Published:Updated:

AMFI சேர்மனாக தேர்வான ஏ.பாலசுப்பிரமணியன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஏ.பாலசுப்பிரமணியன்
ஏ.பாலசுப்பிரமணியன் ( Photo:// https:// www.adityabirlacapital.com/ )

ஆம்ஃபி துணைத் தலைவராக எடில்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ராதிகா குப்தா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி-ன் (AMFI) சேர்மனாக ஆதித்ய பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஏ.பாலசுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் இந்தப் பதவியை இதற்கு முன் 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை வகித்தார்.

இதற்கு முன் ஆம்ஃபி சேர்மனாக கோட்டக் மியூச்சுவல் ஃபண்டின் நிலேஷ் ஷா இருந்தார்.

AMFI
AMFI
Photo:/ Twitter @amfiindia
சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை தேர்வு செய்வது எப்படி? - வழிகாட்டும் நாணயம் விகடனின் நிகழ்ச்சி

ஆம்ஃபி துணைத் தலைவராக எடில்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ராதிகா குப்தா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஏ.ஆர்.என். கமிட்டி சேர்மனாக ஐ.டி.எஃப்.சி ஏம்.எம்.சி முதன்மை செயல் அதிகாரி விஷால் கபூர் தொடர்கிறார்.

ஏ.பாலசுப்பிரமணியன் ஆம்ஃபி நிதி கல்வி பிரிவின் (AMFI Financial Literacy Committee) தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நிலேஷ் ஷா ஆஃம்பி மதிப்பீட்டு குழுவின் தலைவராக (Valuation Committee) தேர்வாகி உள்ளார்.

ராதிகா குப்தா, ஆஃம்பி இ.டி.எஃப் குழுவின் (ETF Committee) தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ராதிகா குப்தா
ராதிகா குப்தா
Photo: Twitter/ @iRadhikaGupta
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... அதிக லாபம் ஈட்ட 5 தங்க விதிமுறைகள்..!

ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் ஏ.எம்.சியின் தலைவர் சஞ்சய் சப்ரே செயல்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் மற்றும் இணக்கக் குழுவின் (Operations & Compliance Committee) தலைவராக தொடர்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு