Published:Updated:

ஏர் ஏசியாவின் புதுமையான மார்க்கெட்டிங்... ‘‘கபாலி ரஜினியால் எங்கள் மார்க்கெட் ஷேர் உயர்ந்தது..!’’

ரஞ்சித் குமார்
பிரீமியம் ஸ்டோரி
ரஞ்சித் குமார்

மார்க்கெட்டிங்

ஏர் ஏசியாவின் புதுமையான மார்க்கெட்டிங்... ‘‘கபாலி ரஜினியால் எங்கள் மார்க்கெட் ஷேர் உயர்ந்தது..!’’

மார்க்கெட்டிங்

Published:Updated:
ரஞ்சித் குமார்
பிரீமியம் ஸ்டோரி
ரஞ்சித் குமார்

சமீப காலத்தில் மார்க்கெட்டிங்குக்காக அதிகம் பேசப்பட்ட பிராண்ட், ஏர்ஏசியா. கபாலி பட வெளியீட்டு சமயத்தில் செய்யப் பட்ட மார்க்கெட்டிங் உத்தி ஏர் ஏசியாவைப் பலரையும் பார்க்கும்படி செய்தது. அது பற்றி ஏர் ஏசியா இந்தியாவின் மார்க்கெட்டிங் பிரிவின் தலைவர் ரஞ்சித் குமாருடன் பேசினோம்... சுவாரஸ்யமாக இருந்தது. அவரது பேச்சின் சுருக்கம் இனி...

‘‘தேனி சொந்த ஊர். வேலை விஷயமாக மூணாறு பகுதியில் இருந்தோம். விமானம் என்பது எனக்கு வெகு தொலைவில் இருந்தது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்தேன். அதைத் தொடர்ந்து சில நிறுவனங்களில் பணியாற்றினேன். அப்போதுதான் நிர்வாகம் படிக்க வேண்டும் எனத் தோன்றியது. ஐ.ஐ.எம் இந்தூரில் எம்.பி.ஏ நிர்வாகம் படித்தேன்.

மார்க்கெட்டிங்கில் வேலை செய்ய எனக்கு விருப்பம். குறிப்பாக, எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களில் நிறைய கற்றுக்கொள்ள விரும்பினேன். ஆனால், பெரும்பாலான பிராண்டுகள் மும்பையில் இருந்தன. சென்னையில் உள்ள கவின்கேர் நிறுவனத்தில் வாய்ப்பு கிடைத்தது. ரெஸ்டாரன்ட், சலூன், பால் உள்ளிட்ட பொருள்களை அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இந்தச் சமயத்தில், ஏர் ஏசியா (மலேசியா) நிறுவனத்திடமிருந்து வாய்ப்பு வந்தது. நான் விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் வேலை பார்த்ததில்லை. ஆனால், ஏர் ஏசியாவில் விமானப் போக்கு வரத்துத் துறையில் இருப்பவர்களைவிட இதர துறைகளில் இருப்பவர்கள் வெற்றி அடைய முடியும் என்பது ஏர் ஏசியாவின் நம்பிக்கை. தவிர, ஏர் ஏசியா அப்போது மலேசியாவில் இருந்து திருச்சி மற்றும் கொச்சிக்கு விமானப் போக்கு வரத்தை இயக்கிவந்தது. அது ஆரம்ப காலம் என்பதால், வாடிக்கை யாளர்களை ஈர்க்க முடியவில்லை. அதனால் இந்தியாவில் இருக்கும் ஒருவர்தான் சரியான தேர்வாக இருப்பார் எனக் கருதி, என்னைத் தேர்வு செய்தார்கள். விமானத்துறை எனக்கும் புதிது என்பதால், மலேசியாவுக்கு உற்சாகமாகக் கிளம்பினேன்.

ரஞ்சித் குமார்
ரஞ்சித் குமார்

வழக்கமாக வெற்றி அடையும் என நம்பப்படும் வழித்தடங்களில் ஏர் ஏசியா கவனம் செலுத்தாது. அப்போது ஆன்லைன் பெரிதாக இல்லை. எனவே, டிஸ்ரிபியுஷன் நெட்வொர்க்குகளை அதிகப்படுத்தினோம். மேலும், மார்க்கெட்டிங்குக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். ஆறு மாதங்களுக்கு முன் பதிவு செய்தால் ரூ.2,000 மட்டுமே என விளம்பரம் செய்தோம். இதனால் சந்தையில் ஏர் ஏசியாவின் பெயர் பிரபலமாக ஆரம்பித்தது. இரண்டு தடங்களில் மட்டுமே இருந்த ஏர் ஏசியா ஓர் ஆண்டில் இந்தியாவில் ஆறு வழித்தடங்களில் செயல்படத் தொடங்கியது.

அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் துணை நிறுவனம் தொடங்கத் திட்டமிடப்பட்டது. அதிக போக்குவர்த்து இல்லாத பெங்களூரு – கோவா மற்றும் பெங்களுரூ - கொச்சின் ஆகிய நகரங் களுக்கு விமானச் சேவை தொடங்கினோம். எங்களைப் பார்த்து போட்டி நிறுவனங்களும் எங்கள் விமான நேரத்துக்கு முன்னும் பின்னும் விமானங்களை இயக்கத் தொடங்கின. போட்டி யைச் சமாளிக்க ரூ.5-க்கு டிக்கெட் என நாங்கள் செய்த விளம்பரத்துக்கும் நல்ல வரவேற்பு. அந்தச் சமயத்தில்தான் கபாலி ஷூட்டிங் தொடங்கியது. ஏர் ஏசியா மலேசியா நிறுவனம். கபாலி ஷூட்டிங்கும் மலேசியாவில் நடந்தது என்பதால், நாங்கள் பல சமயம் இணைந்து செயல்பட்டோம்.

ஏர்  ஏசியாவின் புதுமையான மார்க்கெட்டிங்... ‘‘கபாலி ரஜினியால் எங்கள் மார்க்கெட் ஷேர் உயர்ந்தது..!’’

கபாலி வெளியாகிற சமயத்தில், ரஜினியின் படத்தை (கபாலி தோற்றத்தில்) விமானத்தில் பெரிதாக வரையலாமே என்கிற ஐடியா வந்தது. இந்தியாவில் இதற்குமுன் யாரும் செய்திராத மார்க்கெட்டிங் டெக்னிக் அது. எனவே, தொழில்நுட்பப் பணியாளர் களை வெளிநாடுகளில் இருந்து வரவழைத்து, ஹைதராபாத்தில் 18 நாள்கள் டிசைன் செய்து, கபாலி ரஜினியின் படத்தை விமானத்தில் வரைந்தோம்.

அதனுடன் ஒரு புதுமையான விளம்பரத்தையும் செய்தோம். ‘‘பெங்களூருவில் இருந்து சென்னைக்கு விமானப் பயணம்; சத்யம் தியேட்டரில் கபாலி படம்; மாலை பெங்களூருக்குப் பயணம்’’ என கபாலி படம் பார்ப்பதை ஓர் அனுபவமாக மாற்ற முடிவெடுத்தோம். சுமார் 10,000 ரூபாயை டிக்கெட் விலையாக நிர்ணயம் செய்தோம். 15 நிமிடங்களில் 180 டிக்கெட் களும் விற்றுத் தீர்ந்தது. இதற்குப் பிறகு, ஏர் ஏசியா இந்தியா பிராண்ட் குறித்த பெரிய விழிப் புணர்வு உருவானது. 2 சத விகிதத்துக்குள் இருந்த எங்கள் சந்தை ஐந்து சதவிகி தத்துக்குமேல் சென்றது’’ என கபாலி உத்தி பற்றிப் பேசியவர், கோவிட் கால அனுபவத்தையும் சொன்னார்.

‘‘முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தருவது பெரிய சவாலாக இருந்தது. அடுத்து, திடீர் திடீரென டிக்கெட் கேன்சலாகும். அதன் பிறகு, வாடிக்கையாளர்கள் எத்தனை முறை வேண்டு மானாலும் டிக்கெட்டை மாற்றிக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்தோம். இதனா லும் ஏர் ஏசியாவைப் பலரும் விரும்ப ஆரம்பித்தார்கள்’’ என ரஞ்சித் கூறினார்.

புதுமையான மார்க்கெட்டிங் எப்போதும் வெற்றியைத் தரும் என்பதற்கு ஏர் ஏசியா மிகச் சிறந்த உதாரணம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism