நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

முகேஷ் அம்பானி Vs கெளதம் அதானி... முதலிடம் யாருக்கு?

முகேஷ் அம்பானி, கெளதம் அதானி
பிரீமியம் ஸ்டோரி
News
முகேஷ் அம்பானி, கெளதம் அதானி

போட்டி

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் முதல் இடத்துக்கான கடும் போட்டி முகேஷ் அம்பானிக்கும் கௌதம் அதானிக்கும் இடையே நடக்கிறது. புளூம் பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸில் ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் அதானி இப்போது முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். அதானியின் சொத்து மதிப்பு 88.5 பில்லியன் டாலர். இவரைவிட அம்பானியின் சொத்து மதிப்பு சிறிதளவு குறைந்து, 87.9 பில்லியன் டாலராக இருக்கிறது.

முகேஷ் அம்பானி அவரின் அப்பா திருபாய் அம்பானி தொடங்கிய நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்திவந்தாலும், ஓரளவுக்கு பெரிய நிறுவனமாக இருந்த ரிலையன்ஸை இன்று மிகப் பெரிய சாம்ராஜ்யமாக வளர்த் தெடுத்த பெருமை முகேஷுக்கு உண்டு.

முகேஷ் அம்பானி, கெளதம் அதானி
முகேஷ் அம்பானி, கெளதம் அதானி

ஆனால், கெளதம் அதானி சுயம்புவாக வளர்ந்தவர். ஒரு கமாடிட்டி வர்த்தகராக வாழ்க்கையைத் தொடங்கி, இன்று கிரீன் எனர்ஜி, சுரங்கம், விமான நிலையம், பாதுகாப்புத் துறை, எஃப்.எம்.சி.ஜி எனப் பல துறைகளில் செயல்பட்டு வருகிறார்.

கெளதம் அதானி, முகேஷ் அம்பானியுடன் போட்டிபோடும் அளவுக்கு உயர முக்கியமான காரணம், கடந்த சில ஆண்டுகளாகப் பங்குச் சந்தை ஏற்றத்தில் இருப்பதே. கடந்த சில ஆண்டுகளில் அதானியின் பல நிறுவனப் பங்குகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.

நிலக்கரி, பெட்ரோகெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளின் மூலமே நிறுவனத்தை வளர்த்த இந்த இருவருமே இப்போது கிரீன் எனர்ஜி துறையில் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றனர்.

சில பங்குச் சந்தை வல்லுநர்கள் அதானி குழுமத்தின் வளர்ச்சியை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். உ.பி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோல்வி அடைந்தாலோ, 2024-ம் ஆண்டில் மத்தியில் பா.ஜ.க தலைமையில் ஆட்சி அமையாவிட்டாலோ அதானி குழுமத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் என் கிறார்கள். ரிலையன்ஸ் போலவே, அதானி குழுமமும் மிகப் பெரிய அளவில் வளர்ந்து விட்டது. அது இன்னும் பெரிய அளவில் வளரவே செய்யும் என்பவர்களும் உண்டு.

பார்ப்போம் என்ன நடக்கிறதென்று!