ஆசியாவின் இரண்டு பெரிய பணக்காரர்களான கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி பல துறைகளில் தங்களின் வர்த்தகத்தைப் பெருக்கிவரும் நிலையில், தற்போது ஊடகத் துறையில் தங்களின் வர்த்தகத்தைப் பெருக்கத் திட்டமிட்டுள்ளனர்.
ஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய ஊடகத் துறையாகச் செயல்பட்டு வரும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்களுடன் அதானியும் அம்பானியும் போட்டிபோட்டு வருகின்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அம்பானியின் Viacom18 மீதான முதலீடு மற்றும் அதானியின் புதிய ஊடக நுழைவு இருவரிடமும் போட்டியை ஏற்படுத்தி உள்ளது. அம்பானி குழுமம் ஏற்கெனவே ஊடகத்துறையில் இருந்தாலும், அதானி ஊடகத் துறையில் புதிதாக இறங்கி இருப்பது, ஊடகத் துறையில் பெரும் போட்டியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அதானி நிறுவனம் ஒரு புதிய மீடியா துணை நிறுவனத்தை நிறுவியுள்ளதாகக் கூறியது. அம்பானியின் Viacom18 மீடியா நிறுவனம், பாரமவுன்ட் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து, ஜேம்ஸ் முர்டோக் ஆதரவு கொண்ட போதி ட்ரீ சிஸ்டம்ஸ் தலைமையில் $1.8 பில்லியன் டாலர் புதிய முதலீடு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.