Published:Updated:

ஐ.பி.ஓ வெளியிட்ட UTI AMC... யார் முதலீடு செய்யலாம்?

யூ.டி.ஐ ஏ.எம்.சி
யூ.டி.ஐ ஏ.எம்.சி

கடந்த காலங்களில் இந்நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்டுகள் கொடுத்த வருமானத்தின் அடிப்படையிலும், நிறுவனத்தின் முதலீட்டு நடவடிக்கைகள் அடிப்படையிலும் முதலீட்டாளர்கள் மத்தியில், இந்த நிறுவனத்தின் மீது மதிப்பும் மரியாதையும் இருக்கிறது.

நிதித்துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்ட யூ.டி.ஐ ஏ.எம்.சி நிறுவனம் இன்று ஐ.பி.ஓ வெளியிட்டுள்ளது. அக்டோபர் 1-ம் தேதி இந்தப் பங்கு வெளியீடு நிறைவு பெறுகிறது. பங்கு ஒன்றின் விலை 552 - 554 ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

யூ.டி.ஐ ஏ.எம்.சி நிறுவனம், இந்தப் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 3,000 கோடி ரூபாய் நிதி திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த வெளியீட்டில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா மற்றும் டி ரோவ் பிரைஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள், யூ.டி.ஐ ஏ.எம்.சி-யில் கொண்டுள்ள 3,89,87,081 பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

ஐ.பி.ஓ
ஐ.பி.ஓ

இந்தப் பங்கு வெளியீட்டில் யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு சுமார் இரண்டு லட்சம் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அளிக்கப்பட்ட பங்கு மூலதனத்தில் குறைந்தபட்சம் 30.75% பங்குகள் பொதுமக்களுக்கு வெளியிடப்பட உள்ளன. இந்தப் பங்குகள் பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ-யில் பட்டியலிடப்பட உள்ளன.

ஐ.பி.ஓ முதலீடு... லாபம் பார்க்க ஆசையா..? - கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

இந்த ஐ.பி.ஓ வெளியீடு குறித்தும், இதில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாமா என்பது குறித்தும் பங்குச்சந்தை நிபுணர், ரெஜி தாமஸிடம் பேசினோம், "மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் நான்காவது நிறுவனமாக யூ.டி.ஐ ஏ.எம்.சி நிறுவனம் ஐ.பி.ஓ-வுக்கு வருகிறது. இது வரவேற்கத்தக்க விஷயம். எல்.ஐ.சி ஐ.பி.ஓ லிஸ்ட் ஆனால், எப்படியோ அப்படித்தான் இதுவும்.

கடந்த காலங்களில் இந்நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்டுகள் கொடுத்த வருமானத்தின் அடிப்படையிலும், நிறுவனத்தின் முதலீட்டு நடவடிக்கைகள் அடிப்படையிலும் முதலீட்டாளர்கள் மத்தியில், இந்த நிறுவனத்தின் மீது மதிப்பும் மரியாதையும் இருக்கிறது.

ரெஜி தாமஸ்
ரெஜி தாமஸ்
vikatan

அதுமட்டுமல்லாமல், கடந்த சில வருடங்களாகவே, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மிகப்பெரிய வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் 7 லட்சம் முதல்ல் 8 லட்சம் பேர் வரை முதலீட்டாளர்கள் கணக்கு ஆரம்பித்து வருகிறார்கள். வெளிநாட்டு முதலீடுகளும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் ஈர்க்கப்படுகின்றன. எதிர்வரும் காலங்களிலும் இந்நிலை தொடரும் என்பதால், யூ.டி.ஐ ஏ.எம்.சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஐ.பி.ஓ-வில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். ஆனால் நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் (குறைந்தபட்சம் 2 - 3 ஆண்டுகள்) முதலீடு செய்வது நல்லது" என்றார்.

மியூச்சுவல்  ஃபண்ட் மூலம் போர்ட்ஃபோலியோ! - உருவாக்குவது எப்படி?
அடுத்த கட்டுரைக்கு