Published:Updated:

இன்னும் எத்தனை காலம்தான் ஏமா(ற்)றுவார் இந்த நாட்டிலே! - ரியல் `சதுரங்க வேட்டை' புதையல் கதை - 5

Gold coins (Representational Image)
News
Gold coins (Representational Image) ( Pixabay )

இங்கு பழங்கால நாணயத்தை விற்றால்️, விஷயம் வெளியில்️ தெரிந்து மாட்டி️க்கொள்வோம். அதனால்️தான் தொலை தூரத்திலிருக்கும் உங்களிடம் விற்கிறேன்' என்று சொன்னார். நாணயமான நபர் போலத்தான் தெரிகிறது'' என்று சுவாரஸ்யம் பொங்கச் சொன்னார்.

மூன்று மாதம் இருக்கும், மணமேல்குடி️யில்️ இருக்கும் நண்பரைச் சந்திக்க, அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர், எலெக்ட்ரானிக் கடை வைத்திருப்பவர். காலிங் பெல்️ அடி️த்துக் காத்திருந்தேன்.

உள்ளே போனில்️ யாரிடமோ விடாமல்️ பேசிக்கொண்டி️ருந்தவர், சற்றுத் தாமதமாகத்தான் கதவைத் திறந்தார். உள்ளே கூப்பிட்டு உபசரித்தவரிடம், நலமெல்️லாம் விசாரித்து முடி️த்த கையோடு, `ஒரு சந்தோஷ செய்தி' என்றபடி️யே ஒரு சங்கதியைப் பகிர்ந்தார்.

``எனக்கு ஒரு போன் வந்தது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹூப்ளி பகுதியிலிருந்து ஒருவர் பேசினார். பழைய காலத்து வீட்டை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு கொத்தனாருக்கு ஒரு பானை நிறைய பழங்கால தங்கக்காசுகள் கிடைத்திருக்கின்றன. மொத்தம் மூணே முக்கால்️ கிலோ (3.75 கிலோ கிராம்) தங்கம், அரை கிலோ வெள்ளி. பாதி விலையில்️ தருவதாகச் சென்னார்.

Gold coins (Representational Image)
Gold coins (Representational Image)
Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாம்தான் உஷாராயிற்றே... `உங்க ஊரிலேயே விற்கலாமே... அதை ஏன் தமிழ்நாட்டி️ல்️ , அதுவும் ஏதோ ஒரு மூலையில்️ இருக்கும் சிற்றூரில்️ வசிக்கும் என்னிடம் விற்கிறீர்கள்? அதுமட்டுமல்️லாமல்️, என்னுடைய போன் நம்பர் எப்படி️க் கிடைத்தது?' என்றெல்️லாம் துருவித் துருவிக் கேட்டேன்.

`சுமார் 5 வருஷத்துக்கு முன் தமிழ்நாட்டி️ல்️தான் வேலை பார்த்தேன். அப்போது, உங்கள் கடையில்️ ஒரு ஃபேன் வாங்கினேன். அது ரொம்ப ராசியான பேன். எந்தப் பிரச்னையும் இல்️லாமல்️ ஓடுகிறது. அப்போதுதான் உங்கள் நம்பரையும் கொடுத்தீர்கள். அதன்பிறகு, கர்நாடகாவுக்கு வந்துவிட்டேன்.

இங்கு பழங்கால நாணயத்தை விற்றால்️, விஷயம் வெளியில்️ தெரிந்து மாட்டி️க்கொள்வோம். அதனால்️தான் தொலை தூரத்திலிருக்கும் உங்களிடம் விற்கிறேன்' என்று சொன்னார். நாணயமான நபர் போலத்தான் தெரிகிறது'' என்று சுவாரஸ்யம் பொங்கச் சொன்னார்.

`பணம் தோது செய்ய வேண்டும். அதற்கு நேரம் தேவைப்படும்' என்று பதில்️ சொல்️லியிருக்கிறார் நண்பர்.

ஹூப்ளி நபரோ, ``நீங்கள் ஒரு ரூபாய்கூட பணம் கொண்டு வர வேண்டாம். முதலில்️ நீங்கள் மட்டும் கிளம்பி வாருங்கள். தங்கக்காசு ஒன்றோ, இரண்டோ சாம்பிளாகத் தருகிறேன். ஊருக்குப் போய் தரத்தைப் பரிசோதித்துவிட்டு, மீண்டும் பணத்துடன் வந்து மொத்தத்தையும் வாங்கிச் செல்️லுங்கள்'' என்று சொல்️லியிருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``கர்நாடகாவுல இருந்து பேசினதுதான் கொஞ்சம் பயமாக இருக்கிறது. ஆனால்️, இந்த டீலிங் பிடி️த்திருக்கிறது. ஒரு பைசாகூட வேண்டாம் என்று சொல்️கிறாரே! இதுதான் நம்பிக்கைக் கொடுக்கிறது.

அந்தக் காசுகளை வாங்கி, சென்னைக்குக் கொண்டு சென்றால்️ , பத்து கடையில்️ கொடுத்து ஈஸியாக விற்றுவிடலாம் என்று திட்டமிட்டு, நண்பர் ஒருவரிடம் சொன்னேன். `நானும் பணம் தருகிறேன். இருவருமே சென்று வாங்கிவந்து விற்போம். லாபத்தைப் பங்கிட்டு கொள்வோம்' என்று சொன்னார். நீங்கள் காலிங்பெல்️ அடி️க்கும்போது அந்த நண்பரிடம்தான் பேசிக்கொண்டி️ருந்தேன். நல்️ல நேரத்தில்️ நீங்களும் வந்தீர்கள்'' என்று என் மீதும் `பங்காளிப் பார்வை'யை வீசிய மணமேல்️குடி️ நண்பரின் முகத்தில்️ ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்!

(அந்த மணமேல்குடி️ நண்பர், தனக்குத் தெரிந்த பலரிடம் இந்த விஷயத்தைச் சொல்️லி பங்காளிகளாக மாற்றும் முயற்சியையும் மேற்கொண்டி️ருந்தார் போல. அதில் என்னையும் சேர்க்க நினைத்து இதை என்னிடம் சொன்னார்...)

Gold coins (Representational Image)
Gold coins (Representational Image)
Pixabay

நான் சொன்னேன்- ``ஹூப்ளி கொத்தனார் இன்னுமா புதையல்️ எடுத்துக்கொண்டே இருக்கிறார்?''

``அட... ஏற்கெனவே அவர உங்களுக்குத் தெரியுமா!'' என்று முகத்தில்️ மேலும் பிரகாசத்தைக் கூட்டி️னார் நண்பர்.

``நன்றாகத் தெரியுமே... ஐந்து ஆண்டுகளுக்கு முன், காரைக்கால்️ பகுதியில்️ மளிகைக்கடை வைத்திருந்த நமக்குத் தெரிந்த நபர் ஒருவரிடம் இப்படி️த்தான் பேசி, தங்கக்காசுகளை விற்றிருக்கிறார். கடைசியில்️ அத்தனையும் போலி. பாவம், கடையையே மூடி️விட்டு, கண்காணாமல்️ போய்விட்டார் அந்த நபர்'' என்று சொல்️லி முடி️க்க... ஆயிரம் வாட்ஸ், ஐந்து வாட்ஸாக மாறியிருந்தது.

ஆனாலும், நான் சொன்ன விஷயங்களின் மீது அவருக்கு அத்தனை நம்பிக்கை வந்ததுபோல தெரியவில்லை. ஹூப்ளி நபரிடம் பேசிய ஆடியோவை எனக்குப் போட்டுக் காட்டினார்.

பிற மாநிலக்காரர்கள் பேசுவதுபோன்ற `குழந்தைத் தமிழில்' அந்த ஹூப்ளி பார்ட்டி பேசுவதைக் கேட்டால், சுவராஸ்யம் மட்டுமல்ல சிரிப்பும் பொங்கும் நமக்கு.

என் வாட்ஸ்அப்பில் இருந்த ஒரு ஆடியோவை நான் ஓடவிட்டேன். சில மாதங்களுக்கு முன்பு ஒருவரிடம் அந்த ஹூப்ளி பார்ட்டி பேசும் ஆடியோ அது. இதைக் கேட்டு முடித்ததும் நண்பரிடமிருந்து பேச்சு, மூச்சே இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``சரி அந்த ஹூப்ளி நபரிடம் பேசி நாமே உண்மையைக் கண்டுபிடிக்கலாம். நேரடியாக தங்கக்காசு வாங்க வருவதுபோல பேசுங்கள். நான்குபேர் வருவார்கள் என்று பேசுங்கள். என்ன நடக்கிறது பார்ப்போம்'' என்று சிலபல பிளான்களைப் பேசிக் கொண்டிருந்தோம்.

தினம்தினம் அந்த ஹூப்ளி பார்ட்டி இவரை போனில் அழைத்திருக்கிறது. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இவரால் எடுக்க முடியவில்லை. அன்றைய தினமும் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த சூழலில் சரியாக ஹூப்ளி பார்ட்டியிடம் இருந்து போன். நண்பர் நம்மைப் பார்த்தார். ``நம்முடைய திட்டப்படியே பேசுங்கள்...'' என்றேன்.

`எண்ணன்னா... போன் எடுக்கவே இல்ல. அமவுன்ட் வேணாம். முதல்ல ஆளை அனுப்பு. சாம்பிள அனுப்புறேன்.'

`சரி, மூணு பேர அனுப்புறேன். அவங்க நகைக்கடை வெச்சிருக்காங்க.'

`மூணு பேரு எதுக்குண்ணா...' - ஜெர்க் அடிக்கிறார் ஹூப்ளி பார்ட்டி.

`முதல்ல ரெண்டு பேரு வரட்டும்... பிறகு நாலு பேரு வரட்டும். பயந்துடுவார். பெரியவர்... கிராமத்து ஆளு.'

`நாளு பேரும் பார்த்தாலே சிரிப்பு வரும். `சோத்துக்கு தெண்டமும்... மண்ணுக்கு பாரமும்' போலத்தான் இருப்பாங்க. அந்த கொத்தனார் பார்த்தாக்கூட சிரிச்சுடுவாரு.'

`ஆனா, நாலு பேருன்னா அவரு பயந்துடுவாருன்னா.'

Gold coins (Representational Image)
Gold coins (Representational Image)
Pixabay

`மூணு பேரை கார்ல வெச்சுட்டு ஒருத்தர மட்டும் கூப்பிட்டுட்டு போங்க.'

இப்படியே நீள்கிறது பேச்சு.

அதைத் தொடர்ந்து நானும் பேசினேன். எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் கன்னடம் தெரியும் என்பதால், அவருடைய மொழியிலேயே பேசினேன். என் பெயரைச் சொன்னதும், தெரியவில்லை என்றார். `என் நம்பரை யார் கொடுத்தார்கள்?' என்றெல்லாம் கேட்டார். ராமு என்று ஒரு பெயரைச் சொன்னதும், அவரு கையில கொடண்ணா... என்று உஷாராகப் பேசினார். ஹலோ... ஹலோ... என்று கேட்காதது போலவே சொல்லி கட் செய்தேன்.

அன்று மட்டும் மணமேல்குடி நண்பரை நான் சந்தித்திருக்காவிட்டால்️, ஹூப்ளி கிளம்பிப் போயிருப்பார். பிறகு என்ன நடந்திருக்கும்?

`சாம்பிள் கொடுக்கிறேன்' என்று அழைத்து, ஒன்றோ, இரண்டோ ஒரிஜினல்️ தங்க நாணயங்களைக் கொடுப்பார்கள். அது பழங்கால நாணயம் போலவே தயாரிக்கப்பட்டி️ருக்கும். ஊருக்கு வந்து பரிசோதித்துவிட்டு, கட்டுக்கட்டாகப் பணத்துடன் புறப்பட்டுவிடுவார்கள். ஏதாவது, ஒரு புறநகர் பகுதியில்️தான் டீலிங் நடக்கும். 'பெட்டி️க்குள் இருக்கும் தங்க நாணயத்தைப் பார்த்தோமா, காதும் காதும் வைத்ததுபோல ஊரை நோக்கிப் பறந்தோமா என்று இருக்க வேண்டும்' என்று கறார் காட்டுவார்கள். பணப்பெட்டி️யும், தங்க (?) நாணய பெட்டி️யும் கைமாறும் சமயத்தில்️ சொல்️லி வைத்ததுபோல சரியாக போலீஸ் வாகன சைரன் ஒலிக்கும்.

அவ்வளவுதான்... ஹூப்ளி மேஸ்திரி அண்ட்கோ, பணப்பெட்டி️ மற்றும் தங்கக்காசு (?) பெட்டி️யுடன் ஓட்டமெடுக்கும். `பணம் போனால்️ போகட்டும். நாம் சிக்கினால்️ அதோகதிதான்' என்றபடி️ தப்பித்தோம் பிழைத்தோம் என்று `தங்கக்காசு பங்காளி'களும் ஓடவேண்டி️யதுதான்...

ஏ.ஏ.சத்தார்
ஏ.ஏ.சத்தார்

பிறகென்ன... சொல்️லி வைத்து வந்த போலீஸும் (அது ஒரிஜினல்️ போலீஸா... இல்ல அவனுங்களும் அவன் ஆளா என்பது கர்நாடகாவுக்கே வெளிச்சம்) ஹூப்ளி மேஸ்திரி பார்ட்டி️களும் பணத்தைப் பங்கு போட்டுக்கொள்வார்கள்.

இப்படி️ ஏமாந்தவர்கள் பலரும் வீட்டி️ல்️ இருந்த நகை, வீடு, நிலம் என்று பலவற்றை விற்றும் கட்டுப்படி️யாகாமல்️ வட்டி️க்கு கடனுக்கு வாங்கியும் அவதிப்பட்டுக்கொண்டி️ருப்பது கண்கூடு. இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதற்கு ஆசைப்பட்டு... உள்ளதும் போச்சே... என அவதிப்பட வேண்டாமே மக்களே!

நண்பரைச் சிக்கலில்️ இருந்து காப்பற்றிய திருப்தியோடு, இன்னொரு டம்ளர் காபியைக் காலி செய்துவிட்டுக் கிளம்பினேன்.

- உஷார் தொடரும்...

- ஏ.ஏ.சத்தார்