Published:Updated:

`கொரோனாவால் நேர்முகத் தேர்வுகள் ரத்து!’ - சிக்கலை எதிர்நோக்கும் நிறுவனங்கள்

நேர்முகத் தேர்வுகள்
நேர்முகத் தேர்வுகள்

வேலைவாய்ப்பிற்காக நடைபெற இருந்த 65% நேர்முகத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா நோய் தொற்றால் நாட்டின் ஒட்டுமொத்த துறைகளும் ஆட்டம் கண்டுள்ளன. குறிப்பாக சேவை துறைகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன. ஒருபுறம் வேலையிழப்பு அபாயம் இருப்பது போல காணப்பட்டாலும், நோய் தொற்றால் ஏற்பட்டுள்ள இந்தக் குறுகிய காலப் பாதிப்பால் நாட்டில் பல துறைகளிலும் வேலைவாய்ப்பிற்காக நடைபெற இருந்த 65% நேர்முகத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வரும் காலங்களில் பணியாளர்கள் தட்டுப்பாடு அதிகளவில் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தொழிற்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டீம் லீஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளர் அமித் வதேரா, ``கொரோனா நோய்த் தொற்றால் நாட்டில் பெரும்பாலான நிறுவனங்கள் தாங்கள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த நேர்முகத் தேர்வுகளைத் தற்போது ரத்து செய்துள்ளன. இந்தக் குறுகிய காலப் பாதிப்பால் மட்டும் 60-65% நேர்முகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டும் உள்ளன.

200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த கத்தார் ஏர்வேஸ் -வேலையிழப்பு அபாயத்தில் விமானப் பணியாளர்கள்

நேர்முகத் தேர்வுகள் தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்படுவதால் பின் நாளில் ஊழியர்களை பணியமர்த்துவது நிறுவனங்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும். குறிப்பாக, இந்தத் தாமதத்தின் காரணமாக நாட்டில் பேங்கிங் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் தளவாட நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்தச் சூழலை நிறுவனங்கள், தங்கள் தொழில்நுட்பத் திறனை கொண்டு சமாளிக்க வேண்டும். முடிந்த அளவு ஸ்கைப் கால் போன்றவற்றைப் பயன்படுத்தி பணியாளர்களை தேர்வுசெய்யலாம். நேர்முகத் தேர்வைவிடவும் இதன் மூலம் அதிகளவிலான ஊழியர்களை விரைவாகத் தேர்ந்தெடுக்க முடியும். எனவே, நிறுவனங்கள் இந்த முறையைப் பயன்படுத்துவதன் மூலம் பின்னாளில் ஏற்படும் பாதிப்புகளை கணிசமாகக் குறைக்கலாம்" என்றார்.

அதேபோல் ceil hr services நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதித்ய நாராயணன் மிஸ்ராவும் தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார். அவர், "கொரோனா தொழிற்துறைக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. இந்த நோய் பாதிப்பால் நிறுவனங்களின் வருவாயும் லாபமும் பெரியளவில் சரிந்துள்ளது. இதன் பின்விளைவுகளை துல்லியமாகக் கணித்துவிட முடியாது. ஆனால், பின்வரும் நாளில் ஊழியர்களை வேலைக்கு பணியமர்த்தல் சவாலாக இருக்கும். மேலும், அடுத்த காலாண்டில் இதன் காரணமாகத் தொழில் மந்த நிலை தொடரும். குறிப்பாக, சேவைத் துறையில் அதிகளவு மந்தநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது " என்றார்.

வீடியோ காலிங் இன்டர்வியூ
வீடியோ காலிங் இன்டர்வியூ
நானோ தொழில்நுட்பம் படித்தால் நிச்சய வேலை வாய்ப்பு! #Education

பல துறைகளில் இந்தக் கொரோனா எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி இருந்தாலும் சில துறைகளில் நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக `ஹெல்த் கேர்’ துறை கொரோனா பாதிப்பின் காரணமாக நல்ல ஏற்றத்தைக் கண்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல ஆன்லைன் வேலைவாய்ப்பு தகவல் அளிக்கும் நிறுவனமான ஷைன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சைரஸ் மாஸ்டர் , "எல்லா துறைகளும் கொரோனாவால் சரிவை கண்டிருக்கும் நிலையில் சில துறைகள் மாறாக ஏற்றத்தைக் கண்டுள்ளது. குறிப்பாக, ஹெல்த் கேர் துறை நல்ல ஏற்றத்தை கடந்த சில மாதங்களாகக் கண்டு வருகிறது. இந்தத் துறை சம்மந்தமான பொருள்களின் தேவை மக்களிடத்தில் அதிகளவில் ஏற்பட்டுள்ளதால் இந்தத் துறை மட்டும் தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு