Published:Updated:

தலைமை மாறும் இரு முகங்கள்! - விப்ரோ, ஜெ.பி.மார்கன் மாற்றம் காணுமா?

 லியோ புரி, தியர்ரி டெலபோர்ட்
பிரீமியம் ஸ்டோரி
லியோ புரி, தியர்ரி டெலபோர்ட்

விப்ரோவின் சி.இ.ஓ பதவியை வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் வகிப்பது இதுவே முதன்முறை!

தலைமை மாறும் இரு முகங்கள்! - விப்ரோ, ஜெ.பி.மார்கன் மாற்றம் காணுமா?

விப்ரோவின் சி.இ.ஓ பதவியை வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் வகிப்பது இதுவே முதன்முறை!

Published:Updated:
 லியோ புரி, தியர்ரி டெலபோர்ட்
பிரீமியம் ஸ்டோரி
லியோ புரி, தியர்ரி டெலபோர்ட்
நிறுவனங்களின் வளர்ச்சி மட்டுப்படும்போது புதியவர்களைத் தலைமைப் பதவிக்குக் கொண்டுவருவது, உலகம் முழுக்கவுள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்தும் மேனேஜ்மென்ட் உத்தி. இந்த உத்தியைத்தான் ஐ.டி நிறுவனமான விப்ரோவும், சர்வதேச முதலீட்டு நிறுவனமான ஜெ.பி.மார்கனும் மேற்கொள்ளவிருக்கின்றன.

இந்த இரு நிறுவனங்களிலும் தலைமைக்கு வரப்போகிறவர்கள் யார், ஏன் இந்த மாற்றம், தலைமைப் பதவியை ஏற்று வழிநடத்தவிருக்கும் இவர்கள் சந்திக்க வேண்டிய சவால்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

விப்ரோவில் அதிரடி மாற்றம்

கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் வனஸ்பதி தயாரிக்கத் தொடங்கிய நிறுவனம். பிறகு, மின்விளக்குகள் செய்யத் தொடங்கி, பிறகு கம்ப்யூட்டர் உற்பத்தி செய்ய ஆரம்பித்து, தற்போது இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிறுவனம் புதிய புதிய தொழில்களைச் செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து வெற்றி பெறவைத்ததில் இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்து வழிநடத்திய அஜிம் பிரேம்ஜிக்கு முக்கியப் பங்கு உண்டு. 75 வயதான அஜிம் பிரேம்ஜி கடந்த ஆண்டு விப்ரோவின் செயல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து விலக, அந்தப் பதவிக்கு ரிஷாத் பிரேம்ஜி (Rishad Premji) வந்தார்.

விப்ரோ
விப்ரோ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கிடையே நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் விப்ரோ நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டார் அபிதாலி நீமுச்வாலா (Abidali Neemuchwala). தகவல் தொழில்நுட்பத் துறையில் போட்டிகள் அதிகரித்துவந்த நிலையில், விப்ரோவின் லாபத்தை அதிகரிக்க எவ்வளவோ பாடுபட்டார் அவர். ஆனால், அவரால் ஓரளவுக்குமேல் அதைச் செய்ய முடியவில்லை. பிற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியைக் கண்டுவர, விப்ரோ கொஞ்சம் பின்தங்கியே இருந்தது. உதாரணமாக, கடந்த பத்து ஆண்டுகளில் டி.சி.எஸ் 13.3% வளர்ச்சியும், இன்ஃபோசிஸ் 10.3% வளர்ச்சியும் கண்டன. ஆனால், விப்ரோ கண்ட வளர்ச்சி 6.5% மட்டுமே.

விப்ரோவின் வளர்ச்சி அதிகரிக்காத நிலையில், அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தார் நீமுச்வாலா. கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தனது ராஜினாமா முடிவை அறிவித்த அவர், ஹெச்.சி.எல் நிறுவனத்தில் கூடிய விரைவில் இணையவிருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதிய சி.இ.ஓ டெலபோர்ட்.

நீமுச்வாலாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து விப்ரோவின் அடுத்த சி.இ.ஓ யார் என்ற கேள்வி எழுந்தது. உலக அளவில் பல முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ-க்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, கடைசியில் விப்ரோவின் புதிய சி.இ.ஓ-வாகத் தேர்வாகியிருக்கிறார் தியர்ரி டெலபோர்ட் (Thierry Delaporte). யார் இவர்?

 தியர்ரி டெலபோர்ட்
தியர்ரி டெலபோர்ட்

பிரான்ஸ் நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கேப்ஜெமினியில் 24 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் தியர்ரி டெலபோர்ட். கேப்ஜெமினியில் ஏற்கெனவே உயர் பொறுப்பு வகித்த சலில் பரேக்தான் (Salil Parekh) இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இப்போது இருக்கிறார். சலிலைத் தொடர்ந்து தியர்ரி டெலபோர்ட்டும் விப்ரோவின் சி.இ.ஓ-வாக மாறியிருக்கிறார். விப்ரோவின் சி.இ.ஓ பதவியை வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் வகிப்பது இதுவே முதன்முறை. தவிர, இந்தியாவைச் சேர்ந்த முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சி.இ.ஓ-வாக நியமிக்கப்படுவதும் இதுவே முதன்முறை.

