Published:Updated:

ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர்... அசத்தும் அதானி..!

அதானி
பிரீமியம் ஸ்டோரி
News
அதானி

S U C C E S S S T O R Y

மகேஷ்

கடந்த ஆண்டு ரிலையன்ஸ் குழுமத்தின் சந்தை மதிப்பு வேகமாக உயர்ந்தது. அதேபோல, தற்போது அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு வேகமாக உயர்ந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஆசிய அளவில் இரண்டாவது பெரிய பணக்காரராக இருக்கிறார் கௌதம் அதானி. மேலும், சர்வதேச அளவில் 14-வது பணக்காரராக உயர்ந்திருக்கிறார். தவிர, ரிலையன்ஸ், டாடா ஆகிய குழுமங்களுக்குப் பிறகு மூன்றாவது பெரிய குழுமமாக அதானி குழுமம் மாறியிருக்கிறது. நடப்பு ஆண்டில் மட்டும் இவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.2.56 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு ரூ.75 கோடி அளவுக்கு அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறது.

அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த ஆண்டு மே மாதத்தில் 20 பில்லியன் டாலராக (ரூ.140 லட்சம் கோடிக்குமேல்) இருந்தது. ஆனால், தற்போது ஆறு மடங்கு அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் சந்தை மதிப்பு 37 பில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே உயர்ந்திருக்கிறது.

அதானி
அதானி

யார் இந்த அதானி..?

ஆரம்பத்தில் வைர வியாபாரியாக 1980-களில் தொழிலைத் தொடங் கியவர். அதன் பிறகு சொந்த மாநிலமான குஜராத்துக்குச் சென்று, சகோதரரின் பிளாஸ்டிக் தொழிலைக் கவனிக்கச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து, 1988-ம் ஆண்டு அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, துறைமுகம், விமான நிலையம், லாஜிஸ்டிக்ஸ், ரியல் எஸ்டேட், ஃபைனான்ஷியல் சர்வீசஸ், காஸ் விநியோகம் உள்ளிட்ட பல தொழில்களில் களம் இறங்கினார். சுரங்கமும் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் சுரங்கத்துக்கு அனுமதி கிடைத்தது. ஆனால், இது பெரும் சர்ச்சையாக இன்றளவுக்கும் இருக்கிறது.

2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதலில் தப்பிப் பிழைத்தவர் அதானி. நவம்பர் 2008-ம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடந்தது. அப்போது அந்த ஹோட்டலில் துபை துறைமுகத்தின் தலைமைச் செயல் அதிகாரியுடன் இரவு உணவில் இருந்தார். அப்போது தாக்குதல் நடந்ததை அடுத்து விருந்தினர்களைத் தரைத்தளத்துக்கு ஹோட்டல் நிர்வாகம் கொண்டு சென்றது. இரவு முழுவதும் ஹோட்டலில் இருந்த அதானி, அடுத்த நாள் காலையில் அங்கிருந்து வெளியேறினார். ‘‘15 அடி தூரத்தில் சாவைப் பார்த்துவிட்டு வந்திருக் கிறேன்’’ என அப்போது அவர் கூறியிருந்தார்.

விலை உயர்ந்த பங்குகள்...

அதானி குழுமத்தின் ஆறு பட்டியலிடப்பட்ட பங்குகள் கடந்த 12 மாதத்தில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. ஆனால், குழுமத்தின் வருமானத்துக்கும் பங்குகளின் விலை ஏற்றத்துக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகவே பல பங்குச் சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக் கிறார்கள்.

2020-ம் நிதி ஆண்டு முடிவில் குழுமத்தின் வருமானம் ரூ.1.02 லட்சம் கோடி. குழுமத்தின் மொத்த லாபம் சுமார் ரூ.3,800 கோடி. 2021-ம் நிதி ஆண்டில் கணிசமான சதவிகிதம் அளவுக்கு வருமானம் உயர்ந்திருந்தாலும் வருமானத்துக்கும் பங்குகளின் விலை ஏற்றத்துக்குப் பெரிய அளவுக்கு வித்தியாசம் இருப்பதாகவே பல சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 2025-ம் நிதி ஆண்டு அல்லது 2026-ம் நிதி ஆண்டில்தான் இந்தக் குழுமத்தின் உண்மையான நிலை தெரியவரும் எனத் தெரிவிக்கிறார்கள்.

தற்போது செய்யப்பட்டுள்ள முதலீடுகள் 25-ம் ஆண்டுக்குப் பிறகுதான் வருமானத்தைக் கொடுக்ககூடும் எனத் தெரிவிக்கிறார்கள். துறைமுகங்கள், விமான நிலையங்கள், கட்டுமான திட்டங்கள் எனப் பெரிய அளவிலான உரிமங்கள் இந்தக் குழுமத்தின் வசம் இருக்கிறது. போட்டி கிடையாது என்றாலும் இந்த நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பது முக்கியம்.

இந்தக் குழுமத்தின் துறைமுகத் தொழில் மிக முக்கியமானது. பல முக்கியமான துறைமுகங்கள் இந்த நிறுவனம் வசம் உள்ளன. சீனா ஏற்றுமதியில் முக்கியமான நாடு. காரணம், அந்த நாட்டில் உள்ள துறைமுகங்கள். பொருள்களை ஏற்றி இறக்க ஆகும் காலம் சர்வதேச அளவில் மிகக் குறைவு. ஆனால், இந்தியாவில் இந்த நேரம் அதிகம். இன்னும் சில ஆண்டு களில் இந்த நேரம் குறையும். இதற்கான போக்குவரத்தைச் சீர் செய்யும் நடவடிக்கை எடுக்கப் பட்டுவருகிறது. அப்போது இந்தியாவின் ஏற்றுமதியும் கணிசமாக உயரும். அதானி குழுமத்தின் துறைமுகத் தொழிலும் வளர்ச்சி அடையும்.ஆனால், அதானி குழுமத்தில் இந்த நிறுவனத்தைத் தவிர, மற்ற நிறுவனங்கள் அனைத்தும் எதிர்பார்ப்பின் அடிப்படையிலே வர்த்தகமாகின்றன. அதானி க்ரீன் என்னும் நிறுவனத்தின் பி.இ விகிதம் 500-க்கும் மேல் இருக்கிறது. ஐ.டி நிறுவனங்களுக்கு இவ்வளவு பி.இ விகிதம் கிடையாது.

குழுமத்தின் கடனும் சுமார் ரூ.1.24 லட்சம் கோடி அளவுக்கு இருக்கிறது. கடன் இருக்கும் அளவுக்கு சொத்துகளும் உள்ளன. என்றாலும் இந்தச் சொத்துகள் (தொழில்கள்) கோவிட் காலத்துக்கு பிறகு, எவ்வளவு வருமானத்தை கொடுக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பங்குகள் விலை உயர்வு அல்லது சரிவுக்கு சம்பந்தபட்ட நிறுவனத்தின் நிதிநிலை மட்டுமன்றி, அரசியல் காரணங் களும் உள்ளன என்பதை முதலீட் டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச தேர்தலில் பா.ஜ.க தோல்வி அடைந்தால், அதானி குழுமப் பங்குகள் விலை கணிச மாகக் குறையலாம் என்று நிபுணர்கள் எச்சரிப்பதையும் கவனிக்க வேண்டும்.

அதானி குழும நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பொறுத்தே அவர் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருப்பாரா என்பது தெரியும்!