Published:Updated:

`10,000 புதிய விண்ணப்பங்கள்; 7,876 பேருக்கு ரீஃபண்டு!’ - வொர்க் ஃப்ரம் ஹோம் மோடில் ஜி.எஸ்.டி துறை

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

ஊரடங்கு அறிவித்த உடனேயே ஜி.எஸ்.டி கூட்டமைப்பு, 29 மாநில அதிகாரிகளுக்கு இந்தப் பாதுகாப்பான வலைதள சேவையை அளித்துள்ளது.

தனியார் நிறுவனங்களைப் போலவே, பல அரசு நிறுவனங்களும் தொழில்நுட்ப உதவியுடன் வீட்டிலிருந்து வேலைபார்க்கத் தொடங்கிவிட்டன.

இந்த ஊரடங்கு வேலையிலும், 'விர்ஷூவல் பிரைவேட் நெட்வொர்க்' (Virtual Private Nerwork) உதவியுடன், சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) துறை அதிகாரிகள் முழுவீச்சில் செயல்பட்டு வருவதாக சரக்கு மற்றும் சேவை வரி கூட்டமைப்பு (ஜி.எஸ்.டி.என்) தெரிவித்துள்ளது.

அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ``ஊரடங்கின் முதல் 10 நாளான, ஏப்ரல் 3 வரை, ஜி.எஸ்.டி தொடர்பாக 10,000 க்கும் மேற்பட்ட புதிய விண்ணப்பங்களும், சுமார் 8,000 பேருக்குப் பணம் திருப்பி அனுப்பும் பரிசீலனைகளையும் அதிகாரிகள் செயல்படுத்தி உள்ளனர். இவர்கள் 'விர்ஷூவல் பிரைவேட் நெட்வொர்க்' ( Virtual Private Nerwork) என்ற வலைதள உதவியுடன் பணிகளை மேற்கொண்டுள்ளனர். மொத்தம் 17,488 ஜிஎஸ்டி அதிகாரிகள் இந்தத் தொழில்நுட்ப உதவியுடன் பணியாற்றி வருகின்றனர்.

GST
GST
`ஒர்க் ஃப்ரம் ஹோம்' சமயம் 269 லட்சம் பேர் தரவிறக்கம் செய்த செயலி எது? உங்களுக்கும் பயன்படுமா?!

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வேலைகளைத் துரிதமாக்கியதன் மூலம் மார்ச் 25 முதல் ஏப்ரல் 3 வரையிலான நாள்களில் 20,273 வழக்குகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. அதில் 10,077, புதிய பதிவுக்கான பரிசீலனை, 3,377 பிழை திருத்தங்கள், 3,784 பதிவுகள் ரத்து ,1,966 கணக்குகளை கணக்குத்தாரர்களே முன்வந்து நீக்கம் செய்தல், 1,069 கணக்குகளில் தவறு இருப்பதால் அதிகாரிகளால் அந்தக் கணக்கு நீக்கப்படுதல், 7,876 கணக்குகளுக்குப் பணம் திருப்பி அளித்தல் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் செய்யப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி

ஊரடங்கு அறிவித்த உடனேயே சரக்கு மற்றும் சேவை வரி கூட்டமைப்பு, 29 மாநில அதிகாரிகளுக்கு இந்தப் பாதுகாப்பான வலைதள சேவையை அளித்துள்ளது. இந்த வலைதளம் மூலம் அதிகாரிகள் உடனுக்குடன் செயல்படுவதால் வேலைகளை நிலுவை இல்லாமல் விரைவாக முடிக்கின்றனர். குறிப்பிட்ட காலத்திற்குள் பரிசீலனை முடிக்கப்படுவதால் பல பிரச்னைகள் தடுக்கப்படுகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு