Published:Updated:

எத்தனைக் காலம்தான் ஏமா(ற்)றுவார் இந்த நாட்டிலே! - சத்தாரின் உஷார் அனுபவங்கள் - 1

இந்தக் காலத்தில் பலகாரக் கடைகளில் ஸ்வீட் வாங்கி கொண்டாடுவதுபோல தீபாவளியைக் கொண்டாடும் காலமல்ல அது. அனைத்துப் பட்சணங்களையும் வீட்டிலேயேதான் மணக்கமணக்கச் செய்வார்கள். பத்துப் பதினைந்து நாள்களுக்கு முன்பாகவே செய்ய ஆரம்பித்து, அடுக்குப் பானைகளில் பத்திரப்படுத்திவிடுவார்கள்.

தீபாவளி என்றதும் நம் நினைவுக்கு வருவது நம் மக்கள் ஏமாறும் நாட்கள்தான். 1982- ல் திருவாரூரில் எங்கள் உறவினரின் மளிகை கடையில் நான் புதிதாக பணிக்குச் சேர்ந்திருந்தேன். அந்தக் காலகட்டங்களில் தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே, தீபாவளி வியாபாரம் களைகட்ட ஆரம்பித்துவிடும்.

மிகமுக்கியமாக, அக்கம்பக்கத்து சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களிலிருக்கும் கடைகளுக்கு மொத்தக் கொள்முதல் ஆரம்பித்துவிடும். 15 நாட்கள் இருக்கும் போது சில்லரை வியாபாரம் பிய்த்துக்கொண்டு போகும்.

தீபாவளி
தீபாவளி
தீபாவளி போனஸை இப்படி ஸ்மார்ட்டாகவும் பயன்படுத்தலாம்; நிபுணரின் வழிகாட்டல்!

இந்தக் காலத்தில் பலகாரக் கடைகளில் ஸ்வீட் வாங்கி கொண்டாடுவதுபோல தீபாவளியைக் கொண்டாடும் காலமல்ல அது. அனைத்துப் பட்சணங்களையும் வீட்டிலேயேதான் மணக்கமணக்கச் செய்வார்கள். பத்துப் பதினைந்து நாள்களுக்கு முன்பாகவே செய்ய ஆரம்பித்து, அடுக்குப் பானைகளில் பத்திரப்படுத்திவிடுவார்கள். அவற்றை எடுத்துக் கொண்டு, சைக்கிளிலேயே அக்கம்பக்க ஊர்களில் இருக்கும் உறவுகள், நட்புகள் என்று பரிசளித்து திரும்புவார்கள்.

இதேபோலவே தீபாவளி திருடர்களும் ஒரு மாதத்துக்கு முன்பாகவே தங்களை பலவழிகளில் தயார்படுத்திக் கொண்டு, தொழிலை ஆரம்பித்துவிடுவார்கள்.
சைக்கிள் திருட்டு என்பது, தீபாவளி நேரத்தில் ஏகத்துக்கும் நடக்கும். குறிப்பாக கடை வாசலில் நிறுத்திவிட்டு சாமான்கள் வாங்கித் திரும்புவதற்குள், சைக்கிள்கள் அபேஸ் ஆகிவிடும்.

தினமும் எங்கள் கடை வாசலில் நிறுத்திய சைக்கிள் ஒன்று அல்லது இரண்டு இப்படி காணாமல் போய்க்கொண்டிருந்தது. சிசிடிவி, செக்யூரிட்டி என்பதெல்லாம் தென்படாத காலமென்பதால், `வாடிக்கையாளர்கள் தங்கள் சைக்கிளை பூட்டி, தங்கள் பொறுப்பில் வைத்துக்கொள்ளவும். சைக்கிள் காணாமல் போனால் நிர்வாகம் பொறுப்பல்ல' என கடைக்கு கடை போர்டுகளை தொங்கவிடுவார்கள்.

மளிகைக் கடைகள் (Representational Image)
மளிகைக் கடைகள் (Representational Image)
வாழ்வில் ஒளியேற்றும் தீபாவளி நன்னாளில் கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம் எது?

பல கடைகளுக்கும் ஏறி இறங்கிவிட்டு பின்னர் மளிகைக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள்தான் அதிகம். குறிப்பாக, தீபாவளி ஜவுளி, நகை போன்றவற்றை வாங்கிக் கொண்டு பிறகுதான் மளிகைக் கடைக்கு வருவார்கள். காரணம், மளிகைக் கடை பொருள்கள் கொஞ்சம் வெயிட்டாக இருக்கும் என்பதுதான். அப்படி வருபவர்களின் பைகளைக் குறி வைத்து திருடர்களும் சுழல்வார்கள் (இப்போதும்கூட அப்படியேதான். கடைகளில் திருட்டு நடக்கவே செய்கிறது. அதுமட்டுமல்லால் ஆன்லைன் திருடர்களும் அதிகமாகிவிட்டனர். அந்தத் தள்ளுபடி, இந்தத் தள்ளுபடி என்று எதையாவது சொல்லி, பணத்தை சூறையாடுகிறார்கள்).

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் ஜவுளி, நகை பை முதல் பணப்பை வரை திருட்டு போகும். எவ்வளவுதான் உஷாராக இருந்தாலும் திருட்டு குறையாது. நமக்குப் பல சிந்தனைகள். ஏமாற்றுபவனுக்கு ஒரே சிந்தனைதானே!

புதிதாக சேர்ந்தவன் என்பதால், திருட்டுப் போகாமல் கண்காணிக்கும் வேலையை எனக்குக் கொடுத்திருந்தனர். ஒருவர் வாங்கி வைத்த தீபாவளி ஜவுளி பையை, நீண்டநேரமாக கடை வாசலில் உட்காந்திருந்த இன்னொருவர் நைஸாக எடுத்துச் செல்ல எத்தனித்தார்.

ஏ.ஏ.சத்தார்
ஏ.ஏ.சத்தார்

``எங்க மாமாவோடது. அவர்தான் வாங்கிவெச்சார். அதான் எடுத்துட்டு போறேன்'' என்றார், நான் கேட்டபோது, `மாமா' என்று இவர் கைநீட்டியவரிடம் கேட்டபோது, ``இவனை யார் என்றே தெரியாது'' என்றார். அவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். மாமூலான விசாரணையின் முடிவில், சுமாராக 40 சைக்கிள்களை கைப்பற்றினார்கள்-அவன் அடையாளம் காட்டிய இடங்களிலிருந்து.

தீபாவளி ஜவுளிப் பை பறிபோகாமல் காப்பாற்றியதோடு, எங்கள் கடை வாசலில் ஆறு மாதத்துக்கு முன் பறிகொடுத்த சைக்கிளையும் கைப்பற்றி அந்த வாடிக்கையாளருக்கு கொடுத்த சந்தோஷம் நமக்கு.

- ஏ.ஏ.சத்தார்

(உஷார் தொடரும்)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு