Published:Updated:

ரஜினி, கமல், ஸ்டாலின் Vs எடப்பாடி... எந்த 'பிராண்ட்' அபாரம்? - அம்பி பரமேஸ்வரன் பதில்!

அம்பி பரமேஸ்வரன்
அம்பி பரமேஸ்வரன்

'கூட்ஸ்' எனப்படும் பொருள்கள், 'சர்வீஸ்' என்று சொல்லப்படும் சேவைகள் மட்டுமல்ல... 'பர்சனாலிட்டீஸ்' எனப்படும் மனிதர்களும் பிராண்டுதான். உங்கள் பார்வையில், தமிழகத்தில் குறுகியகாலத்தில் பெரிய வளர்ச்சி பெற்ற பிராண்ட் எது?

இந்தியாவின் புகழ்பெற்ற 'பிராண்ட் உருவாக்க வித்தகர்' (Brand Strategist) அம்பி பரமேஸ்வரன். சென்னை ஐ.ஐ.டி-யில் பொறியியலும், ஐ.ஐ.எம் கொல்கத்தாவில் எம்.பி.ஏ-வும் படித்தவர். அமுல் முதல் டைஜின் மற்றும் ஸ்டெப்சில்ஸ் வரை... ஐ.சி.ஐ.சி.ஐ முதல் ஜீ தொலைக்காட்சி மற்றும் டாடா இண்டிகா வரை... பல பிராண்டுகளின் உருவாக்கத்தில் பங்கெடுத்தவர்.

விளம்பர உலகில் நாற்பது ஆண்டுகால அனுபவம்கொண்ட அவர், மெட்ராஸ் மேனேஜ்மேன்ட் அசோசியேஷன் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்தார். அப்போது அவரை சந்தித்துப் பேசினோம். அவர் நமக்களித்த சிறப்புப் பேட்டி...

பிராண்டுகளுக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறதா?

"நன்கு அறியப்பட்ட நிறுவனங்களின் வலைதளங்களைவிட பெரிதாக எந்தப் பின்புலமும் இல்லாத, சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட வலைதளங்களின் வளர்ச்சி குறிப்பிடத்தகுந்த அளவு இருப்பதை கவனித்திருப்பீர்கள். 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு பிரபலமான பிராண்டின் போன் வாங்குவதைவிட, அதேபோன்ற ஒரு கைப்பேசி, அதைவிடக் குறைந்த விலையில் கிடைப்பதால் சீனாவின் கைப்பேசிகள் மீதுள்ள மோகம் அதிகரித்து இருப்பதையும் கவனித்திருப்பீர்கள்.

எல்லோரையும்விட மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்ட பிராண்ட் என்றால், அது நரேந்திர மோடி என்ற பிராண்ட்தான்.

தொழில் புரட்சியை தமிழகம் பயன்படுத்திக்கொண்ட அளவுக்குத் தகவல் தொழில்நுட்பப் புரட்சியைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

'நம் பிராண்டுக்கு நல்ல பெயர் இருக்கிறது' என்று சும்மா உட்கார்ந்திருந்தால் வேலைக்கு ஆகாது. புதிது புதிதாகத் தொழில்நுட்பங்களையும் அம்சங்களையும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

ஐபோனின் வெற்றிக்குக் காரணம், வெறும் ஐபோன் மட்டுமல்ல... காலத்துக்கு ஏற்றவாறு ஏர் பாட், ஆப் ஸ்டோர், டச் ஸ்கிரீன், சிங்கிள் பின்... என்று அவர்கள் புதிய விஷயங்களைச் சேர்த்துக்கொண்டே இருப்பதுதான். அதனால், 'மற்ற போன்களைவிட சற்றுக் கூடுதலாகப் பணம் செலவழித்தாலும் பரவாயில்லை' என்று வாடிக்கையாளர்கள் வாங்க ஆரம்பித்தார்கள். ஆகையால் பிராண்ட் மட்டும் போதாது. கூடுதலாக சரக்கும் வேண்டும்."

'கூட்ஸ்' எனப்படும் பொருள்கள், 'சர்வீஸ்' என்று சொல்லப்படும் சேவைகள் மட்டுமல்ல... 'பர்சனாலிட்டீஸ்' எனப்படும் மனிதர்களும் பிராண்டுதான். உங்கள் பார்வையில், தமிழகத்தில் குறுகியகாலத்தில் பெரிய வளர்ச்சி பெற்ற பிராண்ட் எது?

ரஜினி, கமல், ஸ்டாலின் Vs எடப்பாடி... எந்த 'பிராண்ட்' அபாரம்?  - அம்பி பரமேஸ்வரன் பதில்!

"ரஜினி, கமல், ஸ்டாலின் போன்ற பிராண்டுகள் ரொம்ப நாள்களாக இருக்கின்றன. ஆனால், மிகக் குறுகியகாலத்தில் அபாரமான வளர்ச்சியடைந்த பிராண்ட் ஒன்று உண்டு என்றால், அது எடப்பாடி பழனிசாமிதான். மன்மோகன்சிங் என்ற பிராண்ட்கூட இப்படி திடீரென வளர்ச்சி பெற்றதுதான். ஆனால், இவர்கள் எல்லோரையும்விட மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்ட பிராண்ட் என்றால், அது நரேந்திர மோடி என்ற பிராண்ட்தான்.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், ஒருவர் எந்த நாற்காலியில் உட்காருகிறாரோ... அந்தப் பதவியே அவருக்கு ஒரு பிராண்ட் வேல்யூவை உருவாக்கிவிடுகிறது என்பதுதான்."

> நகரங்களும் மாநிலங்களும்கூட எப்போதும் உலகத்தின் பார்வையில் பிராண்டுகளாகவே பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு/சென்னை என்ற பிராண்ட் எந்த நிலையில் இருக்கிறது?

> வியாபார மந்தநிலை நிலவும் இது போன்ற காலத்தில் சிறு, குறு நிறுவனங்களும், சிறு வணிக நிறுவனங்களும் என்ன மாதிரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?

> மந்தநிலை நீங்கி பொருளாதாரம் சீரடையும்போது இப்படி எல்லாச் செலவுகளையும் குறைக்கும் கம்பெனிகளால் உடனடியாக மீண்டெழ முடியாது. அப்படியென்றால் எந்த மாதிரி கம்பெனிகள் உடனடியாக மீண்டெழும்?

- இந்தக் கேள்விகளுக்கு அம்பி பரமேஸ்வரன் அளித்த விரிவான பதில்களுடன் கூடிய சிறப்புப் பேட்டியை நாணயம் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > பிராண்ட் வேல்யூ உருவாகும் சூட்சுமம்! - ரகசியம் சொல்லும் வித்தகர் https://www.vikatan.com/business/news/special-interview-with-ambi-parameswaran

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு