Published:Updated:

டெஸ்ட்டிங்கில் அப்பாச்சி 200 பைக்! #VikatanExclusive

ராகுல் சிவகுரு

அப்பாச்சி RTR 200 4V... டிவிஎஸ்ஸுக்கு இது பல 'முதல்'களைக் கொண்ட டூவீலர் எனலாம்.

Apache
Apache ( Facebook )

அப்பாச்சி RTR 200 4V... டிவிஎஸ்ஸுக்கு இது பல 'முதல்'களைக் கொண்ட டூவீலர் எனலாம். கியர் இண்டிகேட்டர் உடனான டிஜிட்டல் மீட்டர், 4 வால்வ் மற்றும் ஆயில் கூலர் அமைப்பு கொண்ட இன்ஜின், பைரலி டியூப்லெஸ் டயர்கள், KYB சஸ்பென்ஷன் செட்-அப், Offset செய்யப்பட்ட பெட்ரோல் டேங்க் மூடி, டபுள் பேரல் எக்ஸாஸ்ட் ஆகியவை அதற்கான எடுத்துக்காட்டு; ஜனவரி 2016 மாதத்தில் அறிமுகமான இந்த நேக்கட் ஸ்ட்ரீட் பைக், அப்பாச்சிக்கே உரித்தான அம்சங்களைக் கொண்டிருந்தது. ஆனால், அனைத்து வாகனங்களிலும் BS-4 மாசு விதிகள் அமலுக்கு வரப்போகும் சமயத்தில், இதற்குப் போட்டியாக பஜாஜின் பல்ஸர் NS200 மற்றும் யமஹாவின் FZ25 ஆகியவை, 2017-ம் ஆண்டில் அறிமுகமாயின. பின்னர் மார்ச் 2018 மாதத்தில், ஸ்லிப்பர் கிளட்ச் (A-RT) உடனான RTR 200 4V பைக்கைத் தடாலடியாகக் களமிறக்கியது டிவிஎஸ்.

Apache
Apache
Facebook

இதில் கலர் ஆப்ஷன்கள் மற்றும் கிராபிக்ஸ், ஹெட்லைட்டுக்கு மேலே வைஸர், ஃபோர்க்குக்கு மேலே Protector ஆகியவை புதிதாக இருந்தாலும், டிசைனில் பெரிய மாற்றமில்லை. பின்னர் அதே ஆண்டில், இதற்கான பதிலடியாக எக்ஸ்ட்ரீம் 200R பைக்கை வெளியிட்டது ஹீரோ. முன்னே சொன்ன பைக்குகளைவிட அதிக விலையைக் கொண்டிருந்தாலும், சிறிய இன்ஜின் கொண்ட பிரிமியம் தயாரிப்புகள் வருவதைப் பார்க்க முடிகிறது. கேடிஎம் டியூக் 125 மற்றும் யமஹா MT-15 ஆகியவை அதற்கான உதாரணம். மேலும் 200-250சிசி செக்மென்ட்டின் வளர்ச்சியைக் கண்ட சுஸூகி, திடீரென ஃபுல் ஃபேரிங் கொண்ட ஜிக்ஸர் 250SF பைக்கை விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டது! கூடவே ஜிக்ஸர் 250 ஸ்ட்ரீட் பைக்கையும் இந்த நிறுவனம் விரைவில் டயர் பதிக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில் அப்பாச்சி RTR 200 பைக்கின் பேஸ்லிஃப்ட் (Update) மாடலை, தற்போது தீவிரமாக டெஸ்ட் செய்துகொண்டிருக்கிறது டிவிஎஸ். இதை ஓசூரில் படம் பிடித்து இருக்கிறார், ஓசூரைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான நித்தீஷ்.