Published:Updated:

தெரியாத தொழிலில் இறங்கி ஜெயிக்க வைத்த ‘ஐ கேன்’ மந்திரம்!

அம்புஜா
பிரீமியம் ஸ்டோரி
அம்புஜா

நிறுவனம்

தெரியாத தொழிலில் இறங்கி ஜெயிக்க வைத்த ‘ஐ கேன்’ மந்திரம்!

நிறுவனம்

Published:Updated:
அம்புஜா
பிரீமியம் ஸ்டோரி
அம்புஜா

ஏறக்குறைய 48,000 டீலர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள்; 31 மில்லியன் டன் உற்பத்தித் திறன்; ஆறு ஒருங் கிணைந்த தொழிற்சாலைகள்; நான்கு பிரத்யேக துறைமுகங்கள்... இவையெல்லாம் அம்புஜா சிமென்ட்ஸின் 40 ஆண்டுக் கால வளர்ச்சியின் சாதனைகள்.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

சிமென்ட் பற்றி அல்லது அதன் தயாரிப்பு பற்றி அதிக விவரம் தெரியாத இரண்டு வணிகர்களான நரோத் தம் சேக்சாரியாவும் (Narrotam Sekhsaria), சுரேஷ் நியோடியாவும் (Suresh Neotia) சேர்ந்து ஆரம்பித்த நிறுவனம்தான் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனம். அம்புஜா நிறுவனத்தைத் தொடங்கி ஜெயித்த கதை பற்றி `தி அம்புஜா ஸ்டோரி’ என்கிற பெயரில் தந்திருக்கிறார் நரோத்தம்.

தெரியாத தொழிலில் இறங்கி
ஜெயிக்க வைத்த ‘ஐ கேன்’ மந்திரம்!

இந்தப் புத்தகத்தை எழுதியிருக் கும் நரோத்தம், ஏ.சி.சி லிமிடெட், அம்புஜா சிமென்ட்ஸ், அம்புஜா சிமென்ட்ஸ் பவுண்டேஷனின் தலைவராக இருந்தவர். அம்புஜாவை ஆரம்பிக்கும் முன் அவர் இருந்த நிலையைப் பற்றி இப்படிச் சொல்கிறார். ‘`எனக்கு சிமென்ட் குறித்து எந்தவித அறிவோ, ஞானமோ இல்லை. நான் என் வாழ்க்கையில் ஒரு சிமென்ட் தொழிற்சாலையைக்கூட பார்த்ததில்லை’’ எனச் சொன்னது ஆச்சர்யம்!

இவருடைய நண்பர் ஒருவர் இவரிடம் உத்தரப்பிரதேசத்தில் சிமென்ட் தொழிற்சாலை ஆரம்பிக்கும்படி யோசனை சொல்கிறார். இவரும் சரி என்று லக்னோ நோக்கி பயணிக்க, அப்போது அங்கே ஐ.டி.பி.ஐ சேர்மனாக இருந்த என்.என்.பை என்பவரை ஹோட்டல் லாபியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க, அந்தச் சந்திப்பு அவரை குஜராத் நோக்கி பயணிக்க வைக்கிறது.

அந்தக் காலகட்டத்தில் குஜராத் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்ப ரேஷனின் சேர்மனாக இருந்த ஹெச்.கே.கான், நரோத்தமின் முன்மொழிவைத் திறந்த மனதுடன் வரவேற்கிறார். ஏற்கெனவே சிமென்ட் உற்பத்தி செய்ய அனுமதி பெற்றிருந்த அம்புஜா சிமென்ட் என்கிற நிறுவனத்தை வாங்கி, குஜராத் அம்புஜா என்கிற பெயரில் தனது தொழிற்சாலையை அமைத்தார் நரோத்தம். இதற்குத் தன்னாலான அனைத்து உதவிகளையும் கான் செய்து கொடுத்தார். அதன்பின் அவரே அம்புஜா சிமென்டின் முதல் சேர்மனாக நியமிக்கப்பட்டார்.

நரோத்தம் மும்பையில் கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்தபோது தங்கியிருந்த இடத்தில் பஜாஜ் குடும்பத்தினரும் வசித்து வந்தனர். அப்போதே அவர் ராகுல் பஜாஜ் போல தானும் ஒரு தொழிலதிபதிராக வேண்டு மென்று கனவு காண ஆரம்பித்தார். தன் குடும்பத்தினர் செய்து வந்த பருத்தி விநியோகத் தொழிலை விரிவுபடுத்த நினைத்தார். ஆனால், 1970-களில் பின்பகுதிகளில் டெக்ஸ்டைல்ஸ் மில்கள் பல பிரச்னைகளுக்கு உள்ளாயிற்று. எனவே, இவர் படித்த கெமிக்கல் இன்ஜினீய ரிங்கின் துணையோடு மருந்து தயாரிக்கும் இரண்டு நிறுவனங்களையும், சேக்சாரியா கெமிக்கல்ஸ் என்கிற நிறுவனத்தையும் ஆரம்பித்தார். அது ஓரளவுக்கு வெற்றி பெற்றது. ஆனால், அதற்குப் பிறகு விதி அவரை குஜராத்தை நோக்கி அழைத்துச் செல்ல, அங்கே அவர் சிமென்ட் தொழிற்சாலையை நிர்மாணித்தார்.

தெரியாத தொழிலில் இறங்கி
ஜெயிக்க வைத்த ‘ஐ கேன்’ மந்திரம்!

இந்தப் புத்தகத்தில் இவர் சொல்லும் முக்கியமான செய்தி, `குழுவாக வேலை செய்வது’தான். இவருடைய தொழில் சாம்ராஜ் யத்தின் வெற்றிக்குக் காரணமாக அவர் தன்னை முன்நிறுத்திக்கொள்ளவில்லை, மாறாகத் தன் குழுவைத்தான் முன்நிறுத்தினார். அதுபோல, பிசினஸ் நெட்வொர்க் எந்த அளவுக்கு ஒரு தொழிலின் வளர்ச்சிக்கு உதவும் என்பதையும் பல உதாரணங்கள் மற்றும் அனுபவங்கள் மூலம் பகிர்ந்திருக்கிறார். தான் சார்ந்த மார்வாடி சமூகத்தின் `பனியா புத்தி’ அதாவது, வணிகர்களுக்கே உரித்தான புத்தி எந்த அளவுக்கு உபயோகமாக இருந்தது என்பதையும் கூறியிருக்கிறார்.

டாடா நானோ கார் தயாரிப்புத் திட்டம் எதிர்கொண்ட சிங்கூர் பிரச்னை போல குஜராத் அம்புஜாவும் தன் தொழிற்சாலை அமையவிருக்கும் இடம் குறித்த பிரச்னையை எதிர்கொண்டதால், ஒரு மாற்று இடத்தைத் தெரிவு செய்யும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளானது. ஆனால், அது கடலுக்கு அருகில் இருந்ததால் அதுவே சிறந்த இடமாக அமைந்தது.

இந்த நிறுவனத்தின் தாரக மந்திரமான `I CAN’ என்கிற உணர்வு இன்னும் இதை உந்திச் செல்கிறது. 2005-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் 61% பங்குகளை ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஹோல்சிம் வாங்கியது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அதை வாங்கியிருக்கிறார் அதானி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism