ஏற்கெனவே காலாவதியான இன்ஷூரன்ஸை புதுப்பிக்க 10 பேரும் வருகிறார்கள். அதிலும், கடைசி 6 நாள்கள் 87 சதவிகிதம் பைக் மற்றும் 52 சதவிகித கார் கஸ்டமர்கள் காலாவதியான பாலிசியுடன் வருகிறார்கள்'' என்று தகவல் கொடுத்துள்ளார் பாலிசி பஜார் நிறுவனத்தின் மோட்டார் இன்ஷூரன்ஸ் துறைத்தலைவர் சஜ்ஜா ப்ரவீன். இதுவரை 25 - 30 சதவிகிதமாக இருந்த இன்ஷூரன்ஸ் புதுப்பிக்கும் எண்ணிக்கை 35 சதவிகிதம் வரை மட்டுமே அதிகரிக்கும் என்கிறார் இவர்.

Vikatan

65 சதவிகித வாகனங்களின் இன்ஷூரன்ஸ் புதுப்பிக்கப்படாமல்தான் இருக்கப்போகிறது என்று சொல்லும் இவர் இதற்கான காரணங்களாகச் சொல்வது,

சில மாநிலங்களில் தற்போது அபராதத் தொகையைக் குறைக்கிறார்கள், இது மக்கள் இன்ஷூரன்ஸை புதுப்பிப்பதின் தீவிரத்தைக் குறைத்துவிடும். மேற்கொண்டு, இந்தச் சட்டங்களை பெரிய நகரங்களில் கடுமையாகப் பின்பற்றுகிறவர்கள் Tier 3, 4 நகரங்களில் இதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.
Motor Insurance
Motor Insurance

மோட்டார் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை தற்போது க்ளெயிம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. பிரீமியம் பல மடங்கு உயர்ந்தாலும் முன்பைப் போல இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பணம் கிடைக்கப் பல நாள்கள் காத்திருக்கத் தேவையில்லை. அனைத்து நிறுவனங்களும் இன்ஷூரன்ஸை டிஜிட்டலுக்குக் கொண்டுவந்துவிட்டதால் போலி இன்ஷூரன்ஸ்களும் போலி க்ளெயிம்களும் தற்போது பெருமளவு குறைந்துவிட்டன. சமீபத்தில்கூட சென்னை உயர் நீதிமன்றம், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு க்ளெயிமை ஒரே மொத்தமாகத் தரக்கூடாது. அவர்களின் பெயரில் ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கி மாதத் தவணையில் தர வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்கள்.

Vikatan

இந்தத் தீர்ப்பில் இருக்கும் இன்னொரு நல்ல விஷயம், ஒரு நபர் விபத்து நடந்தது என்று கூறி போலியாக க்ளெயிம் கேட்கிறார் என்றால் அவரது க்ளெயிம் ரிஜக்ட் ஆவது மட்டுமல்ல, அவரது ஓன் டேமேஜ் இன்ஷூரன்ஸ் பிரீமியம் விலை அதிகரிக்கும். இதனால், போலி க்ளெயிம்கள் பெருமளவு குறைக்கப்பட்டு, உண்மையாக க்ளெயிம் கேட்பவர்களுக்கு இருக்கும் நெருக்கடிகள் குறையும். க்ளெயிம் இல்லாதவர்களுக்கு பிரீமியம் விலையில் அதிக தள்ளுபடியும் கிடைக்கும்.