Published:Updated:

ரிமோட் வொர்க்கிங்... நல்லதா கெட்டதா..? - நேர்மையாக விமர்சித்த சத்ய நாதெள்ளா..!

ரிமோட் வொர்க்கிங்
பிரீமியம் ஸ்டோரி
ரிமோட் வொர்க்கிங்

ரிமோட் வொர்க்கிங்கில் உற்பத்தித்திறன் ஆச்சர்யமூட்டும் விதமாக 20% அதிகரித்துள்ளது.

ரிமோட் வொர்க்கிங்... நல்லதா கெட்டதா..? - நேர்மையாக விமர்சித்த சத்ய நாதெள்ளா..!

ரிமோட் வொர்க்கிங்கில் உற்பத்தித்திறன் ஆச்சர்யமூட்டும் விதமாக 20% அதிகரித்துள்ளது.

Published:Updated:
ரிமோட் வொர்க்கிங்
பிரீமியம் ஸ்டோரி
ரிமோட் வொர்க்கிங்
ம் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது கொரோனா. குறிப்பாக, பணிச்சூழலில் இதன் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது.

வீட்டிலிருந்தே பணிபுரியும் வொர்க் ஃப்ரம் ஹோம் கலாசாரம் இதற்கு முன் ஐ.டி துறைகளில் மட்டுமே சாத்தியமாக இருந்தது. ஆனால், தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் இந்த முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ரிமோட் வொர்க்கிங்
ரிமோட் வொர்க்கிங்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடக்கத்தில் வீட்டிலிருந்து பணிபுரிவதை மகிழ்ச்சியாகவும், சில தடுமாற்றங்களுடனும் எதிர்கொண்ட ஊழியர்கள், குறுகிய காலத்திலேயே அதற்குப் பழக்கப்பட்டுப்போனார்கள். அதேநேரம், ஒரே அறையில் நெடுநேரம் கணினியுடன் பணியாற்றுவதால் ஏற்படும் சோர்வைப் போக்க வழியில்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

யோசிக்கவைத்த சத்ய நாதெள்ளா..!

கொரோனா பாதிப்பு பரவ ஆரம்பித்ததும், உடனடியாகத் தன் ஊழியர்களை வொர்க் ஃப்ரம் ஹோம் செய்யச் சொன்ன நிறுவனங்களில் மைக்ரோ சாஃப்ட்டும் ஒன்று. கடந்த இரண்டு மாதங்களில் அவர்களின் உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளபோதும் `அது நீண்டகால நோக்கில் ஊழியர்களின் நலனுக்கு உகந்ததல்ல’ என்ற கருத்தைத் தெரிவித்து, அனைவரையும் சற்று யோசிக்க வைத்திருக்கிறார் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சத்ய நாதெள்ளா. அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“கொரோனாநோய்த் தொற்று உருவானபோது ஊழியர்களைப் பாதுகாப்பதே முதலில் செய்யப்பட வேண்டிய விஷயமாக இருந்தது. அவர்கள் வீட்டிலிருந்தே எந்தத் தடையுமின்றி பணியாற்றும் சூழ்நிலையை இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் நமக்கு வழங்கியிருக்கிறது. இப்படிச் செயல்படுவது மிகவும் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால், இது ஒரு சரியான மாற்றத்துக்கான நடவடிக்கை அல்ல. இதில் கிடைக்கும் அதிகப்படியான உற்பத்தி எந்த இழப்பில் உருவாகிறது என்பதையும் சிந்திக்க வேண்டும்.

ரிமோட் வொர்க்கிங்
ரிமோட் வொர்க்கிங்

அலுவலகம் சார்ந்த கூட்டங்களை இணையத்தில் நடத்தினாலும், என்னைப் பொறுத்தவரை நேரடியான சந்திப்புகள் முக்கியமானவை. கூட்டம் தொடங்குவதற்கு முன்னரும், முடிந்த பின்னரும் என் அருகில் அமர்ந்திருக்கும் மனிதருடன் நான் செலவழிக்கும் அந்த ஓரிரு நிமிடங்கள் விலைமதிப் பில்லாதவை. அதில் நான் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கும்” என்று வொர்க் ஃப்ரம் ஹோம் குறித்த தனது கருத்துகளைத் தெளிவாகவும் நேர்மையாகவும் சொல்லியிருக்கிறார் சத்ய நாதெள்ளா.

