Published:Updated:

`விஜய் மல்லையா, நிரவ் மோடியிடமிருந்து ₹18,000 கோடியை மீட்டுள்ளோம்!' - மத்திய அரசு

விஜய் மல்லையா ( AP )

``விஜய் மல்லையா, நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி தொடர்புடைய பண மோசடி வழக்குகளில் இதுவரை 18,000 கோடி ரூபாய் வங்கிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது" என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்தார்.

`விஜய் மல்லையா, நிரவ் மோடியிடமிருந்து ₹18,000 கோடியை மீட்டுள்ளோம்!' - மத்திய அரசு

``விஜய் மல்லையா, நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி தொடர்புடைய பண மோசடி வழக்குகளில் இதுவரை 18,000 கோடி ரூபாய் வங்கிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது" என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்தார்.

Published:Updated:
விஜய் மல்லையா ( AP )

2016-ம் ஆண்டு இந்தியாவில் இருக்கும் 13 வங்கிகளிடம் 9,000 கோடி கடன் பெற்று மோசடி செய்துவிட்டு இந்தியாவிலிருந்து இங்கிலாந்து தப்பிச் சென்றார் விஜய் மல்லையா. வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரின் உறவினர் மெஹுல் சோக்ஸியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் (Operational Risk Fraud) இருந்து சுமார் ரூ.14,000 கோடி வரை கடன் பெற்று பண மோசடியில் ஈடுபட்டனர்.

நிரவ் மோடி
நிரவ் மோடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தப்பியோடிய குற்றவாளிகளான மெகுல் சோக்சி, விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடியின் சொத்துகளை விற்று 13,109 கோடி ரூபாய் மீட்கப்பட்டது. கடந்த ஜூலை 2021-ம் ஆண்டு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் சொத்துகள் விற்கப்பட்டு ரூ.792 கோடி மீட்கப்பட்டது எனக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீதிபதி கான் வில்கர் தலைமையிலான விசாரணை நடைபெற்றபோது, ``விஜய் மல்லையா, நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி தொடர்புடைய பண மோசடி வழக்குகளில் இதுவரை 18,000 கோடி ரூபாய் வங்கிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது" என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேலும், விஜய் மல்லையா, நிரவ் மோடி, சோக்சி ஆகியோர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய மதிப்பு ரூ.67,000 கோடி. கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 33 லட்சம் வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்ட நிலையில், அவற்றிலிருந்து சுமார் 2,086 வழக்குகள் மட்டுமே சட்ட விரோத பணமோசடி விசாரணையின் கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது இது தொடர்பான வழக்குகளை இந்திய அரசின் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது என அவர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism