பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

1 ட்ரில்லியன் டாலரை இழந்த அமேசான்... என்ன காரணம்?

அமேசான்
பிரீமியம் ஸ்டோரி
News
அமேசான்

பிசினஸ்

உலகின் முன்னணிப் பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்த ஜெஃப் பெசோஸுக்கு இப்போது கொஞ்சம் சோதனைக் காலம். காரணம், அவரைப் பணக்காரர் ஆக்கிய அமேசான் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, சமீபத்தில் ஒரு லட்சம் கோடி டாலரை இழந்துள்ளது. சந்தை மதிப்பில் ஒரு லட்சம் கோடி டாலரை இழந்த முதல் நிறுவன மாகவும் அமேசான் பதிவாகியிருக்கிறது.

அமேசான் நிறுவனம்தான் இ-காமர்ஸ் உலகின் ராஜா. இத்தகைய நிறுவனத்தின் சந்தை மதிப்பு எப்படி இழப்பைச் சந்தித்தது என்பதே முதலீட்டாளர்களிடம் எழும் கேள்வி.இதற்கு முக்கியமான காரணம், உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக இருக்கும் பண வீக்கம். பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்து, மக்களின் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கிறது. தவிர, மத்திய வங்கிகளின் நிதிக் கொள்கை நடவடிக்கைகள் காரணமாகவும், மக்களின் நுகர்வு பெருமளவில் குறைய, நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்படுகிறது.

அமேசான் நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் கடந்த ஓராண்டில் அதிகம் விற்பனை செய்துள்ளனர். அமேசான் பங்குகள் அதிகம் விற்பனைக்கு உள்ளானதால், கடந்த ஓராண்டில் தொடர்ச்சியாக பங்கின் விலை இறக்கத்தில் இருந்து வந்திருக்கிறது.

1 ட்ரில்லியன் டாலரை இழந்த அமேசான்... என்ன காரணம்?

அமேசான் பங்கு விலை 50% சதவிகித இறக்கத்தைச் சந்தித்துள்ளது. கடந்த ஜூலை 2021-ல் அமேசான் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.88 ட்ரில்லியன் டாலராக இருந்தது. தற்போது 1 ட்ரில்லியன் டாலர் வீழ்ச்சிகண்டு 879 பில்லியன் டாலராக உள்ளது.

அமேசான் மட்டுமல்லாமல் மைக்ரோ சாஃப்ட் நிறுவனமும் கடும் இறக்கத்தைச் சந்தித்திருக்கிறது. அமெரிக்காவின் தொழிநுட்ப நிறுவனப் பங்குகள் கடந்த ஓராண்டாகவே வீழ்ச்சியில் இருந்துவருகின்றன. முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் சந்தை மதிப்பு மொத்தமாக கடந்த ஓராண்டு காலத்தில் 4 ட்ரில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்துள்ளன.

இந்தப் பணவீக்கம் இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ?