Published:Updated:

`BS-4 வாகனங்கள் விற்பனை காலக்கெடு நீட்டிக்கப்படுமா?’ - மீண்டும் நீதிமன்றத்தை நாடும் FADA

நம் நாட்டில் மீதமிருந்த 7.27 BS-4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான கால வரம்பை உச்சநீதிமன்றம் 10 நாள்களுக்கு நீட்டித்திருந்த நிலையில், அது தற்போது பயனில்லாமல் போய்விட்டது என்பதே நிதர்சனம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா... இந்தத் தொற்று நோயால் இந்தியாவில் போடப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு, ஏப்ரல் 14, 2020-ல் இருந்து மே 3, 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, நம் நாட்டில் மீதமிருந்த 7.27 BS-4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான கால வரம்பை உச்சநீதிமன்றம் 10 நாள்களுக்கு நீட்டித்திருந்த நிலையில், அது தற்போது பயனில்லாமல் போய்விட்டது என்பதே நிதர்சனம். மேலும், ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டு, ஆனால் விற்பனை செய்யப்படாமல் இருந்த 1.09 லட்சம் வாகனங்களின் கதியும் அதேதான்!

Auto Manufacturing
Auto Manufacturing
Autocar Professional

ஏப்ரல் 30 வரை, இந்தப் பணிகளுக்கான காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது தெரிந்ததே. எனவே, இந்த விவகாரத்தில் மீண்டும் தலையிட்டு, தமக்கான நிவாரணத்தை வழங்குவதற்கு ஏதுவாக, Federation of Automobile Dealers Association (FADA) அமைப்பு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளது. தவிர வாகன ஆலைகள் Single Shift-ல், 20-25% வரையிலான உற்பத்தியைத் தொடங்கலாம் என்ற அறிவிப்பு, விரைவில் வரலாம் என்ற தகவல் இந்த துறைக்கு சற்று ஆறுதலான விஷயம்.

2019 - 2020 நிதியாண்டில், புதிய வாகன விற்பனை எப்படி?

டூ-வீலர் விற்பனையைப் பொறுத்தவரை, 2019-2020 நிதியாண்டில் 1.74 கோடி டூ-வீலர்கள் இந்தியாவில் விற்பனை ஆகியுள்ளன. இது கடந்த 2018-2019 நிதியாண்டைவிட 17.8% குறைவு (37 லட்சம் வாகனங்கள்). இன்னும் சொல்லப்போனால், 4 ஆண்டுகளுக்கு முன்பிருந்த விற்பனையைவிட இது குறைவு என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயம். இதே நிதியாண்டில் கார்களின் விற்பனையும் 17.8% சரிவைக் கண்டுள்ளது.

Truck Transport
Truck Transport
Autocar Professional

எனவே, 2019-2020 நிதியாண்டில் விற்பனை ஆகியிருக்கக்கூடிய 27.76 லட்சம் கார்கள், முன்பைவிட 6 லட்சம் வாகனங்கள் குறைவு. இன்னும் சொல்லப்போனால், இது 2015-2016 நிதியாண்டில் கார் விற்பனையைவிடக் குறைவு என்பதுதான் ஷாக்! நிலைமை இப்படி இருக்க, நாடு முழுவதும் பல்வேறு பொருள்களைக் கொண்டு சேர்ப்பதற்கு அடிப்படையான டிரக் போக்குவரத்தைச் சீராக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு