Published:Updated:

அல்ட்ராஸ், பஸ்ஸார்டு, ஹேரியர் AT, டியாகோ பேஸ்லிஃப்ட்.... டாடாவின் அதிரடி கேம் பிளான்!

Altroz
News
Altroz ( Tata Motors )

`புலி பதுங்குவது பாய்வதற்குத்தான்' என்ற சொல்லுக்கு ஏற்ப, ஒரேடியாக 6 கார்களை அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் டாடா மோட்டார்ஸ் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனவரி இறுதியில் ஹேரியர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தி, 2019-ம் ஆண்டைச் சிறப்பாகத் தொடங்கியது டாடா மோட்டார்ஸ். பின்னர் நடைபெற்ற ஜெனிவா மோட்டார் ஷோவில், அல்ட்ராஸ் - H2X - பஸ்ஸார்டு எனத் தடாலடியாக மூன்று கார்களைக் காட்சிப்படுத்தியது. ஆனால் அதன் பிறகு, சைலன்ட் மோடுக்கு அந்த நிறுவனம் சென்றுவிட்டது. `புலி பதுங்குவது பாய்வதற்குத்தான்' என்ற சொல்லுக்கு ஏற்ப, ஒரேடியாக 6 கார்களை அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் டாடா களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை என்னென்ன என்பதையும், அதைப் பற்றிய விவரங்களையும் தற்போது பார்ப்போம்.

டியாகோ மற்றும் டிகோர் - பேஸ்லிஃப்ட்

Tiago Facelift
Tiago Facelift
Autocar India

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இணைய உலகில் இந்தக் கார்களின் ஸ்பை படங்கள் பரவலாக வலம் வருகின்றன. அதை வைத்துப் பார்க்கும்போது, விரைவில் அமலுக்கு வரவிருக்கும் க்ராஷ் டெஸ்ட் மற்றும் Pedestrian Protection விதிகளுக்கேற்ப இந்தக் கார்களை மேம்படுத்தும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் Revotron - 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், BS-6 மாசு விதிகளுக்கேற்ப அப்கிரேடு செய்யப்படும். எனினும் அதிக மைலேஜுக்குப் பெயர்பெற்ற 1.05 லிட்டர் Revotorq - 3 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட காரின் விற்பனை, மார்ச் 31, 2020 உடன் முடிவுக்கு வந்துவிடும் (குறைவான விற்பனை எண்ணிக்கை மற்றும் BS-6 சார்ந்த அதிக செலவுகள்) என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் பேஸ்லிஃப்ட் கார்களின் ஒட்டுமொத்த டிசைன் மற்றும் சிறப்பம்சங்களில் சிற்சில மாற்றம் இருக்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நெக்ஸான் - பேஸ்லிஃப்ட்

Nexon Facelift
Nexon Facelift
Delhi Auto Expo

இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை; எனினும் அதற்கான பணிகளை எப்போதோ துவக்கிவிட்டது டாடா. அதிக வசதிகளைக் கொண்டிருக்கும் வென்யூ மற்றும் XUV 3OO ஆகியவற்றுடன் போட்டியிடும் விதமாக, டிசைன் மற்றும் கேபினில் மாற்றங்கள் செய்யப்படும். இதன் பெட்ரோல்/டீசல் இன்ஜின் மற்றும் மேனுவல்/AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் மாற்றமிருக்காது என்றாலும், அவை BS-6 மாசு விதிகளுக்கேற்ப ரீ-டியூன் செய்யப்படும். இது சர்வதேச Global NCAP அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் அதிகப்படியான 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுவிட்டதால், வரவிருக்கும் விதிகளுக்கேற்ப காரின் கட்டுமானத்தில் பெரிதாக எந்த மாற்றமும் டாடா செய்யவேண்டியிருக்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அல்ட்ராஸ் - பிரிமியம் ஹேட்ச்பேக்

பண்டிகை காலத்தைக் கருத்தில்கொண்டு, வருகின்ற செப்டம்பர் மாதத்தில் அல்ட்ராஸ் காரை விற்பனைக்குக் கொண்டுவரவுள்ளது டாடா மோட்டார்ஸ். மழை காரணமாக, இந்த காரின் அதிகாரபூர்வமான வெளியீடு, ஒரு மாதம் தள்ளிப் போய்விட்டது. இந்த நிறுவனத்தின் Impact 2.0 டிசைன் கோட்பாடுகளின்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பிரிமியம் ஹேட்ச்பேக், Alfa ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட உள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட 45X கான்செப்ட்தான், அல்ட்ராஸ் காராக உருமாறியிருக்கிறது. இதில் டியாகோவில் உள்ள 1.2 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி,

Altroz Cabin
Altroz Cabin
Tata Motors

நெக்ஸானில் இருக்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (102bhp பவர்) மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் (90bhp) ஆப்ஷன்கள் இடம்பெற்றிருக்கும். இவை 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும் என்றாலும், பின்னாளில் ஆட்டோமேட்டிக் வசதியையும் எதிர்பார்க்கலாம். கேபினில் ஆம்பியன்ட் லைட்டிங், கூகுள் அசிஸ்டன்ட் கனெக்ட்டிவிட்டி, க்ரூஸ் கன்ட்ரோல், அனலாக் டிஜிட்டல் மீட்டர் (ஹேரியர் போலவே), 90 டிகிரியில் திறக்கும் கதவுகள் என அதிக வசதிகள் இருக்கின்றன. இது டொயோட்டா கிளான்ஸா, மாருதி சுஸூகி பெலினோ, ஹோண்டா ஜாஸ், ஹூண்டாய் எலீட் i20, ஃபோக்ஸ்வாகன் போலோ ஆகிய கார்களுடன் போட்டியிடும். டாடாவின் மற்ற கார்களைப் போலவே, இதுவும் போட்டியாளர்களை விடக்குறைவான விலையில் (5-8 லட்ச ரூபாய்) வெளிவருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

பஸ்ஸார்டு - 7 சீட் மிட்சைஸ் எஸ்யூவி

Buzzard
Buzzard
Geneva Motor Show

ஹேரியரின் 7 சீட் வெர்ஷனாக அறியப்படும் இந்த எஸ்யூவி, இந்த ஆண்டு நடைபெற்ற ஜெனிவா மோட்டார் ஷோவில் முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டது. அங்கே பஸ்ஸார்டு என்ற பெயரில் வந்தாலும், இது இந்தியாவுக்கு வரும்போது, வெறு பெயரைத்தான் கொண்டிருக்கும். தற்போது திவிரமான டெஸ்ட்டிங்கில் இருக்கும் H7X (புனைப் பெயர்), 5 சீட்களைக் கொண்ட ஹேரியரைவிட 62மிமீ அதிக நீளத்தைக் கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த எஸ்யூவி வெளியாகும் எனத் தெரிகிறது. ஹேரியரில் உள்ள அதே Kryotec - 2.0 லிட்டர் BS-6 டீசல் இன்ஜின்தான் இருக்கும் என்றாலும், அது ஹெக்டர் மற்றும் காம்பஸுக்குச் சமமாக 170bhp பவரை வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் தவிர, 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் வழங்கப்படும். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இது அறிமுகமாகலாம்.

BS-6 மற்றும் ஆட்டோமேட்டிக் ஹேரியர்

Harrier DT
Harrier DT
Tata Motors

தற்போதைய BS-4 ஹேரியர் 140bhp பவரை வெளிப்படுத்தும் நிலையில், BS-6 மாடல் 170bhp பவரை வெளிப்படுத்தும் எனத் தெரிகிறது. ஹெக்டர் மற்றும் செல்ட்டோஸ் எனப் போட்டி வலுப்பதால், சன்ரூஃப் வசதியைக் காரில் சேர்க்கும் முடிவில் டாடா உள்ளது. மேலும், வழக்கமான 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர, ஹூண்டாயின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடனும் வரும். இதனுடன் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (120-140bhp) ஆப்ஷன், ஹேயரில் வரலாம். மற்றபடி இந்த எஸ்யூவியின் டிசைனில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றே நம்பலாம். இதுவும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வரலாம்.

மைக்ரோ எஸ்யூவி - Hornbill

Hornbill
Hornbill
Geneva Motor Show

H2X/X445 என்ற புனைபெயரைக் கொண்ட இந்த காம்பேக்ட் க்ராஸ் ஓவர், அடுத்த ஆண்டு நடைபெறும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படலாம். நெக்ஸானுக்குக் கீழே பொசிஷன் செய்யப்படப்போகும் இந்த கார், எஸ்யூவிக்கான டிசைன் அம்சங்களைக் கொண்டிருக்கும். அல்ட்ராஸ் தயாரிக்கப்படும் அதே Alfa ப்ளாட்ஃபார்மில்தான் இதுவும் தயாரிக்கப்படும். மாருதி சுஸூகி S-Presso (Future S கான்செப்ட்), மஹிந்திரா KUV 1OO NXT, ஹூண்டாயின் மைக்ரோ எஸ்யூவி ஆகிய கார்களுடன் போட்டியிடும். அடுத்த ஆண்டின் இறுதியில்தான் டாடாவின் மைக்ரோ எஸ்யூவி வரும் என்பதால், BS-6 - க்ராஷ் டெஸ்ட் - Pedestrian Protection என அனைத்து விதிகளுக்கும் ஏற்ப கார் தயாரிக்கப்படும் என நம்பலாம்.