லிங்க்டுஇன் வலைதளம், தற்போதைய வேலைச் சூழல் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அண்மையில் ஒரு சர்வே ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. அதில் இந்தியாவில் வேலை செய்பவர்களில் 82% பேர் வேலை மற்றும் வாழ்க்கைச் சூழலை ஒருசேர சமாளிப்பதில் இருக்கும் சிக்கல்களைக் காரணம் காட்டி, நடப்பு 2022-ம் ஆண்டில், தற்போது செய்துகொண்டிருக்கும் வேலைகளில் இருந்து மாற நினைப்பதாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
லிங்க்டுஇன் நிறுவனம் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து மொத்தம் 1,111 பணியாளர்களிடம் இந்த சர்வேயை மேற்கொண்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள், தற்போதைய கொரோனா காலகட்டத்தில் அலுவலகப் பணிகளையும், தனிப்பட்ட வாழ்க்கைச் சூழலையும் பேலன்ஸ் செய்ய சிரமமாக இருப்பதைக் காரணமாகச் சொல்லியிருக்கிறார்கள். 28% பேர் போதுமான சம்பளம் இல்லாததால் வேலை மாற நினைப்பதாகவும், 23% பேர் திறன் மேம்பாடு மற்றும் கரியர் டெவலெப்மென்ட்டுக்கான வேலை மாறப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த பெருந்தொற்றுக் காலமானது அலுவலக வேலைகளில் இருப்பவர்களுக்கு ஒருவிதமான பயத்தை உண்டு பண்ணியிருப்பதை இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தற்போது செய்துகொண்டிருக்கும் வேலைகளில் நிலையற்ற தன்மை அவர்களுக்கு அதன் மீது ஒரு நம்பிக்கையில்லாத தன்மையை ஏற்படுத்தியிருக்கிறது என்றும், தங்களின் திறமைகள் மீதும் திறன்கள் மீதும் அவர்களுக்கே ஒருவித சந்தேகம் (Impostor syndrome) உருவாகியிருப்பதாகவும், அலுவலகத்துக்கு நேரடியாக வந்து வேலை செய்யும் சூழல் இன்னும் திரும்பாததால், தங்களின் வேலை மற்றும் கரியர் வளர்ச்சியில் சீனியர்களின் உதவி கிடைக்காமல் பணியாளர்கள் திண்டாடுவதாலும் இந்த மனநிலை அவர்களுக்கு வந்திருப்பதாக லிங்க்டுஇன் தெரிவிக்கிறது
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதே போல, இந்த லிங்க்டுஇன் சர்வேயில் பங்கெடுத்துக்கொண்ட பெண்களில் 43% பேர் தீவிரமாகப் புதிய வேலையைத் தேடிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். வேலை மாறுவதற்காக அவர்கள் குறிப்பிட்டிருக்கும் மிக முக்கிய காரணம் பெருளாதார நெருக்கடியைச் சமாளிக்க தற்போதைய வேலையில் கிடைக்கும் சம்பளம் போதவில்லை என்பதுதான்.

மனிதவள மேலாளரான பாலமுருகனிடம் இந்த சர்வே குறித்தும், ஐ.டி துறையில் ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறுவது குறித்தும் பேசியபோது, ``இன்றைய காலகட்டத்தில் அலுவலக வேலைகளுக்குச் செல்லும் பணியாளர்களின் மனநிலை அப்படியே பிரதிபலிக்கிறது இந்த லிங்க்டுஇன் சர்வே முடிவுகள். கொரோனாவுக்கு முன்பாக பல ஆண்டுகளாகவே இந்திய ஐ.டி துறையில் இருந்து வந்த மிகப் பெரிய பிரச்னை, ஊழியர்கள் வேலைவிட்டு நீக்கப்படுவது. ஆனால், இன்று பல ஐ.டி நிறுவனங்களுக்கு இது பிரச்னையே இல்லை. மாறாக, பாசிட்டிவ்வாக நல்லதொரு வாய்ப்பாக மாறியிருக்கிறது. ஏனெனில், ஐ.டி துறையில் ஊழியர்களின் தேவை, வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஐ.டி நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது குறைந்து, வாய்ப்புகளைத் தேடி ஐ.டி ஊழியர்கள் வேலையிலிருந்து வெளியேறுவது அதிகரித்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கொரோனாவுக்கு முன்பு ஐ.டி துறை சார்ந்த படிப்புகளைப் படித்துவிட்டு, கல்லூரிகளில் இருந்து வெளியேறிய ஃபிரெஷர்களுக்கான ஆரம்ப சம்பளம் கிட்டத்தட்ட 20,000 ரூபாயாகத்தான் இருந்தது. ஆனால், தற்போது வேலையை விட்டுச் செல்பவர்களின் விகிதம் அதிகரித்ததன் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளில் புதியவர்களுக்கு (Freshers) வாய்ப்பு கிடைத்திருப்பதுடன், சம்பளம் கிட்டத்தட்ட இருமடங்கு அதிகரித்துள்ளது.
பொதுவாக, ஐ.டி நிறுவனங்கள் பெரும் கல்லூரிகளில் இருந்துதான் ஃபிரெஷர்களை வேலைக்கு அமர்த்தும். ஆனால், தற்போதைய நிலையில், ஐ.டி துறை சார்ந்த வேலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, உலக அளவில் இந்தத் துறை சார்ந்த தேவைகள் அதிகரித்திருப்பது, ஏற்கெனவே வேலை செய்பவர்களில் வெளியேறும் விகிதம் அதிகரித்திருப்பது எனப் பல காரணங்களால் புதியவர்களைக் கூடுதலாகப் பணியில் அமர்த்த வேண்டிய கட்டாயம் ஐ.டி நிறுவனங்ளுக்கு ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில், ஏற்கெனவே வேலை பார்த்து வரும் ஊழியர்கள், அதிக சம்பளத்தை ஏற்கெனவே பெற்று வருவதால், அவர்களைப் பணியில் இருந்து நீக்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது" என்றார்.
இந்த சர்வேயில் மொத்தமாக மூன்று விஷயங்களை லிங்க்டுஇன் குறிப்பிட்டிருக்கிறது. ஒன்று, ஊழியர்கள் வேலை மாறுவதற்கு முக்கிய காரணம், தற்போது வேலை செய்யும் இடத்தில் கொடுக்கும் சம்பளம் இன்றைய பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள போதுமானதாக இல்லை.
இரண்டாவது, தற்போது வேலை செய்யும் இடத்தில் வேலை - வாழ்க்கை இரண்டையும் ஒருசேர சமாளிக்க முடியவில்லை.
மூன்றாவது திறன் மேம்பாடு மற்றும் கரியர் டெவலெப்மென்ட். இதன்படி பார்த்தால், தற்போதை நிலையில் ஊழியர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை லிங்க்டுஇன் ஓரளவுக்கு கணித்திருக்கிறது என்றே சொல்லலாம்.