சந்திக்க வேண்டிய சவால்கள்...

`வரும் ஜூலை 6-ம் தேதி முதல் விப்ரோவின் புதிய சி.இ.ஓ-வாகப் பதவியேற்கவிருக்கும் தியர்ரி டெலபோர்ட் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்கிறார்கள் இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பி.எஃப்.எஸ்.ஐ (Banking, Financial Services and Insurance) துறையின் மூலம் விப்ரோவுக்குக் கிடைத்த வருமானம் கடந்த ஆண்டில் 31 சதவிகிதமாக இருக்கிறது. நம் நாட்டைச் சேர்ந்த பிற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஏறக்குறைய இதே அளவு வளர்ச்சியைக் கண்டுவருகின்றன. இந்த வருமானத்தை இன்னும் கணிசமாக உயர்த்த வேண்டிய கட்டாயம் டெலபோர்ட்டுக்கு இருக்கிறது. பி.எஃப்.எஸ்.ஐ துறையின் வருமானத்தை மட்டுமல்ல, விப்ரோ நிறுவனத்தின் வருமானத்தையே உயர்த்த வேண்டிய கட்டாயம் டெலபோர்ட்டுக்கு இருக்கிறது. தற்போது விப்ரோ ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வளர்ச்சி கண்டுவருகிறது. இதை இரட்டை இலக்கத்தைத் தொடவைக்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, ஐரோப்பிய நாடுகளில் இந்த நிறுவனத்துக்கு பிசினஸை அதிகரிக்க வேண்டும்.

எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா?

`கேப்ஜெமினியில் இருந்தபோது, இந்தியாவின் பிசினஸை தலைமையேற்று நடத்தித் தந்தவர்தான் டெலபோர்ட். ஏற்கெனவே செய்த வேலையைத்தான் இனி அவர் செய்யப் போகிறார் என்பதால், அவருக்குப் பெரிய பிரச்னை எதுவும் இருக்காது’ என்கிறார்கள். புதிய சி.இ.ஓ-வின் தலைமையில் விப்ரோ நிறுவனம் வளர்ச்சியைக் காணட்டும்!

லியோ புரியின் அடுத்த அசைன்மென்ட்..!

மெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச முதலீட்டு வங்கியான ஜெ.பி. மார்கனின் புதிய தலைவராகத் தேர்வாகியிருக்கிறார் லியோ புரி (Leo Puri). இப்போது தலைவராக இருக்கும் கல்பனா மோர்பாரியாவின் பதவிக் காலம் இந்த ஆண்டு முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து ஜெ.பி. மார்கனின் அடுத்த தலைவராக அடுத்த ஆண்டு முதல் பதவியேற்கப் போகிறார் லியோ. ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஜெ.பி.மார்கனின் பணிகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு இனி லியோவுக்கு.

லியோ புரி
லியோ புரி

லியோவுக்கு இப்போது 58 வயது. நிதித்துறை தொடர்பான பணிகளில் 30 ஆண்டுக்கால அனுபவம் இவருக்கு உண்டு. உலகப் புகழ்பெற்ற பிசினஸ் ஆலோசனை நிறுவனமான மெக்கின்சியில் பணியாற்றியிருக்கிறார். சர்வதேச முதலீட்டு நிறுவனமான வார்பர்க் பின்கஸ் நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பை வகித்திருக்கிறார். இந்தியாவின் முதல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான யூ.டி.ஐ அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பையும் வகித்து, அந்த நிறுவனத்தை முன்னேற்றத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார் என்பதெல்லாம் லியோவின் மகுடத்தில் நல்முத்துக்களாக ஜொலிக்கின்றன.

கொல்கத்தாவில் பிறந்த லியோ, ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் ஆகிய இரு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு படித்தவர். சட்டப்படிப்பைப் படித்திருந்தாலும் லியோவால் சட்டத்துறையில் தொடர்ந்து பணியாற்ற இயலவில்லை. வருமானம் குறைவாகக் கிடைத்ததே இதற்குக் காரணம். ஆனாலும், பிசினஸ் தொடர்பான ஆலோசனைகளைத் தருவதில் லியோவின் திறமை அற்புதமாகப் பளிச்சிட்டது. எனவே, நிர்வாகத்தில் தனது திறமையைக் காட்டத் தொடங்கினார் லியோ.

எந்த விஷயத்தையும் பக்குவமாக எடுத்துச்சொல்லி, ஏற்றுக்கொள்ள வைப்பதில் லியோவுக்குத் தனிச் சாதுர்யம் உண்டு. மூலதன உதவியைக் கேட்டு, அவரைத் தேடி பல திட்டங்கள் வரும். அவற்றையெல்லாம் பொறுமையாகப் படித்துவிட்டு, அவற்றில் எது தேறும், எந்தத் திட்டத்தில் எப்படிப்பட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை நிதானமாக எடுத்துச் சொல்வாராம் லியோ. ஜெ.பி.மார்கன் நிறுவனத்தை இந்தியாவில் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய சவால் லியோவுக்கு இருக்கிறது. `இந்த அசைன்மென்ட்டிலும் அவர் சாதித்துக்காட்டுவார்’ என்கிறார்கள் அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism