Published:Updated:

காற்றிலிருந்து நீரைத் தயாரித்து விற்பனை செய்யும் பெங்களூரு ஸ்டார்ட்அப்!

கோவிந்த பாலாஜி, வெங்கடேஷ், பார்தீப் கார்க், ஸ்வப்னில்
பிரீமியம் ஸ்டோரி
கோவிந்த பாலாஜி, வெங்கடேஷ், பார்தீப் கார்க், ஸ்வப்னில்

ஸ்டார்ட்அப்

காற்றிலிருந்து நீரைத் தயாரித்து விற்பனை செய்யும் பெங்களூரு ஸ்டார்ட்அப்!

ஸ்டார்ட்அப்

Published:Updated:
கோவிந்த பாலாஜி, வெங்கடேஷ், பார்தீப் கார்க், ஸ்வப்னில்
பிரீமியம் ஸ்டோரி
கோவிந்த பாலாஜி, வெங்கடேஷ், பார்தீப் கார்க், ஸ்வப்னில்

’’காற்றில் இருந்து தண்ணீர் தயாரிப்பு..! அட... என்று சொல்ல வைக்கிறதல்லவா இந்த ஐடியா? பெங்களூரை மையமாகக் கொண்டு செயல்படும் ‘உரவு லேப்ஸ்’ (Uravu Labs) இதைச் செய்து வருகிறது. இந்த நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு அனிகட் கேப்பிடல் உள்ளிட்ட சில முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்டியது.

மலையாளத்தில் உரவு என்றால், ஊற்று என அர்த்தம். எனவேதான், இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள். நான்கு பேர் தொடங்கிய இந்த நிறுவனத் தில் தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்த பாலாஜிக்கு முக்கிய மான பங்கு உண்டு. அவருடன் உரவு நிறுவனம் குறித்துப் பேசினோம்.

‘‘வெங்கடேஷும், ஸ்வப்னிலும் கோழிக் கோட்டில் உள்ள என்.ஐ.டி- யில் படித்தனர். 2015-16-ம் காலகட்டத்தில் வறட்சி இருந்தது. அப்போது கல்லூரி புராஜெக்டாகக் காற்றில் இருந்து தண்ணீர் தயாரிக்கும் மெஷினைத் தயாரிக்கும் திட்டத்தை வைத்தனர். Air water generator மூலமாகக் காற்றில் இருந்து நீரை உருவாக்கும் திட்டத்தைக் கண்டறிந்தனர். இதற்கு அதிக மின்சாரம் தேவைப்பட்டது. சர்வதேச அளவில் பல நிறுவனங்கள் இருந்தாலும் அதற்கு மாற்று ஒன்றைக் கண்டறியும் நடவடிக்கையில் இருந்தனர்.

அப்போது Xprice என்னும் சர்வதேச அளவிலான போட்டி நடந்தது. அதில் மரபுசாரா எரிசக்தியின் மூலம் நீரை எப்படி தயாரிக்க முடியும் என்பதுதான் போட்டி. 2018-ம் ஆண்டு நடந்த இந்தப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட நிறு வனங்கள் போட்டியிட்டன. இதில் இவர்களின் புரா ஜெக்ட் முதல் ஐந்து இடத் துக்குள் வந்தது.

கோவிந்த பாலாஜி, வெங்கடேஷ், பார்தீப் கார்க், ஸ்வப்னில்
கோவிந்த பாலாஜி, வெங்கடேஷ், பார்தீப் கார்க், ஸ்வப்னில்

எப்படி தயாரிக்கிறோம்?

Air water generator மூலம் அதிக மின்சாரம் தேவைப் படும். ஆனால், நாங்கள் வேறு டெக்னாலஜியில் இதைத் தயாரிக்கிறோம். காற்றில் இருக்கும் ஈரப்பதத்தைத் தனியாக எடுத்து, அதை சூடாக்கி மீண்டும் அழுத் தத்துக்கு உள்ளாக்கும்போது நீர் கிடைக்கும். இதில் அனைத்தும் மரபுசாரா எரிசக்தி மூலமாகவே நடக்கிறது.

ஆரம்பத்தில் தினமும் 20 லிட்டர் தயாரிக்கும் மெஷினைத் தயார் செய்தோம். அதை விரிவு படுத்தத் திட்டமிட்டபோது தான் நானும் பார்தீப் கார்கும் இணை நிறுவனர்களாக இணைந்தோம்.

2019-ம் ஆண்டு தொடங்கி 2021-ம் ஆண்டு செப்டம்பர் வரையிலும் எந்த நிதியும் திரட்டவில்லை. சர்வதேச அளவில் பல போட்டிகளில் கலந்துகொண்டு, அதில் கிடைக்கும் நிதியை வைத்து நிறுவனத்தை விரிவாக்கினோம். அதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து நிதி திரட்டி வருகிறோம். இந்த நிதியை புராடக்ட் மேம்பாட்டுக்கு செலவு செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். தற்போது 40 நபர்கள் வேலை பார்க்கிறார்கள்; விரைவில் 60-ஆக மாறும்.

விற்பனை எப்படி?

நிலத்தடி நீரை உறிஞ்சினால், அதன் பிறகு நீர் அங்கு இருக்காது அல்லது குறையும். ஆனால், காற்று அப்படியில்லை. வெட்ட வெளியில் காற்றை எடுத்தாலும் வெற்றிடம் உருவாகாது. நீர்நிலைகள், ஆறு, கடல் என நீர் ஆதாரங்கள் இருப்பதால், காற்று குறையாது. அந்தக் காற்றில் இருக்கும் ஈரப்பத்தை வைத்து நீர் தயாரிக்கிறோம். நாங்கள் தயாரிக்கும் நீரில் சுவை மற்றும் வாசனை எதுவும் இருக்காது. அதேபோல, எந்த மினரல்ஸும் இருக்காது. ஆனால், தயாரித்த பிறகு மினரல்ஸ் சேர்ப்போம்.

நாங்கள் தயாரிக்கும் தண்ணீரை இரு வகைகளில் விற்பனை செய்ய இருக்கிறோம். தற்போது எங்களிடம் ஒரு நாளைக்கு 5லி/10லி/20 லிட்டர் எனத் தயாரிக்கும் மெஷின்கள் உள்ளன. அடுத்து 2,000 லிட்டர் தயாரிகும் மெஷினை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறோம். சிலருக்கு மெஷின் தேவைப்படும். சில கட்டுமான நிறுவனங்கள் வீடு கட்டும்போதே எங்களுடைய மெஷினை வைத்துவிடும். சில நிறுவனங்களுக்கு குறிப்பாக, குளிர்பானம் மற்றும் பியர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நீர் மட்டும்தான் தேவை. அவர்களுக்கு மெஷின் தேவைப்படாது. அதுபோன்ற சமயங்களில் ஒரு லிட்டர் இவ்வளவு ரூபாய் என விற்பனை செய்ய இருக்கிறோம்.

தற்போது இந்தியா மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் பல நாடுகளிலும் சோதனையைத் தொடங்கி இருக்கிறோம். 1 லிட்டர், 2 லிட்டர் என ரீடெய்லுக்கு செல்வது பற்றி இன்னும் யோசிக்கவில்லை’’ என்று பேசி முடித்தார் கோவிந்த பாலாஜி.

நம் நாட்டில் அதிக மழைப்பொழிவு இருப்பதால், இது தேவை இல்லாத யோசனை போலத் தோன்றும். ஆனால், எதிர்காலத்துக்குத் தேவையான ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை!