Published:Updated:

`வாடிக்கையாளர் சேவையில் குறைபாடா.... டிஜிட்டல் ஆப் பயன்படுத்துங்கள்' - ஏர்டெல் வேண்டுகோள்!

ஏர்டெல்
ஏர்டெல் ( vikatan )

தங்களது ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் (Airtel Thanks App) மூலமாக, வாடிக்கையாளர்களின் மொபைல்போன், வைஃபை மற்றும் டிஜிட்டல் டிவி தொடர்பான சேவைகளைப் பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் airtel.in என்ற ஏர்டெல் இணையதளத்தையும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவெங்கும் தொலைத்தொடர்புச்சேவையை வழங்கிவரும் ஏர்டெல் நிறுவனம், கொரோனா பாதுகாப்பு காரணமாக தங்களது வாடிக்கையாளர்கள் மையங்களில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது. இதன்காரணமாக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்வதற்கான காத்திருப்பு நேரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், சிரமத்தைப் பொறுத்துக்கொள்ளுமாறும் ஏர்டெல் நிறுவனத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குறுஞ்செய்தி மற்றும் ட்விட்டர் செய்திமூலம் வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளது.

வாடிக்கையாளர் மையங்களை நாடுவதற்கு மாற்று யோசனையாக, தங்களது டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. தங்களது ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் (Airtel Thanks App) மூலமாக, வாடிக்கையாளர்களின் மொபைல்போன், வைஃபை மற்றும் டிஜிட்டல் டிவி தொடர்பான சேவைகளைப் பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் airtel.in என்ற ஏர்டெல் இணையதளத்தையும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் நேரில் சென்று ஏர்டெல் கனெக்சன் வழங்கும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான அனைத்து உபகரணங்களையும், சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அதுகுறித்த விழிப்புணர்வும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏர்டெல்
ஏர்டெல்
vikatan

கொரோனா அச்சம் காரணமாக, பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தியுள்ளன. வீட்டிலிருந்து பணியாற்றுபவர்களுக்கு இணையப் பயன்பாடு கூடுதலாகத் தேவைப்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு, டெஸ்க்டாப், லேப்டாப் மற்றும் மொபைல்போன் மூலமாக, ஏர்டெல் இணைய சேவையை நன்முறையில் பயன்படுத்தும் முறையை விளக்குவதற்கான வீடியோவையும் ஏர்டெல் வெளியிட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு