Published:Updated:

பஞ்சாபி கெட்ட வார்த்தை... ஃபேக்டரி முழுதும் ரவுண்டு; விசித்திர தண்டனை பெறும் ஓலா ஊழியர்கள்!

பவிஷ் அகர்வால்

தொழிற்சாலையின் நுழைவு வாசல் ஷட்டர் மூடப்படாமல் இருந்ததற்காக… பல ஏக்கர்கள் கொண்ட தொழிற்சாலை முழுக்க 3 ரவுண்டுகள் ஓடி வர வேண்டும் என்று காவல்துறை அகாடமி தலைவர் கணக்காகவும் தண்டனை கொடுத்தாராம்.

பஞ்சாபி கெட்ட வார்த்தை... ஃபேக்டரி முழுதும் ரவுண்டு; விசித்திர தண்டனை பெறும் ஓலா ஊழியர்கள்!

தொழிற்சாலையின் நுழைவு வாசல் ஷட்டர் மூடப்படாமல் இருந்ததற்காக… பல ஏக்கர்கள் கொண்ட தொழிற்சாலை முழுக்க 3 ரவுண்டுகள் ஓடி வர வேண்டும் என்று காவல்துறை அகாடமி தலைவர் கணக்காகவும் தண்டனை கொடுத்தாராம்.

Published:Updated:
பவிஷ் அகர்வால்
செய்திகளில் ஒன்று – ஓலா ஸ்கூட்டர் அடிபடும். இல்லை ஓலா ஓனர் அடிபடுவார்கள். இப்போது ஓலா ஊழியர்கள் அடிபடுகிறார்கள். செய்திகளில் மட்டுமில்லை; ஓலா உரிமையாளர் பவிஷ் அகர்வாலின் வாய் வார்த்தைகளுக்குக் கடுமையாக அடிபடுகிறார்களாம் ஊழியர்கள்.

ஏற்கெனவே மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக, தொழில்நுட்பப் பிரிவில் இருக்கும் 200 பேரைப் பணிநீக்கம் செய்தது ஓலா. இப்போதும் ஊழியர்கள் பணி நீக்கம் என்கிற தகவல்கள் இருந்து வரும் வேளையில்… ஓலாவில் பணிபுரிந்த பணியாளர்கள், தங்கள் பாஸ் பற்றி எக்கச்சக்கமாகப் புகார் வாசிக்கிறார்கள்.

ஓலா தொழிற்சாலை முழுவதுமே ஒரு மாதிரியான டாக்ஸிக் கல்ச்சர் (Toxic Culture) நிலவுவதாகவே சொல்கிறார்கள் அவர்கள். அதாவது, அரசியலும் வன்மமும் ஓலா தொழிற்சாலையில் அதிகம் என்று புகார் வாசிக்கிறார்கள். அதிலும் ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால், சரியான டென்ஷன் பார்ட்டி என்றும், ஊழியர்களைக் கேவலமாக நடத்துவதாகவும் ரிப்போர்ட் வாசிக்கிறார்கள்.

மீட்டிங்கின்போது ப்ரசன்டெஷனில் பக்க எண்கள் தவறானதற்காக… அந்தப் பேப்பரைக் கிழித்து ஊழியரிடம் விசிறியடித்தது… பேப்பர் கிளிப் வளைந்திருந்ததற்காக அதை வைத்தே எறிந்தது… என்று பல புகார்கள் அவர் மேல் எழுகின்றன. பஞ்சாபில் பல கெட்ட வார்த்தைகளில் எக்ஸ்பெர்ட்டாம் பவிஷ் அகர்வால். சமயங்களில் அதைச் சொல்லியும் பணியாளர்களைத் திட்டும் சம்பவம் நடக்கிறதாம்.

இதைவிட விசித்திரமான ஒரு தண்டனையை ஒரு பணியாளருக்கு வழங்கியிருக்கிறார் பவிஷ். தொழிற்சாலையின் நுழைவு வாசல் ஷட்டர் மூடப்படாமல் இருந்ததற்காக… பல ஏக்கர்கள் கொண்ட தொழிற்சாலை முழுக்க 3 ரவுண்டுகள் ஓடி வர வேண்டும் என்று காவல்துறை அகாடமி தலைவர் கணக்காகவும் தண்டனை கொடுத்தாராம்.

ஓலா ஊழியர்கள்
ஓலா ஊழியர்கள்

அதேபோல், அண்மையில் ஓலாவின் S1 சீரிஸ் லாஞ்ச் செய்யப்பட்டபோது, ‘நல்ல தயாரிப்புக்குக் கொஞ்சம் நாட்கள் எடுக்கும்’ என்று சொன்ன ஓலாவின் டாப் இன்ஜீனியர்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாராம் பவிஷ். அதன் டார்கெட்டை 3 மாதங்கள் தடாலடியாகக் குறைத்து… ‘என்னத்த வேலை பார்த்தீங்க.. பார்த்த வரைக்கும் போதும்… உடனே ரோல் அவுட் பண்ணுங்க’ என்று ஆர்டர் போட்டதன் விளைவாக… அவசர அவசரமாக… இரவு பகலாக விழித்திருந்து அந்த டெட்லைனுக்குள் ரோல்அவுட் செய்தார்களாம் இன்ஜினீயர்கள்.

பிசினஸ் ஹெட் ஆகப் பணிபுரிந்து ஓலாவில் இருந்து வெளியே வந்த ஒருவர், ‘‘எங்கள் பாஸ் எப்போதுமே மராத்தான் ரேஸை, அதிவேக ஸ்ப்ரின்ட்டர் உசேன் போல்ட் மாதிரியே ஓட வேண்டும் என்று நினைப்பார். அது எப்படி மராத்தான் ரேஸில், போல்ட் மாதிரி ஓட முடியும்!’’ என்று நொந்து போய்ச் சொன்னாராம்.

அதேபோல், எதையுமே ப்ளான் பண்ணிப் பண்ணாமல், நடு ராத்திரி…2 மணி .. 3 மணி என்று பாராமல் மீட்டிங் அரேஞ்ச் செய்கிறார் என்று புலம்புகிறார்கள் ஊழியர்கள்.

இந்தப் புகார்கள் பற்றி ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வாலிடம் மீடியா கேட்டபோது, ‘‘கூலாக வேலை செய்வதற்கெல்லாம் இங்கே இடமும் இல்லை; நேரமும் இல்லை. இது ஒன்றும் எளிதான பயணம் இல்லை. நான் இப்படித்தான்!’’ என்று கோபமாகவே சொன்னாராம். தன் நிலையிலிருந்து மேம்பட, தனி மனித வதை அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லை. தொழிலாளர்களுக்கு என்ற அடிப்படை உரிமைகள் இருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.