Published:Updated:

டெஸ்ட்டிங்கில் BS-6 டாடா ஹேரியர்... பெட்ரோல் இன்ஜின் வருமா?

ராகுல் சிவகுரு

தற்போதைய BS-4 மாடல் 140bhp பவரை வெளிப்படுத்தும் நிலையில், BS-6 மாடல் காம்பஸ் மற்றும் ஹெக்டருக்கு இணையாக 170bhp பவரை வெளிப்படுத்தும் எனத் தெரிகிறது. இதே இன்ஜின், 7 சீட் ஹேரியர் எனப்படும் பஸ்ஸார்டு எஸ்யூவியிலும் இடம்பெறும்!

BS-6 Harrier
BS-6 Harrier ( Reader )

சமீபத்தில் ஜீப் நிறுவனம் அறிமுகப்படுத்திய காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி, அதன் ஆஃப் ரோடர் திறனைத் தாண்டி இன்னுமொரு விஷயத்துக்கும் பெயர் பெற்றிருந்தது. ஆம், இந்தியாவில் BS-6 மாசு விதிகளுக்குட்பட்ட 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் (மல்ட்டிஜெட் II) கொண்ட முதல் மாடல் இதுதான்! இதனுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், காம்பஸின் மற்ற வேரியன்ட்களில் பொருத்தப்படும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், இதே 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட ஹேரியரின் BS-6 மாடல், தற்போது தீவிரமான டெஸ்ட்டிங்கில் இருக்கிறது. இதைச் சென்னையில் படம்பிடித்திருக்கிறார், மோட்டார் விகடன் வாசகர் சஞ்சய். இதில் என்ன மாற்றங்கள் இருக்கும்?

BS-6 Harrier
BS-6 Harrier
Reader

டாடா ஹேரியர்... இந்தியாவில் இதுவரை கடந்துவந்த பாதை!

கடந்த ஜனவரி மாதத்தில், அசத்தலான விலையில் இந்த மிட்சைஸ் எஸ்யூவி களமிறங்கியது தெரிந்ததே. அசத்தலான டிசைன் - ஸ்டைலான கேபின் - போதுமான சிறப்பம்சங்கள் - மனநிறைவைத் தரும் ஓட்டுதல் அனுபவம் என ஆல்ரவுண்டராக அசத்தினாலும், பெட்ரோல் இன்ஜின் - ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் - 4 வீல் டிரைவ் ஆப்ஷன் - சன்ரூஃப், எலெக்ட்ரிக் சீட் அட்ஜஸ்ட் போன்ற சில லக்ஸுரி வசதிகள் இல்லாமல்போனது எனச் சில குறைகளும் இருந்தன.

மேலும் மே மாதத்தில், இந்த எஸ்யூவியில் இருக்கும் 7 இன்ச் (மிட் வேரியன்ட்) மற்றும் 8.8 இன்ச் (டாப் வேரியன்ட்) டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில், ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் ஆப்பிள் கார் ப்ளே கனெக்ட்டிவிட்டியும் சேர்க்கப்பட்டது.

ஆனால், கடந்த ஜூன் மாதத்தில், திடிரென அனைத்து வேரியன்ட்களின் (XE, XM, XT, XZ) விலையையும் 30,000 ரூபாய் அதிகரித்துவிட்டது டாடா! தவிர அதிரடியான விலையில் வந்த, மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கும் எம்ஜி ஹெக்டருக்குப் பதிலடியாக, இந்த மாதத்தில் டூயல் டோன் ஹேரியரை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது டாடா. இது வழக்கமான சிங்கிள் டோன் மாடலைவிட 20,000 ரூபாய் அதிகம்.

Infotainment System
Infotainment System
Tata Motors

BS-4 மற்றும் BS-6 ஹேரியருக்கு இடையே என்ன வித்தியாசம்?

தற்போதைய BS-4 மாடல் 140bhp பவரை வெளிப்படுத்தும் நிலையில், BS-6 மாடல் காம்பஸ் மற்றும் ஹெக்டருக்கு இணையாக 170bhp பவரை வெளிப்படுத்தும் எனத் தெரிகிறது. இதே இன்ஜின், 7 சீட் ஹேரியர் எனப்படும் பஸ்ஸார்டு எஸ்யூவியிலும் இடம்பெறும். இது இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்துவிடும்! நம் நாட்டில் BS-6 மாசு விதிகள் 2020 ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் சூழலில், அதற்கேற்ற வகையில் பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள் கொண்ட ஹேரியர் விற்பனைக்கு வரும். ஹெக்டர் மற்றும் XUV 5OO உடன் போட்டிபோடும் விதத்தில், வசதிகளில் மாற்றம் செய்யப்படலாம். கூடுதல் அம்சங்கள் இடம்பெறுவதால், எதிர்பார்த்தபடியே BS-6 ஹேரியரின் விலை முன்பைவிட அதிகமாக இருக்கும்.

பெட்ரோல் இன்ஜின் மற்றும் 4 வீல் டிரைவில் என்ன ஸ்பெஷல்?

முதற்கட்டமாக, ஹேரியருக்குப் புதிய பெட்ரோல் இன்ஜினைத் தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ். 1.6 லிட்டர் - 4 சிலிண்டர் - 6 ஸ்பீடு மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்பில் வரப்போகும் இந்த இன்ஜின், இந்த நிறுவன வரலாற்றில் முதன்முறையாக Gasoline டைரக்ட் இன்ஜெக்‌ஷன் (GDi) தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கப் போகிறது! நெக்ஸானில் இடம்பெற்றிருக்கும் 3 சிலிண்டர் - 1.2 லிட்டர் - Revotron இன்ஜினில் (டாடாவின் 2-வது டர்போ பெட்ரோல் இன்ஜின்), கூடுதலாக ஒரு சிலிண்டர் இணைக்கப்பட்டு, இந்த இன்ஜின் தயாரிக்கப்படும் எனத் தகவல் வந்திருக்கிறது.

Revotron T-GDi
Revotron T-GDi
Tata Motors

இது தோராயமாக 120-140bhp பவரை வெளிப்படுத்தலாம் என்பதுடன், BS-6 மாசு விதிகளுக்கேற்ப தயாரிக்கப்படும்! ஹூண்டாயின் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், பெட்ரோல்/டீசல் இன்ஜின்களில் ஆப்ஷனலாக வழங்கப்படும்!

Vikatan
Harrier Dual Tone
Harrier Dual Tone
Tata Motors

இதே கூட்டணி, க்ரெட்டாவுக்குப் போட்டியாக டாடா தயாரிக்கும் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்படும். லேண்ட்ரோவரின் D8 ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் டாடாவின் OMEGA ப்ளாட்ஃபார்மில், 4 வீல் டிரைவ் அமைப்பைப் பொறுத்துவதற்கு கணிசமான மாற்றங்கள் தேவை. எனவே, அதை முதலில் மாற்றியமைத்துவிட்டு, பின்னர் லேண்ட்ரோவர் கார்களில் இருப்பதுபோன்ற புதிய Terrain Response சிஸ்டத்தை ஹேரியரில் டாடா வழங்கும் என நம்பலாம்.