Published:Updated:

`15 லட்சம் வாசகர்கள்; ₹5 கோடிக்கு கூடுதல் விற்பனை!' - வெற்றியடைந்த சென்னை புத்தகக்காட்சி

சென்னை புத்தகக் காட்சி

``2021ம் ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் சுமார் 10 கோடி ரூபாய்க்கு புத்தக விற்பனை நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் 15 கோடி ரூபாய் வரை விற்பனை நடந்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட 5 கோடி ரூபாய் அதிகமாக விற்பனை நடந்துள்ளது."

`15 லட்சம் வாசகர்கள்; ₹5 கோடிக்கு கூடுதல் விற்பனை!' - வெற்றியடைந்த சென்னை புத்தகக்காட்சி

``2021ம் ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் சுமார் 10 கோடி ரூபாய்க்கு புத்தக விற்பனை நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் 15 கோடி ரூபாய் வரை விற்பனை நடந்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட 5 கோடி ரூபாய் அதிகமாக விற்பனை நடந்துள்ளது."

Published:Updated:
சென்னை புத்தகக் காட்சி

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) நடத்திய 45-வது சென்னை புத்தகத் திருவிழா நேற்று நிறைவுற்றது. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் இப்புத்தகக் கண்காட்சி, கடந்த 2021-ம் ஆண்டும் இந்த ஆண்டும் கொரோனா சூழல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெற்றது. ஆனால், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 19 நாட்கள் இக்கண்காட்சி நடத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இப்புத்தகக் காட்சியின் விற்பனை நிலவரம் குறித்து பபாசியின் செயலாளரும் `நாதம் கீதம் பதிப்பக' உரிமையாளருமான முருகனிடம் கேட்டோம்.

முருகன்
முருகன்

``தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சென்னை புத்தகக் காட்சி தமிழ் மக்களுக்காக நடத்தப்படும் மாபெரும் திருவிழாவாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில்தான் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வந்தது. பொங்கல் திருவிழாவுக்காக வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழகத்துக்கு வருகையில் சென்னை புத்தகக் காட்சிக்கும் வந்து செல்வது வழக்கமாக இருந்தது. கொரோனா பெருந்தொற்றின் விளைவாக அனைத்துத் துறைகளும் முடங்கிய நிலையில் பதிப்புத் துறையும் பெருத்த பாதிப்பைச் சந்தித்தது. ஜனவரியில் நடத்தத் திட்டமிட்டாலும் ஊரடங்கு விதிகளால் அது தள்ளிப்போனது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த 2021-ம் ஆண்டு ஊரடங்கு விதிகள் முழுமையாக தளர்த்தப்படாத மார்ச் மாதத்தில் புத்தகக் காட்சி நடைபெற்றது. கொரோனா காரணமாக பதிப்புத்துறை முடங்கியிருந்தபடியால் புதிய வெளியீடுகளின் எண்ணிக்கை குறைந்த அளவில்தான் இருந்தது. அதனோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மிகச்சிறப்பான ஆண்டாக பதிப்பாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் அமைந்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டிருந்ததால் மக்கள் எந்த இடர்பாடுகளுமின்றி வந்து சென்றனர். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்ட நிலையில் மாணவர்களின் வருகை மிக அதிகமாக இருந்தது.

சென்னைப் புத்தகக் கண்காட்சி
சென்னைப் புத்தகக் கண்காட்சி
Photo: Vikatan / சொ.பாலசுப்ரமணியன்

கொரோனா அச்சத்திலிருந்து மக்கள் விடுபட்ட நிலையில், புதிய படைப்புகள் பலவும் இந்த ஆண்டு வெளியாகின. வழக்கத்தை விட அதிகமாக 19 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெற்றது. மேலும், அனைத்து நாட்களும் காலை 11 மணியிலிருந்து இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற்றதால் வாசகர்கள் நிதானமாக வந்து அரங்குகளைக் கண்டுகளித்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர்" என்றவரிடம் புத்தகக் கண்காட்சியின் ஒட்டுமொத்த விற்பனையின் அடிப்படையில் பதிப்பாளர்கள் நல்ல வருவாய் ஈட்டியுள்ளனரா என்று கேட்டோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``2021ம் ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் சுமார் 10 கோடி ரூபாய்க்கு புத்தக விற்பனை நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் 15 கோடி ரூபாய் வரை விற்பனை நடந்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட 5 கோடி ரூபாய் அதிகமாக விற்பனை நடந்துள்ளது.

கண்காட்சியின் இறுதி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்கள் வருகை அதிக அளவில் இருந்ததால் நல்ல விற்பனை நடந்துள்ளது.

Chennai Book Fair
Chennai Book Fair

800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இப்புத்தகத் திருவிழாவுக்கு ஒட்டுமொத்தமாக 15 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். பொதுமக்களின் வருகை மற்றும் புத்தக விற்பனை என அனைத்திலுமே இப்புத்தகத் திருவிழா மிகப்பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. கொரோனா தொற்றால் முடங்கியிருந்த பதிப்புத் துறைக்கு புத்துயிர் அளித்தது போல இக்கண்காட்சி நடந்து முடிந்திருக்கிறது" என்றார் முருகன்.

இனி தமிழகம் முழுக்க நடக்கும் புத்தகத் திருவிழாக்களில் புத்தகப் பதிப்பாளர்கள் இன்னும் அதிகமான வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism