Published:Updated:

பெட்டிக்கடை டு சூப்பர் மார்க்கெட்; நைசாக அபேஸ் செய்யும் மாடர்ன் திருடர்கள்; உஷார் அனுபவங்கள் - 6

மளிகை கடை (Representational Image)
News
மளிகை கடை (Representational Image) ( Pixabay )

வாடிக்கையாளர் என்று வரும் திருடர்கள்தான் அதிகம். கிராமங்களில் கூட்டம் கூட்டமாகத் திரியும் சிலர் வந்து பொருள்கள் வாங்குவார்கள். பேப்பரில் பொட்டலம் போட்டுக் கொடுத்தால், வேண்டாம் என்று சொல்லிவிட்டு, தாங்கள் சேலை, தாவணி என போர்த்தியிருக்கும் துணியிலேயே பொருளைக் கொட்டச் சொல்வார்கள்.

அரிசியை எடை போடச் சொல்லிவிட்டு, கடைக்காரர் விழித்திருக்கும்போதே கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அரிசி மூட்டை, எடைக்கற்கள், கல்லாப்பெட்டி என அனைத்தையும் ``எடுங்க... எடுங்க... எடுங்க...'' என்று `வைகைப் புயல்' வடிவேலு மொத்தமாக வழித்தெடுத்துக் கொண்டு டேக்கா கொடுப்பதுதெல்லாம் சும்மா. அதைவிட பற்பல டெக்னிக்குகளில் திருட்டுகள் அரங்கேறுவது மளிகைக்கடைகளில் சர்வசாதாரணம். ரூம் போட்டு யோசித்து, டிசைன் டிசைனாக திருட்டு வேலைகளை அரங்கேற்றுவதில் நம்மவர்கள் பலே கில்லாடிகள்.

கடையில் இருக்கும் பணியாளரும், வெளிநபரும் கூட்டுக்களவாணிகளாக இருந்துகொண்டு, கடையில் இருக்கும் பொருள்களைத் திருடி, அதே கடையில் விற்பதும் நடக்கும். குறிப்பாக, ஏலக்காய், முந்திரி, திராட்சை என விலை உயர்ந்த பொருள்களை பில் போடாமலே பொட்டலம் போட்டுக் கொடுத்துவிடுவார்கள்.

அரிசி (Representational Image)
அரிசி (Representational Image)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அன்று மாலையே அந்த நபர் வந்து, கொள்முதல் விலையைவிடக் குறைந்த விலைக்கு அதே கடையில் விற்பனை செய்வார். பல நாள் திருடன், ஒரு நாள் அகப்படுவான் என்பதுபோல சிக்கினால்தான் உண்டு!

வாடிக்கையாளர் என்கிற பெயரில் வரும் திருடர்கள்தான் அதிகம். கிராமங்களில் கூட்டம் கூட்டமாகத் திரியும் சிலர் வந்து பொருள்கள் வாங்குவார்கள். பேப்பரில் பொட்டலம் போட்டுக் கொடுத்தால், வேண்டாம் என்று சொல்லிவிட்டு, தாங்கள் சேலை, தாவணி என போர்த்தியிருக்கும் துணியிலேயே பொருளைக் கொட்டச் சொல்வார்கள். அதைக் கொட்டியதும், `விலை ரொம்ப ஜாஸ்தி' என்று திட்டிக்கொண்டே பொருளை திருப்பிக் கொடுப்பார்கள். நாமும் அதை வாங்கிக் கொண்டு, காசைத் திருப்பிக் கொடுத்துவிடுவோம். ஆனால், நாம் கொட்டிய பொருளில் கிலோவுக்கு 400 கிராம்தான் திரும்ப வரும். அவர்கள் போட்டிருக்கும் துணியிலேயே ரகசிய பை இருக்கும்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இன்னொரு லாஜிக்கும் பயன்படுத்துவார்கள். கூட்டமாக இருக்கும் நேரத்தில் கையில் ஒரு 500 ரூபாய் பணத்தை நீட்டி ஒரு பொருள் கேட்பார், ஒரு பெண். அதன் பெயர் சொல்லத் தெரியாமல், சைகை மட்டுமே செய்வார். அந்தப் பொருளை எடுத்துக் கொடுப்பதற்காக நாம் திரும்பும் நேரத்தில், கையிலிருக்கும் பணத்தை ஜாக்கெட்டில் செருகிவிடுவர். பொருளைக் கொடுத்துவிட்டு காசு கேட்டால், `500 ரூபாய் கொடுத்தேனே' என்பார். நாம் சந்தேகத்துடனேயே இல்லை என்று கூறுவோம். அதேநேரம், நான்கைந்து கடைகள் தள்ளி நிற்கும் அதே கூட்டத்தைச் சேர்ந்த சிலர், ஓடிவந்து `காச்மூச்' என்று கத்த ஆரம்பித்துவிடுவார்கள். வியாபார நேரத்தில் தேவையில்லாத பிரச்னை என்று பயந்துகொண்டு மீதி பணத்தைக் கொடுத்து அனுப்பி விடுவோம்.

நவீனகால சுயசேவை சூப்பர் மார்க்கெட்டுகளில் கண்காணிப்பு கேமராக்கள் வந்துவிட்டன. ஆனாலும்கூட திருட்டுக்குப் பஞ்சமில்லை... திருட்டு டெக்னிக்குகளுக்கும் பஞ்சமென்பதே இல்லை.

சென்னையில் 45,000 சதுர அடி சூப்பர் மார்க்கெட் அது. அங்கே 3 லட்சம் மதிப்புள்ள சில்க் சாக்லேட் ஒரே மாதத்தில் திருட்டுப்போனது அதிர்ச்சி. இத்தகைய திருட்டுகள் தொடரவே, அந்தக் கடையையே மூடிவிட்டார் பரிதாபத்துக்குரிய அதன் உரிமையாளர்.

மளிகை கடை (Representational Image)
மளிகை கடை (Representational Image)
ம.அரவிந்த்

சிகரெட், ஷேவிங் பிளேட், சில்க் சாக்லேட், பாதாம் இதுபோல முக்கியமான சில பொருள்களை கேஷ் கவுண்டர் அருகில் வைத்திருப்பார்கள் கடைக்காரர்கள். இப்படி சென்னை கோடம்பாக்கத்திலிருந்த எங்கள் சூப்பர் மார்க்கெட் கடையிலும் வைப்போம். அவற்றில் இரண்டு ப்ளேடு பாக்கெட் திருடு போய்விட்டது. ஒரு பாக்கெட்டின் மதிப்பு 800 ரூபாய். இதை நினைத்து, இரண்டு நாள்களாக எனக்குத் தூக்கம் வரவில்லை.

இதைப் பற்றி அக்கம்பக்கத்து சூப்பர் மார்க்கெட் மேனேஜர்கள், உரிமையாளர்கள் என்று எதார்த்தமாக பேசிக்கொண்ட சூழலில், `அவர்களுக்கும் இஸ்க்... இஸ்க்'தான். ஆம், ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு விதமான திருட்டுக் கதைதான். அடுத்தடுத்த சந்திப்புகளுக்குப் பிறகு ஒரு நாள், `சென்னை சூப்பர் மார்க்கெட் டிரேடர்ஸ் அசோஸியேஷன்' ஆரம்பமானது. எனக்கும் அதில் ஒரு பொறுப்பு கொடுத்தார்கள்.

திருட்டுகளைத் தடுக்க ஆலோசனை மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது மிக முக்கியமாக இந்த அசோஷியேஷனில் நடக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சூளைமேட்டில் என் வீட்டின் அருகே உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு காய் கனி வாங்குவதற்காக ஒரு நாள் சென்றேன். அதன் மேலாளர் எனக்கு நண்பர். அன்றைய தினம் அவர் கடையில் இல்லை. காய்கனி வாங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு பெண் ஏதோ ஒரு பொருளை எடுத்து தன் உடலில் மறைத்ததுபோல எனக்குத் தெரிந்தது. உடனே மேலாளருக்குப் போன் செய்து விவரம் சொன்னேன். அவர், கண்காணிப்பாளரிடம் தகவல் சொல்லி செக் செய்யச் சொல்லிவிட்டார். விவரமான அந்த கண்காணிப்பாளர், கடையில் ஆங்காங்கே பொருள்களை அடுக்கிக்கொண்டு இருந்த ஊழியர்கள் அனைவரையும் கேஷ் கவுண்டர் அருகில் நின்றுகொண்டு பொருள்களை அடுக்கச் சொல்லிப் பணித்தார்.

திருட்டு வேலை செய்வதாக சந்தேகிக்கப்பட்ட பெண் சற்று உயரம் குறைவு. அதனால், சற்றே உயரமாக இருக்கும் வெஜிடபிள் கவுண்டர் அருகே மறைவாக ஸ்டூல் போட்டு உட்கார்ந்து கண்காணிக்க ஆரம்பித்து விட்டார் கண்காணிப்பாளர்.

நான், காய் கனி வாங்கிக்கொண்டு வீடு திரும்பிவிட்டாலும், இருப்புக் கொள்ளவில்லை. மீண்டும் அந்த சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றேன். அப்போது, மேனேஜரும் அங்கு வந்திருந்தார். அவருடைய கேபினுக்குச் சென்றால், அங்கே அந்த `பொருள்பிரியை' கலவரமான முகத்துடன் உட்கார்ந்திருந்தார்.

Market (Representational Image)
Market (Representational Image)

ஆரம்பத்தில் தயங்கித் தயங்கி சில பொருள்களைத் திருடிய அந்தப் பெண், பிறகு அக்கம்பக்கத்தில் யாரும் இல்லை என்று தெரிந்ததும், இஷ்டத்துக்கு அள்ளி உள்ளே போட்டிருக்கிறார். ஐந்து ரூபாய் பிஸ்கெட் பாக்கெட் ஒன்றுக்கு மட்டும் பில் போட்டு வாங்கிக்கொண்டு வெளியேற முயற்சி செய்துள்ளார்.

`மேடம், ஒரு நிமிஷம் உள்ளே வாங்க' என்று கண்காணிப்பாளர் அழைக்க...

``எதுக்கு?'' என்று எரித்துவிடுவதுபோல பார்த்திருக்கிறார். ஆனால், உள்ளே வரச்சொல்லி கண்காணிப்பாளர் கறாராக பேசவே, ஆங்கிலப் புலமையைக் காட்டி கத்திக்கூப்பாடு போட்டிருக்கிறார் அப்பெண். ஆனாலும், பெண் ஊழியர்கள் துணையோடு உள்ளே இழுத்து வந்து உட்கார வைத்த கண்காணிப்பாளர், ``திருட்டுத்தனமாக எடுத்த பொருள்களையெல்லாம் நீங்களே வெளியில் எடுத்துவைத்துவிட்டால் மரியாதை. எங்களை எடுக்க வைத்துவிடாதீர்கள்'' என்று குரலில் கடுமையை ஏகத்துக்கும் ஏற்றியிருக்கிறார்.

அடுத்த நொடியே... பன்னீர் பாட்டில், நெய், சாக்லேட், மசாலா என்று வரிசையாக எடுத்து அடுக்கியிருக்கிறார் அந்தப் பெண்.

கிளஸ்டர் மேனேஜருக்கு தகவல் செல்ல, கம்பெனி விதிமுறைகளின்படி, பத்து மடங்கு கூடுதலாக பில் போட்டு அனுப்பி வைக்கச் சொல்லியிருக்கிறார்.

``கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். வீட்டில் மாமியார் மட்டுமே. வெளியில் தெரிந்தால் மானம் போய்விடும்'' என்றெல்லாம் சாதித்து, பணம் கொடுக்காமல் தப்பிச் செல்வதற்காக பரிதாபத்தை ஏற்படுத்தப் பார்த்திருக்கிறார் அந்தப் பெண்.

விடாப்பிடியாக இருந்த கண்காணிப்பாளர், 820 ரூபாய்க்கு திருடிய பொருள்களுக்கு பத்து மடங்கு விலை போட்டு அதாவது, 8200 ரூபாய்க்கு பில் போட்டிருக்கிறார். அந்தப் பெண் கையில் போட்டிருந்த வளையலை அடகு வைத்து பணத்தை வசூலித்திருக்கிறார்.

ஏ.ஏ.சத்தார்
ஏ.ஏ.சத்தார்

ஒரு மாதமிருக்கும்... மற்றொரு சூப்பர் மார்கெட்டுக்கு சென்றிருந்தேன். கடை ஊழியர்கள் சற்று பரபரப்பாகவே இருந்தார்கள். என்ன... ஏது என்று கேட்டேன். மாடர்ன் பெண் ஒருவர், கடையில் திருடி மாட்டிக்கொண்டார். பேக் ஆபீஸில் வைத்து விசாரித்துக் கொண்டுள்ளனர் எனத் தகவல் சொன்னார்கள்.

நானும் பேக் ஆபீஸ் சென்று பார்த்தால்... அதிர்ச்சி.

என்னை அடையாளம் கண்டுகொண்டுவிட்ட அந்த மார்டன் பெண், ``ஏதும் சொல்லிவிட வேண்டாம்'' என்று கண்களாலேயே ஜாடை செய்தார்.

ஆத்திரத்தில் கையை ஓங்க நினைத்த நான், ``ச்சே... நீயெல்லாம் திருந்தவே மாட்டியா?'' என்று கத்திவிட்டேன்.

மேனேஜர் ஓடோடி வந்தார்.

``இந்தப் பெண்ணைத் தெரியுமா சார்?'' எனக்கேட்டார்.

``போன மாதம், அந்த சூப்பர் மார்க்கெட்டில் மாட்டிக்கொண்டார்" என்று சொல்லிவிட்டு, அந்த மேனேஜருக்கு போன் செய்தேன்.

`மாப்ளே ஒருத்தன் சிக்கிட்டான். போன மாசம் மூத்திர சந்துலே அடி வாங்கினானே அவனேதான்' என வடிவேலு பாணியில் சொன்னேன். அங்கிருந்து கிளம்பி வேகமாக வந்து சேர்ந்த அந்த மேனேஜர் கேட்டதும் அதேகேள்வியைத்தான் - ``ச்சே நீயெல்லாம் திருந்தவே மாட்டியா?"

இந்தக் கடையில் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு, எடுத்த பொருள்களுக்கு மட்டும் பில் போட்டு அனுப்பிவைத்தனர்.

`ரொம்ப நல்லவங்ங்ங்ங்ங்ங்க்' என்றபடியே வெளியேறினார் அந்த மார்டன் பெண்!

எங்கள் கடையில் திருட்டே போகாது என்று நம்பிக் கொண்டிருப்பவர் புத்திசாலி வியாபாரியல்ல!

-ஏ.ஏ.சத்தார்