சத்ய நாதெள்ளாவின் கருத்து, அடிப்படையில் ஒரு விஷயத்தை முன்வைக்கிறது. உற்பத்தி தடைப்படாமல் இருக்க வேண்டும் என்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு ஊழியர்களின் நலனும் முக்கியம் என்பது. இது பலரையும் புதிய கோணத்தில் சிந்திக்கவைத்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனித இயல்புக்கு எதிரானது..!

வொர்க் ஃபரம் ஹோம் சூழல் ஊழியர்களின் மனநிலைக்கு உண்மையில் ஆபத்தானதா என்பது குறித்து உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்திடம் கேட்டோம்.

“மனிதர்கள் சமூகவயப்பட்டவர்கள். இந்த கொரோனா காலத்தில் நாம் வேறு வழியின்றி இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் சூழலுக்கு மாறியிருக்கிறோம். எனவே, சமூகத்திலிருந்து விலகியிருப்பது என்பது மனித இயல்புக்கு மாறானது.

சித்ரா அரவிந்த், சுரேஷ் சம்பந்தம்
சித்ரா அரவிந்த், சுரேஷ் சம்பந்தம்

தொடர்ந்து எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் கணினியையோ, வேறு ஒரு கேட்ஜெட்டையோ பார்த்துக்கொண்டு வேறு மனிதர்களோடு தொடர்பில்லாமல் இருப்பது மனிதர்கள் மனதை திருப்திப்படுத்தாது. என்னதான் போனில் பேசினாலும், நேரடியாகச் சந்தித்து உரையாடுவதுபோல ஆகாது. வேலை நிமித்தமாகத் தொடர்ந்து இதைச் செய்யும்போது நமக்குள் ஓர் அழுத்தம் உருவாவது இயற்கை.

`நாம் வேலைக்குச் செல்வது சம்பாதிக்கத்தான்’ என்ற அபிப்ராயமே பொதுவாகப் பலருக்கும் இருக்கிறது. ஆனால், அதற்காக மட்டும் நாம் வேலைக்குச் செல்வதில்லை. ஒவ்வொருவருக்கும் ஓர் உளவியல் தேவை, சமூகத் தேவை என்றெல்லாம் இருக்கின்றன. அதை நிறைவேற்றிக் கொள்ளத்தான் நாம் அலுவலகம் செல்கிறோம். வேலை நேரத்துக்கு ஊடாக நாம் பிறருடன் செலவழிக்கும் நேரம் மிகவும் முக்கியமானது. டீ பிரேக், லஞ்ச் டைம் இவற்றிலெல்லாம் ஒரு ரிலீஃப் இருக்கும். அதற்கான வழி எதுவும் ரிமோட் வொர்க்கிங் முறையில் இல்லை.

வீட்டிலிருந்துகொண்டு ஒரு தோட்டம் வளர்த்துப் பராமரிப்பவருக்கு இந்தச் சிக்கல் இல்லை. அவற்றுடன் அவருக்கு ஓர் உணர்வுபூர்வமான இணைப்பு ஏற்படுகிறது. ஆனால், கேட்ஜெட்களுடன் நேரம் செலவழிப்பவர் களுக்கு அது கிடைப்பதில்லை. மேலும், ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுவதன் மூலம் நிச்சயம் நமக்கு உடல் அளவிலும் பிரச்னைகள் தோன்ற வாய்ப்பிருக்கிறது.

சத்ய நாதெள்ளா
சத்ய நாதெள்ளா

எனவே, ரிமோட் வொர்க்கிங் என்பது தற்காலிகத் தீர்வாக இருக்கலாமே தவிர, அதை நிரந்தரத் தீர்வாகக் கருத முடியாது.” அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் சித்ரா அரவிந்த்.

மனிதத் தொடர்பு இல்லாத உலகம் ஆபத்தானது..!

இது குறித்து கிஷ்ஃப்ளோ நிறுவனத்தின் சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தத்துடன் பேசினோம்.

“வொர்க் ஃப்ரம் ஹோம், ரிமோட் வொர்கிங் என்று இரண்டு முறைகள் உள்ளன. இதற்கு முன்னர் அலுவலகத்தில் யாரேனும் ஒரு சிலர் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். அதை `வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்போம். இப்போது ஒட்டுமொத்த அலுவலகமும் வீட்டிலிருந்தே வேலை பார்க்க வேண்டிய சூழல். இதை `ரிமோட் வொர்க்கிங்’ என்கிறோம். இந்த ரிமோட் வொர்க்கிங் நடைமுறைப்படுத்தப்பட்டபோது நிச்சயம் உற்பத்தித்திறன் பாதிக்கப்படும் என்று நினைத்தோம். ஆனால், ஆச்சர்யமூட்டும் விதமாக அது 20% அதிகரித்துள்ளது.

ரிமோட் வொர்க்கிங்கில் காலையும் மாலையும் மீட்டிங் நடத்துகிறோம். அவை மிகவும் பயனுள்ளதாக மாறின. அலுவலகத்தில் கிடைக்கும் இடைவேளைகளைக்கூட வீட்டில் எடுக்க முடியாத சூழல். ஊரடங்கு காரணமாக வேறு எங்கும் போகவும் முடியாது என்பதால், ஊழியர்கள் தங்களின் கவனம் முழுவதையும் பணியிலேயே செலுத்துகிறார்கள் என்பதுதான் உண்மை. அதுதான் உற்பத்தி அதிகரிக்கக் காரணம்.

அதேவேளையில் மனிதர்கள் தொடர்பு இல்லாத உலகம் மிகவும் ஆபத்தானதுதான். பொதுவாக, அலுவலகம் என்பது நாம் கொஞ்சம் பொழுதுபோக்கவும், கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள்ளும் இடமாகவும் நம்மை அறியாமல் செயல்படுகிறது. அலுவலகத்திலிருக்கும் ஊழியர்களிடையே ஒரு நட்பு இருக்கிறது. அவர்களுடன் சேர்ந்து உணவருந்துவது, அவர்களுடன் வெளியே செல்வது, கதை பேசுவது என்று பலவிதமான செயல்பாடுகள் மூலம் அவர்கள் தங்களைக் கொஞ்சம் உற்சாகப்படுத்திக்கொள்வார்கள். இவற்றுக்கெல்லாம் வீட்டில் வழியே இல்லை.

ஊரடங்கு காலத்தில், எங்கள் நிறுவன ஊழியர்களின் மனநலனைப் பாதுகாக்க நாங்கள் நிறைய நடவடிக்கைகள் எடுத்தோம். குறிப்பாக, தினமும் யோகா வகுப்புகளை இணையம் மூலம் நடத்தினோம். ஆனால், `இவையெல்லாமே குறைந்தகாலத்துக்குச் சரிவருமே தவிர, நீண்டகாலத் தீர்வாக அமையாது’ என்னும் சத்ய நாதெள்ளாவின் கருத்து நூறு சதவிகிதம் ஏற்புடையதே” என்றார் சுரேஷ் சம்பந்தம்.

எல்லா விஷயங்களிலும் சாதகங்களும் பாதகங்களும் இருப்பதுபோல, ரிமோட் வொர்க்கிங்கிலும் இருக்கிறது. இந்த முறையைத் தொடர்ந்து பின்பற்றலாமா, வேண்டாமா என்பது குறித்து நிறுவனங்களும் ஊழியர்களும் கலந்து பேசி முடிவெடுப்பதே சரி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism