Published:Updated:

நியூ பென்ஷன் திட்ட முதலீடு: ஆட்டோ சாய்ஸ், ஆக்டிவ் சாய்ஸ் என்ன வேறுபாடு?

NPS
News
NPS

ஆக்டிவ் சாய்ஸ் என்றால் பங்குச் சந்தை, கார்ப்பரேட் பாண்ட், அரசு பாண்ட்களில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை முதலீட்டாளரே தேர்வு செய்துக்கொள்ளலாம்.

சர்டிஃபைட் டிரஸ்ட் & எஸ்டேட் பிளானர் (Purplepond.in) எஸ்.சரவணன், புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ள ஆட்டோ சாய்ஸ் மற்றும் ஆக்டிவ் சாய்ஸ் பற்றி விளக்குகிறார்.

நியூ பென்ஷன் ஸ்கீம் (NPS - National pension scheme) -ல் முதலீடு செய்யும்போது முதலீட்டாளர்களுக்கு ஆட்டோ சாய்ஸ், ஆக்டிவ் சாய்ஸ் என இரு விருப்பங்கள் கொடுக்கப்படும்.

எஸ்.சரவணன், சர்டிஃபைட் டிரஸ்ட் & எஸ்டேட் பிளானர், Purplepond.in
எஸ்.சரவணன், சர்டிஃபைட் டிரஸ்ட் & எஸ்டேட் பிளானர், Purplepond.in

ஆட்டோ சாய்ஸ் என்பது முதலீட்டாளர்களின் வயதிற்கு ஏற்றார் போல் பங்குச் சந்தை முதலீட்டு சதவீதம் மாறும். LC 25 (LIFE CYCLE 25) 25 சதவீதம் பங்குச் சந்தையில்  முதலீடு செய்யப்படும். LC 50 (LIFE CYCLE 50) 50 சதவீதம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். LC 75 (LIFE CYCLE 75) 75சதவீதம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.   

உதாரணத்துக்கு ஒருவரின் வயது 30 ஆக இருந்தால், ஆட்டோ சாய்ஸ் தேர்வு  செய்துகொள்ளலாம். ஆட்டோ சாய்ஸ் -ன் கீழ் LC 75 ( LIFE CYCLE  FUND 75) ல் 75% பங்குச் சந்தையிலும் 10 %  கார்ப்பரேட்  கடன் பத்திரத்திலும் மீதமுள்ள 15% அரசாங்க கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும். உங்கள் வயது அதிகமாக அதிகமாக இந்த விகிதம் மாறுபடும். முதலீட்டு விகிதாச்சார மாற்றங்கள் கீழ்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ சாய்ஸ்
ஆட்டோ சாய்ஸ்

இதுவே ஆக்டிவ் சாய்ஸ் என்றால் பங்குச் சந்தை, கார்ப்பரேட் பாண்ட், அரசு பாண்ட்களில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை முதலீட்டாளரே தேர்வு செய்துக்கொள்ளலாம்.